என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வசந்த் அன் கோ சார்பில் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த் எம்.பி. வழங்கினர்
    • மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

    நாகர்கோவில், ஆக.12-

    வசந்த் அன் கோ சார்பில் குமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளிகளில் முதலிடம் பிடித்த 500 மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது.

    விழாவை வசந்த் அன்கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த் எம்.பி. ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதைத்தொ டர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்க ளையும், பரிசுகளையும் வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி.பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

    மாணவர்கள் இவ்வளவு முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் கடுமையான உழைப்பு தான். அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அவர்கள் சக மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதை பெருமையாக கருதுகிறோம். இதற்கு முக்கிய காரணம் என்னுடைய அம்மா தான். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சகோதரனும் சகோதரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொ ள்கிறேன்.

    மாணவர்கள் மென்மே லும் வளர வேண்டும். படிப்புடன் மட்டும் இருந்துவிடாமல் விளை யாட்டு உட்பட அனைத்து திறமைகளையும் மாண வர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளை யாட்டை ஊக்குவிக்கவும் வசந்த் அன் கோ சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நான் சிறு வயதாக இருந்தபோதே எனது தந்தை தொழில் விஷயமாக சென்றுவிடுவார். தற்பொழுது எங்களை விட்டு சென்று விட்டார். இருப்பினும் எங்களுடைய அம்மா தான் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். அவருக்கு நான் நன்றி கடன் பெற்றுள்ளேன்.

    மாணவர்கள் பெற்றோர்களை மறந்து விடக்கூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை உயர்த்தியவர் என்னுடைய தாயார் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட் டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வசந்த் அன்கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் கூறுகையில், எனது கணவர் வசந்தகுமார் விட்டு சென்ற பணிகளை எனது மகன் விஜய்வசந்த் செய்வதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில் காங்கி ரஸ் மாநகர் மாவட்ட தலை வர் நவீன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    • விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
    • 9-ம் திருவிழாவான 19-ந்தேதி பகல் 11 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில், ஆக.12-

    நாகர்கோவில் புதுக்குடி யிருப்பு புனித ஆரோக்கி யநாதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் மற்றும் திருவிழா திருப்பலி நடைபெற்றது. பங்குத் தந்தை ஸ்டீபன் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை சாம் மேத்யூ அருளுரை வழங்கினார்.

    இன்று (12-ந்தேதி) காலை 6.30 மணிக்கு திருப்பலி திருமுழுக்கு நடந்தது. மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, விழா திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், பரிசு வழங்குதல் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவில் 9-ம் திருவிழாவான 19-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருவிழா ஆடம்பர திருவிழா திருப்பலி, பகல் 11 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.

    பின்னர் இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கம், 7.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குமக்கள் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகின்றனர்.

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது
    • தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, இஞ்சி, மிளகாய்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளிலும் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனையானது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. தக்காளியின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக மாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் சரிய தொடங்கியுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு ஏற்கனவே பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், நெல்லை மாவட்டம் பணக்குடி, வள்ளியூர் பகுதி யில் இருந்தும் அதிகளவு தக்காளி அப்டா மார்க்கெட டில் விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளியின் விலை தினமும் குறைந்து வருகிறது.

    நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.10 சரிந்து ரூ.70 ஆக குறைந் துள்ளது. மேலும் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரி வித்துள்ள னர். தக்கா ளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் இஞ்சி விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.250 ஆக சரிந்துள்ளது. புதிதாக வரக்கூடிய இஞ்சி கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை ஆகிறது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் சரிய தொடங்கியுள்ளது. கிலோ ரூ.120 வரை விற்கப்பட்ட சிறிய வெங்காயம் இன்று ரூ.90 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் அனைத்து காய்கறிகளையும் விலை குறைந்துள்ளது. நாகர்கோ வில் மார்க்கெட்டில் விற்ப னையான காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.80, மிளகாய் ரூ.60, சேனை ரூ.65, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, தடியங்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சவ்சவ் ரூ.40, பீட்ரூட் ரூ.40, உள்ளி ரூ.90, பல்லாரி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.30 விற்பனையானது.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
    • சுசீந்திரம் கோவிலில் ரூ.2 கோடியே 33 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். குமரி மாவட்ட திருக்கோவில் களின் மராமத்து பிரிவு பொறியாளர்கள் ராஜ் குமார், அய்யப்பன், திருக்கோவில்களின் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், குமரி மாவட்ட திருக்கோவில் களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவராக பொறுப் பேற்ற பிறகு இதுவரை 260 கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பல இடங்களில் ஆக்கிரமிப் பாளர்கள் கோவில் சொத்துக்களை ஆக்கிர மித்து உள்ளனர். இவர்கள் தாமாக முன்வந்து கோவில் நிர்வா கத்திடம் ஆக்கிர மிப்பு நிலத்தை ஒப்படைக்க வேண் டும். இல்லையென் றால் நிலங்கள் அளவி டப்பட்டு மீட்டெடுக்கப் படும். சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் ரூ.2 கோடியே 33 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

