என் மலர்
கிருஷ்ணகிரி
- சாகச சுற்றுலா, கேரவன் பஸ் நடத்துபவர்கள், கேரவன் பார்க்கு நடத்துபவர்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- பதிவு செய்யாத நிறுவனங்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுலா சார்ந்த தொழில்களான உணவு மற்றும் உறைவிடம், கூடார சுற்றுலா (கேண்டீன்), சாகச சுற்றுலா, கேரவன் பஸ் நடத்துபவர்கள், கேரவன் பார்க்கு நடத்துபவர்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தொழில் செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்யாத நிறுவனங்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரத்யேகமாக உள்ள இணையதள முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள முடியும். இது குறித்து உரிய தகவல்களை கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் 73977 15680 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
இதுவரையில் சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் சுற்றுலா தொழில் புரிபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தோட்டக் கலைத்துறை மூலம் நடப் பாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.99.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- நிரந்தர கல்பந்தல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிர்களில் தக்காளி மற்றும் பீன்ஸ் அதிக அளவில் பயிரிப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலா னவை வீரிய ஒட்டு ரகங்கள், இவை நன்கு வளர்ந்து கொண்டே காய்க்கும் தன்மை உடையது.
இந்த ரகங்களை சாதா ரண நடவு முறையில் நடவு செய்து பராமரிக்கப்படும் போது, அதனுடைய வளர்ச்சி, காய்க்கும் திறன் குறைந்து வருகிறது.
மேலும், 3 முதல் 5-வது முறை அறுவடையின் போதே பணியாட்களின் கால்களில் மிதிக்கப்பட்டு செடிகள் பாதிப்பு அடையும்.
இதனால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க "டிரெல்லிஸ்" என்ற கொடிகளை தாங்கும் தடுப்பு குச்சிகள் அமைத்து கயிற்றில் செடிகளை கட்டி படர விட்டு வளர்க்கும் முறைக்கு தோட்டக்கலை துறை சார்பில் நடப் பாண்டில் 50 சதவீத மானிய மாக ஒரு எக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பீன்ஸ் மற்றும் தக்காளியில் தாங்கு குச்சி கட்டுவதால், செடிகள் தரையில் படராமல் மேல்நோக்கி வளர உதவு கிறது.
மண்ணிலிருந்து மேல்நோக்கி வளருவதால் பூச்சி மற்றும் அழுகல் நோயின் தாக்கத்தை குறைக்கிறது.
சூரிய ஒளியானது தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் சென்ற டைய உதவுகிறது. செடி களை நிலைநிறுத்தி, அதிக மழை மற்றும் காற்றில் இருந்து சாய்ந்து விடும் அபாயத்தை குறைக்கிறது. சீரான வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.
மேலும், பழங்கள் தரையில் படாமல் இருப்ப தால் சேதம் ஏற்படாமல் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இம்முறை யில் நல்ல வரிசை இடை வெளி இருப்பதால் அறு வடையை எளிதாக்குகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் நடப் பாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.99.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், இத்திட்டத்தில் முருங்கை நாற்றுகள் ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் நிரந்தர கல்பந்தல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஆதிதிராடவிர், பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இந்த திட்டத்தின் 80 சதவீத இலக்கானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், டிரெல்லிஸ் திட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையை கடை பிடித்தால் நீர் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம். ஒரு பயனாளி அதிகபட்சமாக ஒரு எக்டேர் வரை பெற்று பயன் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் உரிய ஆவணங் களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், உழவன் செயலி மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வலைதளம் போன்ற இணைய வலை தளங்கள் மூலம் விண்ணப் பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.
- பெரும்பாலான விளை யாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காந்திநகர் துவக்கப்பள்ளி அருகே, அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த சிறுவர் பூங்கா, நாளடைவில் முறையான பராமரிப்பு இன்றி, போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.
பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
சேதமடைந்து கிடக்கும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் என மொத்தம் 5 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.
- அரசு பெண்கள் கல்லூரி, கொன்சேகா கல்லூரி, பி.எஸ்.வி கல்லூரி உள்பட பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நடந்தது.
இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் இளைஞர் திருவிழாவை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து கலை விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
சுதந்திரா இந்தியாவின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டும், இளை ஞர்களின் பன்முகத்தன்மையை வெளி கொணரவும், வளர்ச்சியடைந்த இந்தியா அடிமை மனோபாவத்தை நீக்குதல் நமது பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமைகளை உணர்த்தவும் நாட்டு மக்களிடையே தங்கள் கடமைகளை உணர்த்தும் வகையில் இளையோர் கலைவிழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஒருங்கிணைந்த திட்ட விளக்க கண்காட்சி, சர்வதேச சிறு தானிய கண்காட்சி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாக்காளர் சேவை விழிப்புணர்வு மையம் மற்றும் மகளிர் திட்டம் சுய உதவிக்குழு போன்ற விழிப்புணர்வு கண்காட்சி களை கலெக்டர் பார்வை யிட்டார்.
மேலும் இளைஞர் கலை விழாவை முன்னிட்டு இளைஞர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் என மொத்தம் 5 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அரசு பெண்கள் கல்லூரி, கொன்சேகா கல்லூரி, பி.எஸ்.வி கல்லூரி உள்பட பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரி சங்கர், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலைக்கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், நேரு யுவகேந்திரா உதவி அலுவலர் அப்துல் காதர், வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
- கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) பொது வினியோகத்திட்டம் சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 8 இடங்களில் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் பெல்லம்பள்ளி, ஊத்தங்கரை கெங்கப்பிராம்பட்டி காமராஜ் நகர், போச்சம்பள்ளி நாகோஜனஅள்ளி தரப்பு கம்புகாலப்பட்டி, பர்கூர் ஒப்பதவாடி, சூளகிரி பெத்தசிகரலப்பள்ளி, ஓசூர் நந்திமங்கலம் தரப்பு கர்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போடிச்சிப்பள்ளி தரப்பு இருதாளம், அஞ்செட்டி வட்டம் தக்கட்டி தரப்பு அர்த்தக்கல் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
எனவே, இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 15 ஆண்டுகளுக்கு பின், சந்தூர் கிராமத்தில் நடந்த ஸ்ரீ தாமரை செல்லியம்மன் கோயில் திருவிழாவில் 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனை வழிப்பட்டனர்.
- சந்தூரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தில் பழமையான தாமரை செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரைமைக்கத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, 66 மண்டல பூஜைகள் நடந்தது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செல்லியம்மன் கோயில் திருவிழா கடந்த 30ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
2-ம் தேதி முனிஸ்வரன் பூஜையும், 3-ம் தேதி, கங்கை பூஜையும், 4-ம் தேதி மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொன் ஏரி கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு ஸ்ரீ வீரபத்திரசுவாமி பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும், காலை 11 மணியளவில், தாமரை செல்லியம்மன் கரகம், அரிஜன கரகம் தலை கூடுதல், வீரபத்திரசுவாமி மனை கரகம் சந்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சந்தூர், மகாதேவகொல்லஹள்ளி, கங்காவரம், வேடர்தட்டக்கல், பட்டகப்பட்டி, குட்டப்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து, செல்லியம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு குதிரைக்கு பூஜை செய்து அருள் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. அம்மன் தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சந்தூரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். இவ்விழா வருகிற 9-ம் தேதி நிறைவு பெறுகிறது.
- வேளாண் சார்ந்த தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் முறையாக பயன்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையில், உழவர் தின பேரணி, எல்.ஐ.சி.. அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு சேலம் சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானா அருகில் நிறைவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
இதற்கு மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மாவட்ட துணைத் தலைவர் தோப்பையகவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர்அகமத், மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிரெட்டி மகளிர் அணி தலைவி பெருமா, துணைத் தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு, தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நரசிம்மநாயுடு, கர்நாடகா விவசாய சங்கத் தலைவர் குருபூர்சாந்தகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், தெலுங்கானா அரசு போல் ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு போகத்திற்கும் உற்பத்தி மானியம் பணமாக வழங்கி, காலேஸ்வரம் நீர்ஏற்று திட்டம் போல், ஒகேனக்கல் தண்ணீரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் பெரிய மின்மோட்டார் மூலம் நீர்ஏற்றி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய அரசு தேசிய வங்கி கடன்களையும், தமிழக அரசு கூட்டுறவு கடன்களையும், முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சார்ந்த கட்டண மின்சாரத்தையும், வேளாண் சார்ந்த தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் முறையாக பயன்படுத்த வேண்டும். பயிர்சேதம் செய்யும் வனவிலங்குகளை சுட விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தெளிவுப்படுத்த வேண்டும்.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்பட்ட உயிர்சேதத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மான், மயில், குரங்குகள் செய்யும் பயிர்சேதங்களுக்கும், இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
- மாணவ, மாணவியர் 60 பேருக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது.
