என் மலர்
கன்னியாகுமரி
- அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு
- ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து கட்ட அனுமதி கேட்பது
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோ வில் களின் தலைமை அலுவ லகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், மருங்கூர் திருமலை முருகன் கோவில் உள்ளிட்ட சில முக்கிய கோவில்களில் பல ஆண்டு காலமாக திருவிழா காலங்களில் பயன்படுத்தப் படாமல் இருப்பு பெட்ட கத்தில் வைக்கப்பட்டு உள்ள தங்க, வைர நகைகளை திருவிழா காலங்களில் மீண்டும் சுவாமிகளுக்கு அணி விப்பதற்கு உரிய அனுமதி பெறுவது.
போதிய வருமானம் இன்றி குறைவான உண்டி யல்கள் இருக்கும் கோவில் களுக்கு கூடுதலாக அன்னதான உண்டியல்கள் வைக்க அனுமதி கேட்பது. திருக்கோ வில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் புதிதாக வணிக வளாகங்கள் கட்ட அனுமதி கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வேளிமலை முருகன் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து கட்ட அனுமதி கேட்பது என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு
- எளிய தவணை முறையில் பொருட்கள் வாங்கலாம்
நாகர்கோவில் :
வீட்டு உபயோக பொருட் கள் விற்பனையில் முன் னணியில் உள்ள வசந்த் அன் கோ சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சாம்சங், சோனி, எல்.ஜி., பானா சோனிக், ஹையர், லாயிட் போன்ற முன்னணி பிராண்ட் டி.வி.க்கள் குறைந்த விலையில் விற் பனை செய்யப்படுகின்றன.
செல்போன்கள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மிக்சி, கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், வாட்டர் பியூரி பையர் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களை எளிய தவணை முறையில் வாங்கலாம்.
குறிப்பாக ரூ.5,000-க்கு மேல் பொருட்கள் வாங்கு வோருக்கு ஸ்லோகன் போட்டி மூலமாக 100 வாடிக்கையாளர்கள் தலா 1 பவுன் தங்கம் வெல்ல லாம். பஜாஜ் பைனான்ஸ் மூலம் தவணை முறையில் பொருட் கள் வாங்குவோ ருக்கு ராயல் என்பீல்டு புல்லட் மற்றும் டி.வி.எஸ். ஸ்கூட்டி வெல்லலாம்.
43 இன்ச் ஆண்டிராய்டு லெட் டி.வி. ரூ.19,990-க்கும் (ரூ.1,666 இ.எம்.ஐ.), 65 இன்ச் அல்ட்ரா எச்.டி.கூகுள் லெட் டி.வி. ரூ.49,990-க்கும் (ரூ.3,781 இ.எம்.ஐ.), 75 இன்ச் லெட் டி.வி.ரூ,3,999 இ.எம்.ஐ.-லும், 85 இன்ச் லெட் டி.வி. ரூ.6,999 இ.எம்.ஐ.-லும், சைடு பை சைடு பிரிட்ஜ் ரூ.3,999 இ.எம்.ஐ.-லும், பிராஸ்ட் பிரீ பிரிட்ஜ் ரூ.1,490 இ.எம்.ஐ.-லும், டைரக்டு கூல் பிரிட்ஜ் ரூ.900 இ.எம்.ஐ.-லும், பிரண்ட் லோடு வாஷிங் மெஷின் ரூ.1,994 இ.எம்.ஐ.-லும், டாப் லோடிங் வாஷிங் மெஷின் ரூ.1,222 இ.எம்.ஐ.-லும், செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் ரூ.888 இ. எம்.ஐ.-லும் வாங்கிடலாம்.எலக்ட்ரிக் கெட்டில், அயர்ன் பாக்ஸ், ரைஸ் பாக்ஸ் ஆகியவை ரூ.1,111-க்கும், 3 ஜார் மிக்சி, எலக்ட் ரிக் கெட்டில் ஆகியவை ரூ.2,222-க்கும், இண்டக் ஷன் ஸ்டவ், ரைஸ் பாக்ஸ், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் கெட்டில் ஆகியவை ரூ.3,333-க்கும், கிரைண்டர், டின்னர் செட், 3 லிட்டர் பிரஷர் குக்கர் ஆகியவை ரூ.4,444-க்கும் வாங்கிட லாம்.
பிரீத்தி 2 அல்லது 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் பிரஷர் குக்கர் இலவசம், பட்டர் பிளை மிக்சி வாங்கினால் இண்டக் ஷன் ஸ்டவ் இலவசம், விடியம் 2 அல்லது 3 பர்னர் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் பிரஷர் குக்கர் இலவசம், எஸ்.எஸ்.பிரீமியர் 2 அல்லது 3 பர்னர்கியாஸ் ஸ்டவ் வாங்கினால் மிக்சி இலவசம், 15 லிட்டர் ஏ.பி.எஸ். வாட்டர் ஹீட்டர் ரூ.6,190-க்கும், 3 ஜார் மிக்சி, 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் ஆகியவை ரூ.4,995-க்கும் வாங்கிடலாம்.
