என் மலர்
கன்னியாகுமரி
- குமரி கடற்கரை கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
- கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது
நாகர்கோவில் :
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் இன்று மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களில் இன்று மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து காலையில் அந்தந்த பகுதியில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகு வள்ளங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.
குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் துறைமுகங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விசைப்படகுகளுக்கு பங்கு தந்தைகள் அர்ச்சிப்பு செய்ததுடன் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இன்று நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டிகள் நடந்தது. கொட்டில்பாடு கிராமத்தில் கடல் மீன் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணியப்பன் தலைமையில் இன்று காலை திருப்பலி நடந்தது.
பங்கு தந்தை யூஜின் தாமஸ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பங்கு மக்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. கடலில் மீனவர்கள் மலர் தூவியும் வழிபட்டனர்.
பள்ளம் புனித மத்தேயூ ஆலயத்தில் பங்குத்தந்தை சகாய ஆண்டனி தலைமையில் திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. அன்னை நகர் அற்புதநாயகி ஆலயத்தில் பங்கு ரேமண்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
உலக மீனவர் தினத்தையொட்டி இணையம் புத்தன்துறையில் உலக மீனவர் தின பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை, கனிமொழி எம்.பி., விஜய்வசந்த் எம்.பி., அமைச்சர்கள் மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை
- முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளது. அணைகள், குளங் கள் நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் குளங் கள் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ சாணி அணை பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையிலிருந்து வெளி யேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட் டுள்ளது.
அணையில் இருந்து 401 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 355 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு 1 அணை யிலிருந்தும் 129 கன அடி உபரிநீரும், 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டதால் சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 15.81 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.
- காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை மின் வினியோகம்
- தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி உபமின் நிலையத்துக்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறு நாள் (வியாழக் கிழமை) நடக் கிறது.
எனவே அன்று காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழம ணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக் கோட்டுப்பொத்தை, வாரி யூர், அகஸ்தீஸ்வரம், மருங் கூர், தேரூர், புது கிராமம், காக்கமூர், பொத் தையடி, தோப்பூர், ஊட்டு வாழ்மடம், தென்தாமரை குளம், பால்குளம், ராமனா திச்சன் புதூர், மேல கருப்புக் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- 24-ந்தேதி நடக்கிறது
- தேவைகள் அடங்கிய மனுக்களை குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் நேரில் வழங்கலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் மாதந்தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் நேரில் வழங்கலாம். பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். 24-ந்தேதி அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் அடுத்த மாதம் நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
- ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையான நேற்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. மாலை சாயரட்சை தீபாராதனையும், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடந்தது. பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை சங்கு ஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம்வர செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
- மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை
குளச்சல் :
மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு (பெடா), கோடிமுனை பங்கு பேர வை, பங்கு மக்கள் சார்பில் உலக மீனவர் தினம் கோரிக்கை மாநாடு மற்றும் கோடிமுனையில் மீன் பிடித்துறைமுகத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கோடி முனையில் ஊர் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்த லைவர் எனல்ராஜ், பெடா தலைவர் பிரிட்டோ ஆன்றனி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்றார். அவர் பேசியதாவது-
ஒவ்வொரு நாளும் இயற்கையுடன் போரிட்டு, அதே சமயம் மிகவும் இயற்கையை நேசித்து வாழ்பவர்கள் மீனவ மக்கள். மீனவர்களின் துயரங்களை ஏற்றுக் கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டி யவர்களை கொண் டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு மரியாதை தராமல், ஒடுக்கும் சூழலை நாம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.
சூழலியல் மாற்றத்தால் பனி பிரதேசத்தில் பனி உருகி கடல் மட்டம் உயரும் நிலை உள்ளது. கடல் மட்டம் உயரும் போது கடல் கரையில் இருக்கும் வீடுகள் அழியும் நிலை ஏற்படும். கடலில் மக்களின் வாழ்வி யலை பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு வந்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்த வீடுகள், கடற்கரை காணாமல் போகும் நிலை யை காண்கிறோம்.
மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட் டமாகவே உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு கடல் தாய் போன்றது. தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கி றது. மீனவர்கள் பாதிக்கப்ப டும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. மக்களை பிரித்தாளுவது, ஜாதி, மதத்தின் பெயரால் பிரச் சினைகளை உருவாக்கி காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் பிரிவினை ஏற்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
பிரிவினையால் பிரச்சி னைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது பெண்க ளும், குழந்தைகளும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண் டும். எந்த மதமாச்சரி யங்களும் இல் லாமல் அனைவரும் ஒற்று மையாக இந்த விழாவை கொண்டாடு கிறோம். இது தொடர வேண்டும். நாம் ஒன்றுப்பட்ட மனிதர்களாக வாழும் சூழ்நி லையை தொடர வேண்டும்.
