என் மலர்
கிருஷ்ணகிரி
- முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 309 மனுக்களை வழங்கினார்கள்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 309 மனுக்களை வழங்கினார்கள்.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.56 ஆயிரம் மதிப்பிலான திறன் பேசிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
- எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.
சூலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் சக்தி பிரியா (வயது 24).
இவர் சூலூர் அருகே உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25-ந் தேதி விடுதியில் உள்ள அறையில் இருந்த சக்தி பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவ மாணவி திடீர் தற்கொலைக்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் சக்தி பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அவர் யாருடன் கடைசியாக பேசினார் என ஆய்வு செய்தனர். அதில் அவர் கடைசியாக கிருஷ்ணகிரியில் என்ஜினீயரிங் படித்து வரும் கோகுல் (25) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கிருஷ்ணகிரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டுபடித்து வருகிறேன். நானும் சக்தி பிரியாவும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்து வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்தி பிரியா அவரது நண்பர் ஒருவருக்கு பண உதவி செய்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனை நான் கண்டித்தேன்.
அப்போது எங்களுக்கு இடையே செல்போன் மூலமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சக்தி பிரியா என்னிடம் பேசுவதை குறைத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த நான் சக்தி பிரியாவின் தோழிகளை தொடர்பு கொண்டு அவருடன் பேசாதீர்கள் என கூறினேன். இதுகுறித்து அவர்கள் சக்தி பிரியாவிடம் கூறி உள்ளனர். சம்பவத்தன்று விடுதியில் இருந்த அவர் இதுபற்றி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணையில் முடிவில் போலீசார் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு துண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலன் கோகுலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சாலைப் பணி–யாளர்கள் 10 ஆயிரம் குடும்பங்களின் 17 ஆண்டு–கால எதிர்ப்பார்ப்பான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
- ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி சாலைப்பணியாளர் சங்கத்தின் 8-வது மாநில பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.
இதையொட்டி வரவேற்புகுழு அமைப்புக் கூட்டம் நேற்று கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகராஜா பேசியதாவது:
கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள மாநாட்டில், சாலைப் பணி–யாளர்கள் 10 ஆயிரம் குடும்பங்களின் 17 ஆண்டு–கால எதிர்ப்பா ர்ப்பான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
இதுவரை உயிரிழந்துள்ள 300க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு ஒரே உத்தரவில், ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும். அதே போல் காலியாக உள்ள 7,500 பணியிடங்க–ளுடன் கூடுதலாக பணி–யிடங்களை உருவாக்கி 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிரா–மப்புற இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் நெடுஞ்சாலைத்துறையில் 10 ஆயிரம் சாலைப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது.
இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற, மேயர், நகர்மன்றத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே அனைத்து சாலைப் பணியாளர்களும் தவறாமல் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருமாள், மாநில துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், ஏழுமலை, பாண்டுரங்கன், மாநில செயலாளர்கள் சின்னராசு, ராஜமாணிக்கம், ரவி, ஏழுமலை, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க முடியாத கட்சி ‘நாம் தமிழர் கட்சி என கூறியதாக கூறப்படுகிறது.
- இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தி.மு.க. நிர்வாகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்தூர்,
ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மனித உரிமைகளை மீறியதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் மத்தூ ரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது சோனார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி மேகநாதன் (வயது 40) என்பவர் அங்கு வந்து உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க முடியாத கட்சி 'நாம் தமிழர் கட்சி என கூறியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தி.மு.க. நிர்வாகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மேகநாதனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதையறிந்த மத்தூர் போலீசார் விரைந்து வந்து மேகநாதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க.வினர் மத்தூர் பஸ் நிலையத்தில் திரண்டர். அவர்கள் மேகநாதனை தாக்கியவர்கள் மீது கைது செய்ய கோரியும், நாம் தமிழர் கட்சியின் பொதுக்–கூட்டத்தை தொடர்ந்து நடந்தக்கூடாது எனவும் கூறி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுபபதாக உறுதியளித்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சிப்பிப்பாறை, லேபர்டாக், பொமேரியன், பக், டால்மேசன், அமெரிக்க புல்லி, கிரேடன், சைபே–ரியன் அஷ்கி, பிக்புள் உள்பட 37 வகையான 170 நாய்கள் கலந்து கொண்டன.
- கண்காட்சியில் நாய்களின் குணம், கீழ்படிதல், தடுப்பூசி விவரம், ஆரோக்கியம் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெர்மன் செப்பர்ட், கன்னி, பெல்ஜியம் மெலோ, அக்கிடா, சிப்பிப்பாறை, லேபர்டாக், பொமேரியன், பக், டால்மேசன், அமெரிக்க புல்லி, கிரேடன், சைபே–ரியன் அஷ்கி, பிக்புள் உள்பட 37 வகையான 170 நாய்கள் கலந்து கொண்டன.
கண்காட்சியில் நாய்களின் குணம், கீழ்படிதல், தடுப்பூசி விவரம், ஆரோக்கியம் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில், நாமக்கல் கால்ந–டைத்துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் இசக்கியேல் நெப்போலியன் நடுவராக பங்கேற்றார். மேலும், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் மரியசுந்தர், உதவி இயக்குனர் டாக்டர் அருள்ராஜ், ஒருங்கி–ணைப்பாளர் டாக்டர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் ஒவ்வொரு வகையான நாய்களுக்கும் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த நாய்களின் உரிமையா–ளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த கண்காட்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் நாய் பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் -ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மாவட்டத்தல் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்து கோவில்களை இடிக்க கூடாது.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்ட-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக தி.மு.க., அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேருராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நேற்று பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை அருகில், மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தலைமையில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மகளிர் அணித் தலைவி விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.
