search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 48 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல்
    X

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் கடையில் சோதனை செய்த காட்சி.

    கிருஷ்ணகிரியில் 48 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல்

    • 23 கிலோ மீன்கள் கெட்டு போனவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
    • கெட்டு போன மீன்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்ப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    ஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 48 கிலோ கெட்டு போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

    கெட்டு போன மீன்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கெட்டு போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சரயுவிற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஓசூர் டவுனில் இயங்கி வரும் மீன் கடைகளில் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 23 கிலோ மீன்கள் கெட்டு போனவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. கெட்டு போன மீன்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்ப்பட்டது.

    அதே போல கிருஷணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் மார்க்கெட் மற்றும் பழையபேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்வள துறை ஆய்வாளர் கதிர்வேல், மீன் வளமேற்பார்வையாளர் நந்தகுமார், உணவு பாதகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் 5 கிலோ பார்மலின் கலந்த கொடுவா மீன்களும், 20 கிலோ கெட்டு போன மீன்களும் என மொத்தம் 25 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. மேற்கண்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டன.

    Next Story
    ×