பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) பொது வினியோகத்திட்டம் சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 8 இடங்களில் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் பெல்லம்பள்ளி, ஊத்தங்கரை கெங்கப்பிராம்பட்டி காமராஜ் நகர், போச்சம்பள்ளி நாகோஜனஅள்ளி தரப்பு கம்புகாலப்பட்டி, பர்கூர் ஒப்பதவாடி, சூளகிரி பெத்தசிகரலப்பள்ளி, ஓசூர் நந்திமங்கலம் தரப்பு கர்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போடிச்சிப்பள்ளி தரப்பு இருதாளம், அஞ்செட்டி வட்டம் தக்கட்டி தரப்பு அர்த்தக்கல் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

எனவே, இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com