எஸ்.ஐ. போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

12-ந்தேதி நடக்கிறது போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எஸ்.ஐ. போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு
Published on

நாகர்கோவில்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படவுள்ள சப்-இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரித் தேர்வு வருகிற 12-ந்தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழிகாட்டும் மையம் மூலமாக கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இரு தேர்வுகளாக (தமிழ் தகுதித்தேர்வு மற்றும் சார்பு ஆய்வாளர் எழுத்துத்தேர்வு) நடைபெற உள்ள இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம், நாகர்கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இவ்வலுவலக டெலிகிராம் சேனல் மூலமோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்கு நாளை (10-ந் தேதி) கடைசி நாள் ஆகும்.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளமான https://tamilnaducareerservices.tn.gov.in-ல் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ப வர்கள் தேர்வு நடைபெறும் நாளான 12-ந் தேதி அன்று காலை 8.30 மணியளவில் சார் ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்-1, ஆதார் நகல்-1, புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com