search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்ரம் பிரபுவின் புதிய படம் வெளியீடு பிரபு அறக்கட்டளையினர்  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    விக்ரம் பிரபுவின் புதிய படம் வெளியீடு பிரபு அறக்கட்டளையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • நடிகர் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு திரைப்படம் நாகர்கோவில் வள்ளி திரையரங்கில் திரையிடப்பட்டது.
    • பிரபு அறக்கட்டளையின் தலைவர் சி.டி.ஆர்.சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நாகர்கோவில் : நடிகர் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு திரைப்படம் நாகர்கோவில் வள்ளி திரையரங்கில் திரையிடப்பட்டது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியில் திரைப்படத்தை பார்த்து கண்டுகளிக்க வந்த ரசிகர்களை குமரி மாவட்டபிரபு அறக்கட்டளையின் தலைவர் சி.டி.ஆர்.சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு மன்ற தலைவர் கருத்திருமன், செயற்குழு உறுப்பினர்கள் சுரேந்திரன், சுந்தர், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் 46-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வீரசூரபெருமாள், துணை செயலாளர்கள் சத்யன், சுகுமாரன், சட்ட ஆலோசகர் வக்கீல் ரெங்கன், செயற்குழு உறுப்பினர் பாபு வெங்கடேஷ் மற்றும் குமரி மாவட்ட நடிகர் சிவாஜி கணேசன் நற்பணி மன்ற நிர்வாகிகள், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×