என் மலர்
உள்ளூர் செய்திகள்

படகு பழுது பார்க்கும் இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
- மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
- சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி :
கொல்லங்கோடு அருகே உள்ள வாறுவிளை வீடு மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62). கூலி தொழிலாளி யான இவர் நேற்று முன்தினம் வள்ளவிளை பகுதியில் உள்ள ஒரு படகு பழுது பார்க்கும் இடத்தில் உள்ள மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டு உடைந்து கீழே விழுந்தது. இதில் பாலகிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி லில்லீபாய் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