ஒற்றுமையாக இருக்கும் போது, நம்மை பற்றி கவ லைப்படும் அரசு இருக் கும்போது கோரிக்கைகள் நிறைவேறும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டா லின் கடிதம் எழுதி உள்ளார். நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.
ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கையில் வைத்துள்ளார். சட்டசபையில் மசோதா நிறைவேற்றினால் அதை நிறுத்தி வைக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களுக்கு நலவாரி யம், தனித்துறை அமைக்கப் பட்டது கலைஞர் ஆட்சி யில்தான். தொடர்ந்து உங்களோடு நிற்கும் ஆட்சி, உங்களோடு கைகோர்த்து வரும் ஆட்சி. நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படு வார்கள்.
இவ்வாறு அவர் பேசி னார்.
மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தீர்மானத்தை பெடா பொதுச்செயலாளர் ராஜ் முன் மொழிந்தார். முன்னதாக குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமையில் சைமன்காலனி சந்திப்பில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், கோடிமுனை பங்குத்தந்தை சீலன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், தி.மு.க.தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், பசிலியான் நசரேத், கோடிமுனை ஊர் பொருளாளர் சுரேஷ், குழியாளி ஜாண்சன், பெடா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
- சுற்றுலா வந்த இடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராம் சுஷில் திவாரி பலியானது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
மத்திய பிரதேச மாநிலம் கோந்தாரி பச்சோகர் பகுதியை சேர்ந்தவர் ராம் சுஷில் திவாரி (வயது 70). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமார் 35 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இவர்கள் நேற்று காலையில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை பார்த்து விட்டு மதுரைக்கு செல்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
புனலூரில் இருந்து மதுரை செல்லும் ரெயிலுக்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். புனலூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு ரெயில் வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலில் ராம் சுஷில் திவாரி கழிவறைக்கு செல்வதற்காக ஏறினார். கழிவறைக்கு சென்று விட்டு அவர் இறங்குவதற்குள் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இதையடுத்து அவர் ரெயிலில் இருந்து குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராம் சுஷில் திவாரி ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.
தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராம் சுஷில் திவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவருடன் வந்தவர்கள் அனைவரும் சோகத்துடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.
சுற்றுலா வந்த இடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராம் சுஷில் திவாரி பலியானது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிகிச்சையில் இருந்த பாட்டியும் சாவு
- குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கன்னியாகுமரி,நவ.20-
கொட்டாரம் ராமர் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 31). இவர் தண்ணீர் கேன் போடும் டெம்போவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவரது பாட்டி புஷ்பம் (75) உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடன் இருந்து கவனித்து வந்த ஜவகர், பாட்டி இறந்து விடுவாரோ என்ற மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அதன் பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் பாட்டி புஷ்பமும் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து விட்டார். பேரனை தொடர்ந்து பாட்டியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
- 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு ஜோதி தெரு மற்றும் அதை சுற்றி சுமார் 13 தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு ஜோதி தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு மூலமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான மோட்டார் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. அடிக்கடி செயல்படாத நிலை இருந்ததால் புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக மண்டல தலைவரும், 16-வது வார்டு கவுன்சிலருமான ஜவகர் புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் தற்போது புதிய மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஜோதி தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள 13 தெருக்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கை
- 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
நாகர்கோவில், நவ.20-
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மனுக்களை கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மீனவர்களை பழங்குடிகளாக அங்கீகரிக்க வேண்டம் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு உடனே தொடங்க வேண்டும்.
தேங்காய்பட்டணம் துறைமுக வேலையை தணிக்கை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தி தரமான வேலையை விரைவாக நடத்தி மேலும் உயிர்ப்பலி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு அறிவித்தபடி மீன்பிடிக் கலன்களின் மீன்பிடி உரிமத்தின் கால அளவை பழையபடி 3 ஆண்டுகள் என்று மாற்ற வேண்டும். தமிழக துறைமுகங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்தி, வசதிகளை பெருக்கி, தமிழ்நாட்டு மீனவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த துறைமுகத்தையும் பயன்படுத்தச் செய்ய வேண்டுவது உள்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
- காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
- குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில், நவ.20-
குழித்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை முன்சிறை, காப்பு க்காடு. விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை. ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னி த்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம். மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோண சேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால்,பாத்திமா நகர், மெதுகும்மல், வெங்க ஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களிலும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன
- கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
நாகர்கோவில் :
மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாநிலம் முழுவதும் இன்று கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குமரி மாவட்ட குழு சார்பில், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளியை பராமரிக்கும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.






