search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்
    X

    விவசாயிகள் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்

    • இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.
    • பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெய மாலா தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்றாகும்.

    அதிக அளவு ரசாயன பொருட்களை விவசா யத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கிறது.

    இயற்கை வேளாண்மை விவசாயத்தில் பயன்படுத்து வதால் மண்வளம் மேம்படுகிறது. எனவே தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர்.

    இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.

    பஞ்சகாவ்யா 300 மிலி கரைசலை 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து இலை வழி தெளி உரமாக, காலை அல்லது மாலை நேரங்களில் அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்க லாம்.

    நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதம் பஞ்சகாவ்யா கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

    மஞ்சள், பூண்டு மற்றும் கருப்பு கரணைகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலில் 30 நிமிடங்களில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

    கைத் தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். விசைத் தெளிப்பானில் அடைப்பானையும், குழாயின் நுனிப் பகுதியையும் பெரிதாக செய்து கொண்டால் தெளிப்பு அடைப்பின்றி ஒரே சீராக வரும். பயிர்களுக்கு பஞ்சகாவ்யா தெளிப்பதால் மகசூல் கூடுகிறது. மண்ணின் வளம், பயிர்களின் வளம் காக்கப்படுகிறது.

    பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.

    பூக்கள் வாடாமல் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கும் மற்றும் பழங்களின் தரம் கூடுகிறது. விளைச்சலும் 10-15 நாட்கள் முன்பே அறுவடைக்கு வருகின்றன.

    தரமான நஞ்சற்ற பொருள் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாது காக்கப்படுகிறது.

    எனவே உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் காக்கவும், குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×