இது தவிர அனைத்து பிராண்டு சிம்னி மிக குறைந்த விலையில் வாங்க லாம். கிரைண்டர், மிக்சி, பேன், கியாஸ் ஸ்டவ் போன்ற பொருட்களை எளிய தவணை முறை வசதி யில் தள்ளுபடி விலையில் வாங்கிடலாம்.
ஆப்பிள் ஐபோன்-15 ரூ.3,333 இ.எம்.ஐ.-லும், ஆப்பிள் ஐபோன் புரோ, புரோமேக்ஸ் ஜீரோ டவுன் பேமண்டிலும், ஆப்பிள் மேக்புக் எம்-1 ரூ.83,000- லும் வாங்கிடலாம். உலகத் தர மிக்க பர்னிச்சர் பொருட் களை ரூ.789 என்ற எளிய தவணை முறையில் வாங்கிட லாம். ரூ.30 ஆயிரத் துக்கு மேல் பர்னிச்சர் வாங்குவோருக்கு ரூ.4,500 மதிப்புள்ள 3 ஜார் மிக்சி இலவசம்.
- நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
- திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்துவரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.
மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
நாகர்கோவில், கன்னி மார், குழித்துறை பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேர மும் அணை யை கண்காணித்து வரு கிறார்கள்.
அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்பதால் கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் அணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அணையின் நீர் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார். அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும்போது கரை யோர பகுதி மக்கள் பாதிக் கப்பட வாய்ப்புள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கு மாறு அறிவுறுத்தினார்.
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு கடந்த 5 நாட்களாக தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் தற் போது அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.49 அடி யாக இருந்தது. அணைக்கு 1023 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியாக உள்ளது. அணைக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.
சிற்றாறு 1 அணையில் இருந்தும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 அணைகளில் இருந்து 782 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு புத்தனார் சானல்களில் திறந்து விடப் பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பழையாறு, வள்ளியாறுகளிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்கு நேற்று மேலும் 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
- அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தல்
- தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது
கன்னியாகுமரி :
அகில இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது. அகில இந்திய தலைவர் ஹேமலதா தலை மை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசி னார். மாநில பொருளா ளர் ரூபி கொடியேற்றி வைத்தார். இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச்செய லாளர் ஜோசப், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாநாட்டு வர வேற்பு குழு பொருளாளர் வேலம் நன்றி கூறினார்.
மாநாட்டில் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. கட்டுமான பெண் தொழிலா ளர்களுக்கு பணியிடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன
- போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினார்
- விக்கியிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்
குழித்துறை :
குமரி மாவட்டத்தில் சாலை களில் நடந்து செல்லும் பெண் களை தாக்கி நகை பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.
இந்த நிலையில் மார்த்தாண் டம் பகுதியில் நேற்று இரவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண் களை, தனது மோட்டார் சைக்கிளால் இடித்து கீழே தள்ளிவிட்டு, அவர்கள் சுதாரிப்ப தற்குள், கழுத்தில் கிடக்கும் நகைளை பறித்துச் செல்வதை தொழிலாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் கண்டறி யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீ சார், அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், நாகர்கோ விலை அடுத்த மேல புத்தேரி கீழக்கலுங்கடி பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மார்த்தாண்டம் ெரயில்வே நிலைய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்த ஆசிரியை ஒருவரை தாக்கி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தது, ஞாறான்விளை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜஸ்ரீ (37) என்பவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தது போன்ற வற்றில் விக்கி தான் ஈடுபட் டுள்ளார் என்பதும் உறுதியானது.
மேலும் இவர் மீது கருங்கல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் பல இடங்களில் விக்கி ரோமியோவாக வலம் வந்து, பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை மறைவான இடங்க ளுக்கு அழைத்துச் சென்று தங்க சங்கிலியை பறித்து செல்லும் செயலிலும் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விக்கியிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்
மணவாளக்குறிச்சி :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி, இனிப்பகங்கள் மட்டு மின்றி சிலர் வீடுகள், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக பலகா ரங்கள் தயாரிப்பு தொழி லில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடங்களில் தரமான பலகாரங்கள் தயாரிக்கப் படுகிறதா? என்று ஆய்வு செய்ய மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர விட்டார்.
அதன்பேரில் தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி குமரி மாவட் டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு குளச்சல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி பகுதிகளில் 12 பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் உரிமையாளருக்கு எச்ச ரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டது.
- கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
- பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
குமரி மாவட்டத்தில் பட் டாசு விற்பனையை கண் காணிக்க 18 குறுவட்டங் களுக்கும் தனி தாசில்தார் கள், காவல்துறை அதிகா ரிகள், தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் சம் பந்தப்பட்ட குறுவட்ட ஆய் வாளர்களை கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினர் தங்க ளது பகுதிக்குட்பட்ட பட்டாசு சில்லறை விற்பனை கடைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண் டும்.
இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட்ட தற்காலிக உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை செய்யும் இடங்கள், விற்பனையா ளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறைந்த ஒலியுடனும், புகையில்லாத குறைந்த அளவில் காற்று மாசுபாடு இல்லாத தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அவரச காலங்களில் கட்டணமில்லா தொலை பேசி எண் 112-ஐ பொது மக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்ககூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்க ளுக்கு அருகில் பட்டாசு வெடிக்ககூடாது. சீனப் பட்டாசுகளை தவிர்த்திட வேண்டும்.
