என் மலர்
கன்னியாகுமரி
- 12-ந்தேதி நடக்கிறது
- போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாகர்கோவில்
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படவுள்ள சப்-இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரித் தேர்வு வருகிற 12-ந்தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழிகாட்டும் மையம் மூலமாக கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இரு தேர்வுகளாக (தமிழ் தகுதித்தேர்வு மற்றும் சார்பு ஆய்வாளர் எழுத்துத்தேர்வு) நடைபெற உள்ள இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம், நாகர்கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இவ்வலுவலக டெலிகிராம் சேனல் மூலமோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்கு நாளை (10-ந் தேதி) கடைசி நாள் ஆகும்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளமான https://tamilnaducareerservices.tn.gov.in-ல் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ப வர்கள் தேர்வு நடைபெறும் நாளான 12-ந் தேதி அன்று காலை 8.30 மணியளவில் சார் ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்-1, ஆதார் நகல்-1, புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை நடைபெறும்
- அனைத்து விதமான மலர்கள் கொண்டு மலர் முழுக்கு தொடங்குகிறது.
தோவாளை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள்(11-ந்தேதி) மலர் முழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 54-வது மலர் முழுக்கு விழாவை முன்னிட்டு அதிகாலையில் காக்கும் விநாயகர் கோவி லில் கணபதி வேள்வி நடத்தப்படு கிறது. தொ டர்ந்து சுப்ரமணிய சுவா மிக்கு திருநீர் முழுக்கு நடக்கிறது.
இதை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்பு பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு அனைத்து விதமான மலர்கள் கொண்டு மலர் முழுக்கு தொடங்குகிறது.
நள்ளிரவு முருகப்பெரு மான் தோகை மயில் முருகப் பெருமானாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன் பின்பு அருள்பிரசாதம் வழங்கப்படும். நிகழ்ச்சியை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மலர் முழுக்கு ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.
- கதவை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லு விளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூசாரியாக சமுத்திரராஜன் உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலின் கதவை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம் போல் 7.30 மணி அளவில் பூஜை செய்வ தற்காக சமுத்திரராஜன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கோவி லுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு முத்தாரம்மன் நெற்றியில் உள்ள 4 கிராம் எடை கொண்ட 2 தங்க பொட்டுகளும், 8 கிராம் எடை கொண்ட 2 தங்க தாலி செயினும், கோவிலில் இருந்த 8 வெண்கல குத்து விளக்குகளும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தின் தலைவர் நாகராஜனுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவிலுக்கு வந்த அவர், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் முழுவதையும் சுற்றி பார்த்தனர். கொள்ளை சம்பவம் குறித்து கூறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள பத்திர காளியம்மன் கோவிலின் முன்பக்க கதவையும் கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 2 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- நடைபயணத்தை தொடர அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார்.
நாகர்கோவில் :
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அவர் தனது நடைபயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த மாதம்(ஜூலை) 28-ந்தேதி தொடங்கினார்.
இந்நிலையில் அண்ணா மலையில் நடைபயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட் டன. அதன்படி மதுரை திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் பகுதியில் நடை பயணம் கடந்த 8-ந்தேதிக்கு பதிலாக 6-ந்தேதியே முடிக்கப்பட்டது. 7 மற்றும் 8-ந்ேததி அண்ணாமலையில் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.
தனது நடைபயணத்தை தொடர அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
15 -ந்தேதி காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யிலிருந்து தனது நடை பயணத்தை தொடங்கும் அவர், அன்று மதியம் குழித்துறையில் சிறப்புரை ஆற்றுகிறார். பின்பு அன்றையதினம் மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, எருதூர் கடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.
17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதி யிலிருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுக்குறியில் சிறப்புரை ஆற்றுகிறார்.
18-ந் தேதி காலை நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து தனத நடைப யணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். பின்பு டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலைக்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக் குட்பட்ட கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, பழத்தோட்டம் வழியாக கொட்டாரத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் அண்ணாமலை சிறப்புரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது.
நடைபயணத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துகொள்ள உள்ளனர். அண்ணாமலை வருகை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அண்ணா மலை நடைபயணம் மேற்கொண்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்ப டுத்த பா.ஜ.க. நிர்வா கிகள் தயாராகி வருகிறார்கள்.
- கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது.
- சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமா வாசை, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும், வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள திருவி தாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும்.
