search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
    X

    குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

    • கோழிப்போர்விளையில் 132 மி.மீ. பதிவு
    • பேச்சிப்பாறை, சிற்றாரில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய, விடிய மழை பெய்தது. இதையடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டார்.

    தக்கலை கோழிப் ேபார்விளை பகுதியில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் கார ணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 132 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களியக்காவிளை, மார்த்தாண்டம், பேச்சிப்பா றை, கொட்டா ரம், மயிலாடி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலையோர கிராமங்களி லும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மலை யோர பகுதிகளில் உள்ள ரோடுகளை மூழ்க டித்து காட்டாற்று வெள்ளம் செல் கிறது. சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள னர். பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதை யாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரைக்கு செல்லக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிப் பதற்கான தடை நீடிக்கப்பட் டுள்ளது. 4-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற் றம் அடைந்து உள்ளனர். நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது கன மழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழையின் காரணமாக நாகர்கோவில் உள்ள சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினார்கள். தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாகர்கோவில் நகர பகுதியில் கோட்டார், வடசேரி பகுதிகளில் சாக்கடை நீர் நிரம்பி மழை நீருடன் ரோட்டில் சென்றது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக இருந்தது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியா கவும், 509 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.41 அடியாக உள்ளது. அணைக்கு 576 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 480 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 17.09 அடியாக உயர்ந் துள்ளது. அணைக்கு 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும், 500 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாக உள்ளது. மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீர் உபரிநீராக வெளி யேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கூடல் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளள வான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. கடந்த 25 நாட்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 47, பெருஞ்சாணி 46.2, சிற்றாறு 1 -67.2, சிற்றாறு 2 87.6, பூதப்பாண்டி 60.6, களியல் 50, கன்னிமார் 42.4, கொட் டாரம் 48.4, குழித்துறை 41, மயிலாடி 62.4, நாகர்கோவில் 63.6, புத்தன் அணை 42.8, சுருளோடு 58.6, தக்கலை 122.4, குளச்சல் 18.6, இரணியல் 34.2, பாலமோர் 22.4, மாம்பழத்துறையாறு 6.4, திற்பரப்பு 53.8, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப்போர்விளை 132, அடையாமடை 63, குருந் தன்கோடு 66.2, முள் ளங்கினாவிளை 6,7 ஆணைக்கிடங்கு 95.4, முக்க டல் 47.2.

    Next Story
    ×