என் மலர்
நீங்கள் தேடியது "வட்டார அளவிலான கூட்டம்"
- மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து சேர்ப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பயிற்றுனர்களுக்கு வட்டார அளவிலான குழுக்கூட்டம் நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் செல்வராஜ், சீனிவாசன், தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து சேர்ப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அடுத்த வகுப்பிற்கு சென்றிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை விவரப் பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட வேண்டும். 2022&23ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமும், ஈடுபாடும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறச் செய்யும் நோக்கத்துடன் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், பயிற்சியினையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு, அடையாள அட்டை பெற வேண்டிய, புதுப்பிக்கப்பட வேண்டிய மாற்றுத்திறன் மாணவர்களின் பட்டியல், உதவி உபகரணங்கள், தேவைப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல், பஸ் பயண அட்டை சலுகை, அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை தயார்படுத்துதல் வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டன.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தன், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