- தமிழி என்று அழைக்கப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்றுத் தரப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு, கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில், பி.ஏ., வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர் 60 பேருக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது.
மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பயிற்சியை அளித்து வருகிறார். பயிற்சியின் மூன்றாம் நாளான நேற்று அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றினை படியெடுத்து, படித்து பொருள் கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்று காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் தமிழி என்று அழைக்கப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்றுத் தரப்பட்டது. பின்னர் அந்த எழுத்தில் இருந்து இன்றைய கால தமிழ் எழுத்து வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள், கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, கோவில் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாட்டினை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.
- விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
- சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில மகளிர் அணிசெயலாளர் முத்துலட்சுமி போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சின்ன பெண்ணங்கூர் காய்கறி மார்கெட் அருகில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அவை தலைவர் ராமன், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மகளிர் அணிசெயலாளர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில மகளிர் அணிசெயலாளர் முத்துலட்சுமி போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த போராட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாகராணி சமுக ஆர்வலர்கள் நாகராஜ் ரெட்டி , பெருமாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 100 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக விவசாயிகளின் உரிமைக்காக பேnராடி உயிர்நீத்த விவசாயிககளின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- பெங்களூரா, பெங்களூரா, மல்லிகா, நாட்டி என 172 ரக மாங்காய்களை காட்சிப்படுத்தி யிருந்தனர்.
- பல்வேறு பூக்களை கொண்டு வண்ணத்துப் பூச்சி, ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தார்.
தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் பூபதி வரவேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்பட பலர் பேசினார்கள்.
விழாவில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, நீர்வடிப்பகுதித் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 21 ஆயிரத்து 640 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த மாங்காய்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதன்படி, ஏற்றுமதிக்கு உகந்த ரகங்களான அல்போன்சா, தோத்தா புரி, பங்கனப்பள்ளி, செந்தூரா, இமாம்பசந்த், மல்கோவா, நீலம், மல்லிகா மற்றும் பையூர்-1, சிந்து, பஞ்சவர்ணம், கெத்தாமர், நீலகோவா, பீத்தர், ஆஸ்டின், ரத்னா, ருமானி, சேலம் பெங்களூரா, பெங்களூரா, மல்லிகா, நாட்டி என 172 ரக மாங்காய்களை காட்சிப்படுத்தி யிருந்தனர்.
அத்துடன் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலக்காய், கிராம்பூ, மிளகு, வெந்தயம், சோம்பு, பட்டாணி, ஜாதிக்காய், அன்னாசி பூ, ஜாதிகொட்டய், மிளகாய் விதைகள், கககசா போன்ற 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு யானை மாதிரியையும்,
பல்வேறு பூக்களை கொண்டு வண்ணத்துப் பூச்சி, ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் மாதிரி, மலர்களால் ஆன மாங்கனி ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது.
இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கண்காட்சியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு பொழுது போக்கு அம்சங்கள், தின்பண்டங்கள் அரங்கு கள், பேன்சி பொருட்கள் அடங்கிய அரங்குகள், என ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்றைய கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) டேவிட் டென்னிசன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயிணி, நகராட்சி ஆணையாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
- பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது.
- பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாண விக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கடந்த 28-ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப்போட்டிகளில், அஞ்செட்டி அரசு மேல் நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 3 பேர் கலந்து கொண்டனர்.
கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி சரண்யா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து 10 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் பெற்று பள்ளிக் கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாண விக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.மேலும் கவிதைப் போட்டியில் பங்கெடுத்த மாணவி நிவேதா மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கெடுத்த மாணவன் சஞ்சீவ்மூர்த்தி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாண வியை ஊக்கப்படுத்திய முதுகலை தமிழ் ஆசிரியர் வேணு கோபாலுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கபட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், முன்னாள் மாணவர் மன்ற தலைவர் வெங்கடராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடந்து வருகிறது.
- மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவ லருமான கே.எம்.சரயு மற்றும் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகளை ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ண கிரி மாவட்டத்திற்கென மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடந்து வருகிறது.
இந்த பணியை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராகேஷ்குமார், சார்பு செயலாளர் ரித்தீஷ்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவ லருமான கே.எம்.சரயு மற்றும் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவநந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) ஜெய்சங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.