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்ப டைய வேண்டும் என்ப தற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது.
அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்ப டும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படு கிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படு கிறது. பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழு வதும் செல்வச் செழிப்பு ஏற்படும், நெற்கதிர் மணி களை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும் என்பது ஐதீகம்.
நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவைநடக்கிறது. நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணி விக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- விழாவில் 59 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
- பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை உஷா நிர்மலா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 59 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெஜிகுமாரி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சற்குரு கண்ணன், ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி டேனியல் ரஞ்சன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- 64 புதிய பாலங்களும் கட்டப்படுகின்றன
- நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது
நாகர்கோவில் :
நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை இரு வழிச்சாலையாக உள்ளது . இந்த சாலையில் தினமும் ஆறு வழி பாதையில் செல் லும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.
இதையடுத்து கன்னியா குமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது. மீதமுள்ள 500 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டது. குழித்துறையில் மிகப்பெரிய பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும், நாகர்கோவில் அருகே ரெயில்வே பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டாலும் அந்த பாலத்தின் இரு புறமும் மணல்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்த பகுதியில் மணல்கள் நிரப்பப்படாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொற்றையடியில் இருந்து புத்தேரி குளத்தின் கரை வரை உள்ள 4 வழி சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பாலப்பணி முற்றிலும் முடிவடையும் பட்சத்தில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வழியாக வாகனங்கள் சென்றால் நாகர்கோவில் நகரில் போக்கு வரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. அப்டா மார்க்கெட் மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் வாகனங்கள் கன்னியாகுமரியில் இருந்து இந்த புறவழிச்சாலை வழியாக சென்று விடலாம். தற்பொழுது இந்த சாலை பணியை பொருத்த மட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. மீண்டும் இந்த பணியை தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து குளத்தின் மேல் பாலம் அமைக்கும் பணி உட்பட பல்வேறு இடங்களில் ராட்சத பாலங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக புத்தேரி குளத்தில் மிகப்பெரிய பாலம் அமைக்கப்படுகிறது. 450 மீட்டர் நீளத்திற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்படுகிறது.
இதே போல் தோட்டியோடு பகுதியில் 325 மீட்டர் நீளத்திற்கும் பொற்றையடி பகுதியில் 50 மீட்டர் நீளத்திற்கும் குளத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. வழுக்கம் பாறை பகுதியில் 4 வழிச்சா லையின் மேல் மேம்பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொ ழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 இடங்களில் பெரிய பாலமும், 16 இடங் களில் சிறிய பாலமும், அதைவிட சிறிய பாலங்கள் என மொத்தம் 64 பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. 4 வழிச்சாலை பணியை 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த 4 வழிச்சாலை குமரி மாவட்டத்தின் முதுகெலும் பாக விளங்கும். போக்கு வரத்து நெருக்கடியும் குறையும். இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. குளங்களில் மணல் நிரப்பாமல் இருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் குளத்தின் நடுவே பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். பாலம் அமைக்கப்படும்போது குளத்தின் இருபுறமும் மணல்கள் நிரப்பிவிட்டு நடுவே பாலங்கள் அமைக்கப்படும்.
அதன் பிறகு அந்த மணல்கள் அகற்றப்படும். மணல் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது பக்கத்து மாவட்டங்களில் இருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. பணிகளை இந்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். பணிகள் தொடங்கப்படும் போது முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகளுக்குள் பணி நிறைவு பெறும் என்றார்.
- அம்மனின் முகத்தில் வெயில் அடிக்கும்போது தான் பூஜைகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
- கோவிலை பராமரிக்கவும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
கன்னியாகுமரி, ஆக.9-
சாமித்தோப்பு உப்ப ளத்தின் நடுவே பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெயில் காத்த அம்மன் கோவில் உள்ளது. பகல் 12 மணிக்கு இந்த கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனின் முகத்தில் வெயில் அடிக்கும்போது தான் பூஜைகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பழமை வாய்ந்த இந்த கோவிலில் நீண்ட காலமாக மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று வடக்கு தாமரைகுளம் பகுதி மக்கள், தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக இந்த கோவிலை பராமரிக்கவும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி நேரில் சென்று பார்வையிட்டதோடு பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அவருடன் ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசம்பத், வடக்கு தாமரைகுளம் கிளை செயலாளர் மணி உள்பட பலர் சென்றனர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- கடற்கரையில் தடுப்புசுவர் அமைத்தல், நடைபாதையில் அலங்கார தரைகற்கள் பதித்தல்
கன்னியாகுமரி, ஆக.9-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவுவாசல் வழியாக அனுமதிக்கப் படுகிறார்கள். இந்த கோவிலின் கிழக்கு வாசல், ஆடி அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகம், நவராத்திரி விஜய தசமி, கார்த்திகை தீபத் திருவிழா ஆகிய 5 முக்கியமான விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படுகிறது.