விற்பனையாளர்கள் உரிமம் வழங்கப்பட்ட இடத் தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கடை களில் செல்போன் உப யோகிக்க கூடாது. கடையின் முன் வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்திட வேண்டும். பட்டாசு அதிர்வேட்டு போன்ற வெடிபொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஓலையால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாக பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபா வளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.
- மழைக்காலம் தொடங்கும் முன்பே சாலை சேதமடைந்து காணப்பட்டது.
- மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
இரணியல் :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலக்குளம் வள்ளியாற்று பாலத்தில் இரு பக்கங்களிலும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு வள்ளி ஆற்றின் மேல் சுமார் ரூ.2 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்டது. அத்துடன் இரணியல் முட் டம் வழித்தடத்தில் செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கும் முன்பே சாலை சேதமடைந்து காணப்பட்டது. தற்போது மழைநீர் பள்ளங்களில் நிரம்பிய நிலையில் காணப் படுகிறது. திங்கள்நகரில் இருந்து வெள்ளிமலை, முட்டம், அம்மாண்டிவிளை செல்லும் மினி பஸ், அரசு பஸ் மற்றும் தனியார் வாக னங்கள் வள்ளி ஆற்றின் வழியாக செல்லும்போது குண்டு குழியாக உள்ள சாலையில் தள்ளாடியபடி ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.
மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப் புள்ளது. எனவே தலக்குளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது
- 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் கொல் லங்கோடு பகுதியை சேர்ந்த வர் இர்வின் (வயது 50), லாரி டிரைவர். இவர் ஈரோடு பெருந்துறையில் இருந்து களியக்காவிளை அருகே பனச்சமூட்டிற்கு லாரியில் மாட்டு தீவ னங்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டார். இன்று அதிகாலையில் வட சேரி அண்ணா சிலை யிலிருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட் டின் நடுவே வைக்கப்பட்டி ருந்த தடுப்பு கற்கள் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன் சக்கரமும் உடைந்தது.
இதைத்தொடர்ந்து லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடுரோட் டில் லாரி தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. இதுகுறித்து நாகர்கோ வில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரை வர் இர்வினை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். வடசேரியில் இருந்து பார்வதிபுரம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. வட சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லை மற்றும் வெளியூர்க ளுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது.
ஆனால் லாரி விபத்தில் சிக்கிய பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்ட தையடுத்து போலீசார் அந்த பகுதியில் நின்று அதை சரி செய்யும் பணியை மேற் கொண்டனர். காலை நேரம் என்பதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து சென்றன.
விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியை போலீசார் மேற்கொண்ட னர். லாரியில் இருந்த மாட்டு தீவன மூட்டைகள் இறக்கி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து கிரைன் மூலமாக லாரியை அகற்றும் பணியை போலீசார் மேற் கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் லாரியினுடைய ஸ்டேரிங் உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக லாரி டிரைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத் திற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்
- கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் : தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பரமசிவத்திற்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது பாளையங்கோட்டை ஜெயிலில் பரமசிவம் அடைக்கப்பட்டுள்ளார். பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.
இந்த நிலையில் இருவரும் முன் ஜமீன் பெற்றனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஹரிசுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மனை ஹரிசின் உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியுள்ளனர். மேலும் ப்ரீத்திக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தினை போல் மத்திய அரசும்,
- தமிழ்நாடு அரசும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக இயற்றிட வேண்டும்,
நாகர்கோவில் : ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தினை போல் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக இயற்றிட வேண்டும், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் பிராந்திய மொழி மக்களின் உணர்வுகளை உணராமல் பொது மக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நலன்க ளுக்கு எதிராக உள்ள பிரிவுகளை பொறுத்து வழக்கறிஞர்கள் சங்கங்களையோ பார் கவுன்சிலையோ கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மசோதாக்களை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆளுங்கட்சியின் ஆதரவு உள்ள அடிப்படையில் எந்தவித திருத்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப் பட் டதனை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி யும், சென்னை உயர் நீதி மன்றம் பல்வேறு வழக்கு களை இ பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாய மாக்கப்பட்டுள்ளதனை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று நாகர்கோ வில் வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல் சங்க தலைவர் பாலஜனாதிபதி தலைமை யில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதுபோல் குழித்துறை, தக்கலை, இரணியல், பூதப்பாண்டி உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபட்டனர்.
- குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது
- மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது
நாகர்கோவில் : விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு பெரும் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே விஜய்வசந்த் எம்.பி., தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொ டர்பு கொண்டு சாலைகளை விரைவில் செப்பனிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் மக்கள் படும் சிரமங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். ஏற்கனவே குழித்துறை, மார்த்தாண்டம் பகுதியில் ஏற்பட்ட பெரிய பள்ளங்களை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் மற்ற இடங்களிலும் சாலைகள் செப்பனிடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






