பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அதேபகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது29), தமிரசன் (29), அசோக்குமார் (30), செவத்தன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோன்று பேரிகை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய திம்மராயன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com