இந்த கோவிலின் கிழக்கு வாசல் பகுதி நீண்ட கால மாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த னர். இதைத் தொடர்ந்து கிழக்கு வாசல் பகுதி பக்தர்களின் நன்கொடையின் மூலம் ரூ.10 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புசுவர் அமைத்தல், நடைபாதையில் அலங்கார தரைகற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. இந்த மறுசீரமைப்பு பணியின் தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் கலந்து கொண்டு மறுசீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பா ளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலா ளருமான ஆனந்த், குமரி மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர்கள் சுந்தரி, துளசிதரன், கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி, வியாபாரி கள் சங்க நிர்வாகி முருகா னந்தம், கோவில்களின் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் குத்தகைதாரர்கள் கணே சன், ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
- சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி :
கொல்லங்கோடு அருகே உள்ள வாறுவிளை வீடு மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62). கூலி தொழிலாளி யான இவர் நேற்று முன்தினம் வள்ளவிளை பகுதியில் உள்ள ஒரு படகு பழுது பார்க்கும் இடத்தில் உள்ள மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டு உடைந்து கீழே விழுந்தது. இதில் பாலகிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி லில்லீபாய் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
- கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்
நாகர்கோவில் :
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், முஞ்சிறை ஒன்றிய காங்கிரஸ் கவுன்சி லர் பேபி ஜான், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் செய லாளர் சூசைராஜ், தூத்தூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஜின் உள்ளிட்டோர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம், மீன் பிடிதொழிலையே வாழ்வாதாரமாக கொண்ட மேற்கு கடற்கரை கிராமங்fளில் வாழும் மீனவ மக்களுக்காக அமைக்கப்பட் டது. இந்த துறைமுகத்தின் கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 3 கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி, ரூ.116 கோடி என மொத்தம் ரூ.253 கோடிக்கான அர சாணை பிறப்பித்து ஒப்பந்தம் கோரப்பட்டு துறைமுகம் மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென இந்த பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் கற்கள் கொட்டப்பட்டு துறைமுக மறு சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் தொடர்ந்து கடலில் போடப்பட்ட கற்கள் அனைத்தும் கடலுக்குள் அடித்து செல்லப்பட் டுள்ளது. இதனால் துறைமுக நுழைவாயில் வழியாக மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மீன வர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்கு துறை முக கட்டமைப்பு பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கூறியதாவது:-
தேங்காப்பட்டணம் துறைமுக மறுகட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக் கும் என்று கூறி பணிசுள் நடக்காமல் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடல் சீற்றம் அதிகமாக இல்லை.
எனவே துறைமுக கட்டு மானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும். மீண்டும் மீன வர்கள் உயிரி ழப்பு ஏற்படாத வகையில் கட்டமைப்புகளை மேற் கொள்ள வேண்டும். இந்த பணிகளை காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். துறைமுக மறு சீரமைப்பு பணிக்காக கற்கள் பிரச்சினை ஏற்பட் டது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் துறைமுக கட்டுமான பணிக்கு கற்கள் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்
- அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன், சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட் டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் மிக குறைந்த அளவு நோயாளிகள் வந்து மருந்துகளை வாங்கிவிட்டு வீடு திரும்பும் நிலை இருந்து வந்தது. தற்போது ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வகுப்புகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பயின்று வருகிறார்கள். பல்வேறு வகையான அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த சூழலில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்கு றையால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சீட்டு எடுப்பதற்கும், டாக்டரை சந்திப்பதற்கும், மருந்துகள் வாங்குவதற்கும், அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
வெளி மாவட்டத்தில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகி றார்கள். 9 டாக்டர்கள் இருக்கும் இடத்தில் 3 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள இடங்களில் மருத்து வக்கல்லூரி பேராசிரியர்களை வைத்து தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






