என் மலர்
கிருஷ்ணகிரி
- பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அதேபகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது29), தமிரசன் (29), அசோக்குமார் (30), செவத்தன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோன்று பேரிகை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய திம்மராயன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
- வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டனர்.
- சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், காந்தி நகரைச் சேர்ந்த அப்துல் (வயது19), சாந்தி நகரைச் சேர்ந்த அமாரன் (20), கிருஷ்ணா காலனியைச் சேர்ந்த ஜிப்மர் (19), புதிய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சித்திக் (19) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று மத்திகிரி போலீசார் டைட்டன் டவுன்ஷிப் மற்றும் ஐ.டி. பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் பொதுமக்களுக்கும், போக்குவரத்து இடையூறு செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், பவன்பிரகாஷ்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மத்திகிரி போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- அப்பகுதிக்கு போலீசார் சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாசி நாயக்க னப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மனைவி சுமா (29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி சாரதம்மா (39) மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பெண்கள் உள்பட
3 பேர் கைது
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மூன்று பேரும் 10 கிலோ எடை யிலான கஞ்சா பொருட்களை ஓசூர் அருகே உள்ள காளிங்கவரம், பாரதிபுரம் பகுதிக்கு வாங்கி வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சார தாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன் தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மனைவி சுமா (29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி சாரதம்மா (39) மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மூன்று பேரும் 10 கிலோ எடையிலான கஞ்சா பொருட்களை ஓசூர் அருகே உள்ள காளிங்கவரம், பாரதிபுரம் பகுதிக்கு வாங்கி வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காலை சிறப்பு பூஜைகளுடன், கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
- ஓசூர் ஹரிதாச ரத்னா ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி பாகவதரின் சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள அக்ரஹாரம் சிவாஜிநகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 87வது பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி இன்று (புதன்கிழமை) 5-ந்தேதி வரை நடக்கிறது.
கடந்த 29-ந் தேதி காலை சிறப்பு பூஜைகளுடன், கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று வந்தன. நேற்று காலை சிறப்பு பூஜை, யாகம் நடத்தப்பட்டு பாண்டுரங்கர், ருக்மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றன.
இதைடுத்து ஓசூர் ஹரிதாச ரத்னா ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி பாகவதரின் சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மஹா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு மஹா மங்களார்த்தி நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபாண்டுரங்க ருக்மணி பக்த மண்டலி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
- ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.
- கள்ளநோட்டு புழக்கம் கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.
குறிப்பாக சிறு வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள், செங்கல்சூளைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் போன்ற நபர்களுக்கு, தெரியாமல் அவர்கள் கையில் கள்ளநோட்டுகள் வந்து விடுகிறது.
இதனை அறியாத பாமர மக்களில் ஒருவர், நேற்று ஊத்தங்கரை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபான கடையில், மதுபானம் வாங்க பணம் கொடுத்துள்ளார்.
அதில் 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை கண்ட மதுக்கடை பணியாளர், உடனடியாக நோட்டின் மீது பேனாவில் கள்ளநோட்டு என எழுத்தால் எழுதி அவரிடமே ஒப்படைத்தார்.
கள்ளநோட்டு பற்றி அறியாத அந்த நபர் செங்கல்சூளையில் கூலி வேலை செய்துகொண்டு வந்த பணம் கள்ள நோட்டு என கூறியதால், மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி சென்றார்.
இதுபோன்ற கள்ளநோட்டு புழக்கம், ஊத்தங்கரை பகுதியில், கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.
இதனால் கூலி தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
- சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஓசூரில் உள்ள பஸ்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்றார்.
அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் போலீசாரை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் பாகலூர் கே.கே.நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவேல் (வயது35) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மேம்பாலம் அருகே சென்றபோது கார் ஒன்று வசந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சுபேதர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் வசந்த் (வயது22). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போத்தாபுரத்தில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது கார் ஒன்று வசந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து வசந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தனுஷ் (24). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று தனுஷ் மீது பின்னால் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தனுஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மண்டல அளவிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.
- 2 நாட்கள் களப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டியில் தொல்லியலின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு கொண்டும் சேர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி மண்டல அளவிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.
இதை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் துரை மோகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவியுள்ள தொல்லியல் குறித்த தகவல்களை மாணவர்களுக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியை தொல்லியத்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, நேற்று 3-ம் தேதி முதல் வருகிற 8ம் தேதி வரையில் 6 நாட்கள் நடத்துகிறது. 4 நாள் பயிற்சி மையத்திலும், 2 நாட்கள் களப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியை இந்து அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு அளித்தார். தொடர்ந்து, தொல்லியல் அலுவலர் பரந்தாமன், கருத்தாளர்கள் சுப்பிர மணியன், காந்திராஜன், ராஜன், பூங்குன்றன், குழந்தைவேல், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுக சீதாராமன், செல்வகுமார், கென்னடி ஸ்ரீதரன், கண்ணன் மற்றும் தயாளன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 60 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பயிற்சியின் ஒருங்கிணை ப்பாளர்களாக முனைவர் பார்வதி, இளங்கோவன், அமுதா மற்றும் ஜானகி ஆகியோர் செயல்படுகின்றனர்.
- அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சின்னகால்வேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சீலன். இவரது மகன் பசுபதி (வயது30). தொழிலாளி.
இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது மனைவி கோபித்துகொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக பசுபதி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பசுபதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் ஒன்று அர்ஜூனன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது65). விவசாயியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர் தீர்த்தகிரிவலசைக்கு வந்தபோது எதிரே வந்த கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் ஒன்று அர்ஜூனன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஞ்சாயத்து தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மாணவியருக்கு உடனடி யாக, 500 லிட்டர் சுத்திகரி க்கப்பட்ட குடிநீர் எடுத்து வர ஏற்பாடு செய்தார்.
- மாணவியர் ஒரு நாள் மட்டும் எங்களுக்கு தண்ணீர் வழங்கினால் போதாது எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்மெ னவும் கூறி கோரிக்கை மனு அளித்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டையில் அரசினர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது.
இதில், 50- க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு குடிநீர் வசதி சரிவர செய்து தரப்படவில்லை.
அங்குள்ள போர்வெல் தண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக இருப்பதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாணவியர் விடுதியை பார்வையிட்ட டவுன் பஞ்சாயத்து தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மாணவியருக்கு உடனடியாக, 500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுத்து வர ஏற்பாடு செய்தார்.
ஆனால் மாணவியர் ஒரு நாள் மட்டும் எங்களுக்கு தண்ணீர் வழங்கினால் போதாது எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் கூறி கோரிக்கை மனு அளித்தனர்.
அதை பெற்றுக்கொண்ட அம்சவேணி செந்தில்குமார், இது குறித்து பரிசீலித்து உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பொருத்தப்படும்.
அதுவரை தினந்தோறும் மாணவியருக்கு ஆர்.ஓ., குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார்.






