என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் மேற்கூரையை சரிசெய்ய கோரிக்கை
    X

    மேற்கூரை சேதமடைந்ததால் நூற்பாலையின் எந்திரம் மீது மழைநீர் ஒழுகிய காட்சி.

    ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் மேற்கூரையை சரிசெய்ய கோரிக்கை

    • பெய்த மழையில் நூற்பாலையின் கட்ட மைப்புகள் சரி செய்யப்பட வில்லை. இதனால் மழைநீர் நூற்பாலைக்குள் ஒழுகியது.
    • எந்தி ரங்கள் மீது மழை பொழிந்த வண்ணம் இருந்ததால் தொழிலாளிகள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இட மில்லா மல் தவித்த அவலநிலை ஏற்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமைந்துள்ள கூ ட்டுறவு நூற்பாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    250 தொழிலாளர்களைக் கொண்டு இயங்க ஆரம்பித்த இந்த நூற்பாலை தற்பொழுது 35 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தினசரி தொழிலாளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நூற்பாலையில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து பெரும்பாலும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் நூற்பாலையின் கட்ட மைப்புகள் சரி செய்யப்பட வில்லை. இதனால் மழைநீர் நூற்பாலைக்குள் ஒழுகியது.

    கடந்த பல வருடங்களாக கூட்டுறவு நூற்பாலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவ்வப்போது தொழி லாளர்கள் நிர்வாகத்திடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாமல் நிர்வாகம் தவிர்த்து வருவ தாகவும் குற்றம் சாட்டு கின்றனர்.

    அதற்கு தகுந்தார் போல் நேற்று இரவு பெய்த கனமழையில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம் அடைந்து மழை நீர் நேரடியாக மின்சா ரத்தில் இயங்கக்கூடிய எந்தி ரங்கள் மீது மழை பொழிந்த வண்ணம் இருந்ததால் தொழிலாளிகள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இட மில்லா மல் தவித்த அவலநிலை ஏற்பட்டது.

    அங்கு பணிபுரியும் ஊழி யர்களால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    தொழிலாளர்களே மேற்கூறையை சரி செய்ய முற்படும்பொழுது கீழே விழுந்து காயம் அடைந்த தொழிலாளி ஒருவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தொழிலாளிகள் தெரிவித்த னர்.

    எனவே கைத்தறி அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நூற்பாலை நிர்வாகம் உடனடியாக மேற்கூறைைய சீர் செய்தும், தொழி லாளர்களுக்கான பாது காப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    Next Story
    ×