பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி

கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
Published on

நாகர்கோவில், நவ.22-

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி குழுமத் தின் சேர்மன் பொன் ராபர்ட் சிங் அறிவுறுத்த லின்படி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், பொன்ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கும் யோகா பயிற்சி வகுப்பு கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் அருள்சன் டேனியல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஐசக் சாஜன், பொன் ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வாசு ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சிறப்பு ரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக யோகா மாஸ்டர் கோமதி பங்கேற்று யோகா பயிற்சியின் விளக்க உரை யும், செய்முறையையும் மாணவர்களுக்கு வழங்கி னார்.

இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட கூடைப்பந் தாட்ட கழக செயலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com