என் மலர்
கிருஷ்ணகிரி
- பெய்த மழையில் நூற்பாலையின் கட்ட மைப்புகள் சரி செய்யப்பட வில்லை. இதனால் மழைநீர் நூற்பாலைக்குள் ஒழுகியது.
- எந்தி ரங்கள் மீது மழை பொழிந்த வண்ணம் இருந்ததால் தொழிலாளிகள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இட மில்லா மல் தவித்த அவலநிலை ஏற்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமைந்துள்ள கூ ட்டுறவு நூற்பாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
250 தொழிலாளர்களைக் கொண்டு இயங்க ஆரம்பித்த இந்த நூற்பாலை தற்பொழுது 35 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தினசரி தொழிலாளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நூற்பாலையில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து பெரும்பாலும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் நூற்பாலையின் கட்ட மைப்புகள் சரி செய்யப்பட வில்லை. இதனால் மழைநீர் நூற்பாலைக்குள் ஒழுகியது.
கடந்த பல வருடங்களாக கூட்டுறவு நூற்பாலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவ்வப்போது தொழி லாளர்கள் நிர்வாகத்திடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாமல் நிர்வாகம் தவிர்த்து வருவ தாகவும் குற்றம் சாட்டு கின்றனர்.
அதற்கு தகுந்தார் போல் நேற்று இரவு பெய்த கனமழையில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம் அடைந்து மழை நீர் நேரடியாக மின்சா ரத்தில் இயங்கக்கூடிய எந்தி ரங்கள் மீது மழை பொழிந்த வண்ணம் இருந்ததால் தொழிலாளிகள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இட மில்லா மல் தவித்த அவலநிலை ஏற்பட்டது.
அங்கு பணிபுரியும் ஊழி யர்களால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொழிலாளர்களே மேற்கூறையை சரி செய்ய முற்படும்பொழுது கீழே விழுந்து காயம் அடைந்த தொழிலாளி ஒருவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தொழிலாளிகள் தெரிவித்த னர்.
எனவே கைத்தறி அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நூற்பாலை நிர்வாகம் உடனடியாக மேற்கூறைைய சீர் செய்தும், தொழி லாளர்களுக்கான பாது காப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.
- சீனிவாசன், மது ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- இருவர் மீதும் தளி போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே ஆனேக்கல் சங்கரனார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது35). பெங்களூரு கொத்தநாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மது (36). இவர்கள் இருவர் மீதும் தளி போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
இந்த வழக்கில் கடந்த 2015 நவம்பர் 5ம் தேதி, இருவரும் ஜாமீன் பெற்றனர். அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நீதி மன்ற தலைமை எழுத்தர் செல்வராஜ், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சீனிவாசன், மது ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
அதே போல், தளி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (46). பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் அருகே, ஹூப்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார் (40).
இருவர் மீதும் தளி போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் 2002 ஆகஸ்ட் 26-ம் தேதி, இருவரும் ஜாமீன் பெற்றனர்.
பின்னர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நாராயணசாமி, விஜயகுமார் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
- குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.
- பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதி விவசாயி கள் நீண்ட நாள் பயிர் சாகுபடிக்கு மாற்றாகக் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
இங்கு அறுவடையாகும் பீன்ஸ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஓசூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
ஓசூர் பகுதியில் நல்ல மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.
அதேநேரம் உரிய ஆலோசனை இல்லாததால் தரம் இல்லாத விதை, மருந்து, பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது.
ஒரு ஏக்கர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் பந்தல் அமைத்தல் என ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. தற்போது, சந்தையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், மகசூல் பாதிப்பால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஓசூர் பகுதியில் பீன்ஸ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் உரிய தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் நோய் பாதிப்பின்போது, கட்டுப்படுத்த உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.
- பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெய மாலா தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-
மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்றாகும்.
அதிக அளவு ரசாயன பொருட்களை விவசா யத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கிறது.
இயற்கை வேளாண்மை விவசாயத்தில் பயன்படுத்து வதால் மண்வளம் மேம்படுகிறது. எனவே தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர்.
இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.
பஞ்சகாவ்யா 300 மிலி கரைசலை 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து இலை வழி தெளி உரமாக, காலை அல்லது மாலை நேரங்களில் அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்க லாம்.
நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதம் பஞ்சகாவ்யா கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
மஞ்சள், பூண்டு மற்றும் கருப்பு கரணைகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலில் 30 நிமிடங்களில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
கைத் தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். விசைத் தெளிப்பானில் அடைப்பானையும், குழாயின் நுனிப் பகுதியையும் பெரிதாக செய்து கொண்டால் தெளிப்பு அடைப்பின்றி ஒரே சீராக வரும். பயிர்களுக்கு பஞ்சகாவ்யா தெளிப்பதால் மகசூல் கூடுகிறது. மண்ணின் வளம், பயிர்களின் வளம் காக்கப்படுகிறது.
பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.
பூக்கள் வாடாமல் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கும் மற்றும் பழங்களின் தரம் கூடுகிறது. விளைச்சலும் 10-15 நாட்கள் முன்பே அறுவடைக்கு வருகின்றன.
தரமான நஞ்சற்ற பொருள் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாது காக்கப்படுகிறது.
எனவே உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் காக்கவும், குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாததால், இது போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- டிராபிக் போலீசாரை பணியமர்த்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியானது, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சேலம் வேலூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
மேலும், ஊத்தங்கரை பகுதியில் உள்ள, பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வருவதால், ஊத்தங்கரை நகர் பகுதியில் இருசக்கர வாகனங்கள், மற்றும் கார் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாததால், இது போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஊத்தங்கரை ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைத்து, டிராபிக் போலீசாரை பணியமர்த்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊத்தங்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடுதலாக பால் கொள்முதல் செய்யவும், பால் அதிகமாக வரும் காலங்களில் பால் பவுடர், நெய் போன்ற பொருட்களை கூடுதலாக தயாரிக்க வேண்டும்.
- ஆவினுக்கு பால் உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணபட்டுவாடா செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கிருஷ்ண கிரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு சட்ட ப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.
கலெக்டர் கே.எம்.சரயு முன்னிலை வகித்தனர். இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் ஒசூர் ஓய். பிரகாஷ், திருவாரூர் பூண்டி கலைவாணன், திருவாடனை கருமாணிக்கம், செங்கம் கிரி, மணப்பாறை அப்துல்சமது, வாசுதேவ நல்லூர் சதன் திரு மலைக்குமார், பாப்பி ரெட்டிப்பட்டி கோவிந்தசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அதே போல பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, தமிழ்நாடு சட்டப்பேரவை இணைச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த குழுவினர் ஓசூர் டைட்டான் கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில், அதன் செயல்பாடுகளையும், மைலான் நிறுவனத்தில் மருந்து பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி குறித்தும், குருபரப்பள்ளி டெல்டா மின்னணு பொருட்களின் உற்பத்தி மையத்தில் ஏற்றுமதி, பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து, மின்னணு பொருட்கள் உற்பத்தியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பால் வரத்து, பால் பதப்படுத்தும் பணிகள், நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை, மோர், தயிர், பால் பேக்கட் தயாரிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் கூடுதலாக பால் கொள்முதல் செய்யவும், பால் அதிகமாக வரும் காலங்களில் பால் பவுடர், நெய் போன்ற பொருட்களை கூடுதலாக தயாரிக்கவும், ஆவினுக்கு பால் உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணபட்டுவாடா செய்யவும் அறிவுறு த்தினார்கள்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பல்வேறு துறைகள் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 277 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 96 ஆயிரத்து 302 மதிப்பில் நலத்திட்ட உதவி களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஒசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பதிவு செய்யப்படாத 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து ரேடால் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரேடால் எலி மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்து விற்றால் கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்படாத 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து ரேடால் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிக நஞ்சுதன்மை கொண்டது. அபயாகரமானது.
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. எனவே, வேளாண் உளவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான ரேடால் என்ற எலி மருந்து மளிகை கடைகள், சூப்பர் மார்கெட் மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தினை பயன்படுத்த வேண்டாம் எனவும், திடீர் ஆய்வின் போது, ரேடால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற வழக்கு தொடரப்படும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரேடால் எலி மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி, பூச்சி மருந்து ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி -8248096799, காவேரிப்–பட்டணம் 9080300345, பர்கூ–ர் 9842603370, வேப்ப–னஹள்ளி 9003720549, மத்தூர் 6383310480, ஊத்தங்கரை 8248749452, சூளகிரி 9443207504, ஓசூர் 9626177886, கெலமங்கலம் 9385900350, தளி 8526809678 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- ஒரு வாலிபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்றார்.
- குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஓசூரில் உள்ள பஸ்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்றார்.
அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
இதனால் அவர் போலீசாரை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் பாகலூர் கே.கே.நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவேல் (வயது35) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தை திருமணம் செய்ய முயற்சி செய்யும் பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
- குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான உதவி எண்.1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
குழந்தை திருமணம் செய்யும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வாலிப்பட்டி அடுத்த நந்தகயம் கிராமத்தில் கடந்த மாதம் 29-ம் தேதியன்று குழந்தை திருமணம் நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், விசாரணை மேற்கொண்டதில் குழந்தை திருமணம் நடைபெறு இருந்ததை உறுதி செய்து, திருமண ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நல களப்பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள் ஆகிய அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் மாவட்ட சமூக நல அலுவலக களப்பணியாளர்கள் மூலம் சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் குழந்தை திருமணம் நடைபெறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் களப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை திருமண நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், குழந்தை திருமணம் செய்ய முயற்சி செய்யும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, 21 வயது நிறைவடைந்த ஆண், 18 வயதிற்கு குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், சட்டப்படி அந்த ஆணிற்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.1 லட்சம் வரை அபராதம் வழங்கி தண்டிக்கப்படுவர்.
மேலும், குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மட்டுமின்றி, உறவினர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பார்த்து தடுக்க முயற்சிக்காதவர்கள் என அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்.
எனவே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான உதவி எண்.1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த சுபாஷ் மற்றும் திருக்குமரன் இருவரும் கடலூர் சென்று விட்டு வீடு திரும்புவதற்காக சிங்காரப்பேட்டை வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள சிங்காரப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வரும் போது இரவு நேரத்தில் மழை பெய்ததால் எதிரே வரும் வாகனம் சரியாக தெரியாத சூழ்நிலை ஏறபட்டது.
இதனால் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுபாஷ் (வயது 20) என்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடன் வந்த திருக்குமரன் என்ற நபர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தக்காளியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது.
- நோய்த் தாக்கத்தால், 70 சதவீதம் தக்காளி தோட்டங்கள் அழிந்துவிட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தக்காளிக்கு ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளில் தேவை அதிகம் இருப்பதால், ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.தக்காளியைப் பொறுத்தவரை சந்தைக்கு வரத்தைப் பொறுத்தே விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும். இதனால், ஆண்டு முழுவதும் நிலையான விலை கிடைப்பதில்லை. குறிப்பாக மகசூல் பாதிக்கப்படும்போது விலை அதிகரிக்கும்.
தற்போது, தக்காளி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் தக்காளியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது.
இதனால், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் தக்காளி பயன்பாடு பெரும் அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் தக்காளியின் விலை உயர்வால், தோட்டங்களில் மர்ம நபர்கள் தக்காளியைப் பறித்து செல்லும் நிகழ்வுகள் ஓசூர் பகுதியில் அதிகரித்துள்ளது.
இதனால் விவசாயிகள் தோட்டங்களில் இரவு பகலாகக் கண்விழித்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில் ஓசூர் பகுதியில் நோய்த் தாக்கத்தால், 70 சதவீதம் தக்காளி தோட்டங்கள் அழிந்துவிட்டன. இதனால், கடந்த சில வாரங்களாகத் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
தக்காளி தோட்டங்களில் மர்ம நபர்கள் இரவில் தக்காளியைப் பறித்துச் செல்வது அதிகரித்துள்ளது. ஒரு தோட்டத்தில் 5 கிலோ தக்காளியை பறித்தால் கூட விவசாயிகளுக்கு ரூ.500 இழப்பு ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் தோட்டங்களில் இரவு பகலாக கண் விழித்துக் காவல் காத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
- மத்தூர் பகுதியில் மண்டல துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் டிரைவரையும், டிப்பர் லாரியையும் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் மண்டல துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் மத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது45) என்பவர் டிப்பர் லாரியில் அனுமதியின்றி 2 யூனிட் கற்களை வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் டிரைவரையும், டிப்பர் லாரியையும் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். கடத்தப்பட்ட 2 யூனிட் கற்களையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.






