என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க அமைப்பு கூட்டம்"

    • சாலைப் பணி–யாளர்கள் 10 ஆயிரம் குடும்பங்களின் 17 ஆண்டு–கால எதிர்ப்பார்ப்பான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
    • ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி சாலைப்பணியாளர் சங்கத்தின் 8-வது மாநில பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.

    இதையொட்டி வரவேற்புகுழு அமைப்புக் கூட்டம் நேற்று கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகராஜா பேசியதாவது:

    கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள மாநாட்டில், சாலைப் பணி–யாளர்கள் 10 ஆயிரம் குடும்பங்களின் 17 ஆண்டு–கால எதிர்ப்பா ர்ப்பான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    இதுவரை உயிரிழந்துள்ள 300க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு ஒரே உத்தரவில், ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும். அதே போல் காலியாக உள்ள 7,500 பணியிடங்க–ளுடன் கூடுதலாக பணி–யிடங்களை உருவாக்கி 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிரா–மப்புற இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் நெடுஞ்சாலைத்துறையில் 10 ஆயிரம் சாலைப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது.

    இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற, மேயர், நகர்மன்றத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே அனைத்து சாலைப் பணியாளர்களும் தவறாமல் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருமாள், மாநில துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், ஏழுமலை, பாண்டுரங்கன், மாநில செயலாளர்கள் சின்னராசு, ராஜமாணிக்கம், ரவி, ஏழுமலை, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×