அதே போல், குந்தாரப்பள்ளியில் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட பொதுச் செயலா ளர் அன்பரசன் தலைமை யிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியம் மருதேரி பஞ்., பேருஅள்ளியில், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும். போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இந்து கோவில்களை இடிக்க கூடாது. இயற்கை வளங்களை சுரண்ட வேண்டாம். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
அனைத்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். மின்கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 23 கிலோ மீன்கள் கெட்டு போனவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
- கெட்டு போன மீன்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்ப்பட்டது.
கிருஷ்ணகிரி,
ஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 48 கிலோ கெட்டு போன மீன்களை பறிமுதல் செய்தனர்.
கெட்டு போன மீன்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கெட்டு போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சரயுவிற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஓசூர் டவுனில் இயங்கி வரும் மீன் கடைகளில் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சுமார் 23 கிலோ மீன்கள் கெட்டு போனவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. கெட்டு போன மீன்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்ப்பட்டது.
அதே போல கிருஷணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் மார்க்கெட் மற்றும் பழையபேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்வள துறை ஆய்வாளர் கதிர்வேல், மீன் வளமேற்பார்வையாளர் நந்தகுமார், உணவு பாதகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் 5 கிலோ பார்மலின் கலந்த கொடுவா மீன்களும், 20 கிலோ கெட்டு போன மீன்களும் என மொத்தம் 25 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. மேற்கண்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டன.
- மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து சேர்ப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பயிற்றுனர்களுக்கு வட்டார அளவிலான குழுக்கூட்டம் நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் செல்வராஜ், சீனிவாசன், தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து சேர்ப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அடுத்த வகுப்பிற்கு சென்றிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை விவரப் பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட வேண்டும். 2022&23ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமும், ஈடுபாடும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறச் செய்யும் நோக்கத்துடன் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், பயிற்சியினையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு, அடையாள அட்டை பெற வேண்டிய, புதுப்பிக்கப்பட வேண்டிய மாற்றுத்திறன் மாணவர்களின் பட்டியல், உதவி உபகரணங்கள், தேவைப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல், பஸ் பயண அட்டை சலுகை, அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை தயார்படுத்துதல் வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டன.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தன், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.
- போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர்.
ன்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.
இது தொடர்பாக ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாயை நேசிப்பதை போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும்.
- தயக்கத்தை விட்டு தன்னம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர்க–ளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தனர்.
கலை கல்லூரி முதல்வரும், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரு–மான ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று, பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பேசினார்.
கிருஷ்ணகிரி ஆரோக்கிய பாரதி தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கி–ணைப்பாளர் கவுதம், அமைப்பின் தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் மாணவர்க–ளிடையே பேசும் போது தன்னலமற்ற சேவையே இன்றைய முதன்மை தேவை. தாயை நேசிப்பதை போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். தயக்கத்தை விட்டு தன்னம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
இதில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறை தலைவர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக போலீசார் சோதனைச் சாவடி அமைத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கடத்தலைத் தடுத்து வருகின்றனர்
- அண்மைக் காலமாக இச்சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை.
ஓசூர்,
தமிழக, கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக குட்கா, கஞ்சா, மது பாட்டில்கள் மற்றும் வனப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
இக்கடத்தலை தடுக்க ஓசூர் ஜுஜுவாடி, பூனப்பள்ளி, கக்கனூர், சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் சோதனைச் சாவடி அமைத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கடத்தலைத் தடுத்து வருகின்றனர்.
இதில், பாகலூர் அருகே சம்பங்கிரி வழியாக கர்நாடக, ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்நிலையில், சம்பங்கிரி பகுதியில் தமிழக போலீசார் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். இவ்வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மற்றும் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனைக்குப் பின்னர் அனுப்பி வைத்து வந்தனர். மேலும், இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலம் வாகனப் போக்குவரத்து பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், அண்மைக் காலமாக இச்சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு குட்கா, கஞ்சா, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
அதே போல, தமிழகத்திலிருந்து ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு அதிக அளவில் இவ்வழியாக ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே, சம்பங்கிரி சோதனைச் சாவடியில் கடந்த காலங்களைப்போல, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநில நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அத்துமீறி சோதனை நடத்தியதாக கண்டித்து இநத ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட பொதுச் செயலாளர் கலீல் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அத்துமீறி சோதனை நடத்தியதாக கண்டித்து இநத ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட துணை தலைவர் பக்ருத்தீன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் கபீர் வரவேற்றார்.
மாவட்ட பொதுச் செயலாளர் கலீல் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் துரைகுட்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஆதம்பாஷா ஆகியோர் பேசினார்கள்.இதில் மாவட்ட பொருளாளர் ஜாவித்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சதாம் உசேன், ஜெயக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஷர்புதீன், மாவட்ட செயலாளர் முன்னா, மாவட்ட பொருளாளர் உசேன், மாவட்ட துணை தலைவர் கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி ஊடக அணி பொறுப்பாளர் சதாம்உசேன் நன்றி கூறினார்.






