search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என் மண் என் மக்கள் நடை பயணம் - குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் அண்ணாமலை பேசுகிறார்
    X

    என் மண் என் மக்கள்' நடை பயணம் - குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் அண்ணாமலை பேசுகிறார்

    • குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • நடைபயணத்தை தொடர அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில் :

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அவர் தனது நடைபயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த மாதம்(ஜூலை) 28-ந்தேதி தொடங்கினார்.

    இந்நிலையில் அண்ணா மலையில் நடைபயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட் டன. அதன்படி மதுரை திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் பகுதியில் நடை பயணம் கடந்த 8-ந்தேதிக்கு பதிலாக 6-ந்தேதியே முடிக்கப்பட்டது. 7 மற்றும் 8-ந்ேததி அண்ணாமலையில் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.

    தனது நடைபயணத்தை தொடர அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

    15 -ந்தேதி காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யிலிருந்து தனது நடை பயணத்தை தொடங்கும் அவர், அன்று மதியம் குழித்துறையில் சிறப்புரை ஆற்றுகிறார். பின்பு அன்றையதினம் மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, எருதூர் கடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதி யிலிருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுக்குறியில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    18-ந் தேதி காலை நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து தனத நடைப யணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். பின்பு டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலைக்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக் குட்பட்ட கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, பழத்தோட்டம் வழியாக கொட்டாரத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் அண்ணாமலை சிறப்புரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது.

    நடைபயணத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துகொள்ள உள்ளனர். அண்ணாமலை வருகை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அண்ணா மலை நடைபயணம் மேற்கொண்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்ப டுத்த பா.ஜ.க. நிர்வா கிகள் தயாராகி வருகிறார்கள்.

    Next Story
    ×