    இந்த கோவிலில் 4 பிரகாரங்களிலும் புதிய கருங்கல் தளம் அமைத்தல், கோவில் தூய்மைப்படுத்து தல், மண்டபங்கள் சீர மைப்பு, மின் இணைப்புகள் சீரமைப்பு, கோவில் விமானங்கள் சீரமைப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட் டுள்ளது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் பத்மநாப சுவாமி கோவில், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், பறக்கை மதுசூதன பெரு மாள் சுவாமி கோவில், திப்பரமலை கரியமா ணிக்கத் தாழ்வார் கோவில் மற்றும் பன்னிப்பாகம் மகாதேவர் கோவில் ஆகிய கோவில்களி லும் விரைவில் கும்பாபி ஷேகம் நடைபெறும்.

    இந்த ஆண்டு ரூ.7 கோடி செலவில் 100 திருக்கோ வில்களுக்கும், அடுத்த ஆண்டு ரூ.10 கோடி செலவில் 100 திருக்கோ வில்களுக்கும் கும்பாபிஷே கம் நடத்தப்ப டும். மேலும் குளம் சீர மைப்பு பணியில் சுசீந்திரம் கோவில் தெப் பக்குளம், பாத்திர குளம், திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோவில் தெப்பக்குளம், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்கு ளம், கன்னியாகுமரி பா பநாச தீர்த்த குளம், பீமநகரி கோவில் தெப்பகுளம் ஆகிய குளங்கள் விரைவில் முழுமையாக சீரமைக்கப் படும்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 27 தேர்களில் 8 தேர்களுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட் டுள்ளது. மேலும் மீதமுள்ள 19 தேர்களில் 16 தேர்களுக்கான பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க ஆர்டர் வழங்கப்பட்டுள் ளது.

    மேலும் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்து வந்த பிறகு ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படும் மானிய தொகை கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு ரூ.3 கோடியாக இருந்தது. இந்த மானியத்தொகை தற்போதைய அரசின் தொடக்கத்தில் ரூ.6 கோடியாகவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.8 கோடியாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடிமர பிரதிஷ்டை அரசின் வரை பட அனுமதி, தந்திரி மற்றும் ஸ்தபதி கருத்து களின் அடிப்படையிலும் செய்யப் பட்டுள்ளது.

    வருகிற நவம்பர் 24-ந்தேதி கொடிமரம் நிறுவப் பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. கோவில்களில் நடக் கும் திருப்பணிகளின் வேகத்தை அதிகரிக்க அதிகமான ஒப்பந்த தாரர்கள் நியமிக்கப்படு வார்கள்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ரெயில்கள் பராமரிப்பை கன்னியாகுமரி, ஊட்டுவாழ்மடத்திற்கு மாற்ற பரிசீலனை
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தொடங்கப்படுமா?

    நாகர்கோவில், ஆக.10-

    நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரெயில் நிலையத்தில் போதுமான பிளாட்பார வசதி இல்லாததால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 பிளாட்பாரங்கள், 3 பிட்லைன்கள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 2 பிட்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்களை பராமரிக்கவும் இரண்டு தண்டவாளங்கள் உள்ளது. இடநெருக்கடி காரணமாக ரெயில் பராமரிப்பை கன்னியாகுமரிக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார் கள்.

    இந்தநிலையில் இரட்டை ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையேதுரிதமாக நடந்து வருகிறது.

    இரட்டை ரெயில் பாதை பணியை முடிக்கும் பட்சத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 4-வது, 5-வது பிளாட்பாரங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 மற்றும் 5-வது பிளாட்பாரத்தை தற்பொழுது ரெயில்கள் நிறுத்தி பராமரிக்கும் இடத்தை பிளாட்பாரங்களாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த பகுதிகள் மணல் நிரப்பி பிளாட்பாரங்களாக மாற்ற திட்டமிடப் பட்டுள் ளது. தற்பொ ழுது ரெயில்கள் நிறுத்தப்பட்டு பரா மரிக்கப்படும் இடம் பிளாட்பாரமாக மாற்றும் பட்சத்தில், ரெயில்களை பராம ரிக்க நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போதுமான இடவசதி இருக்காது. எனவே அந்த ரெயில்களை பராமரிப்பதற்கான இடத்தை ஊட்டுவாழ் மடம் பகுதியில் அமைக்கலாமா? என்பது குறித்து ரெயில்வே அதிகாரி கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதற்காக ஊட்டுவாழ்மடம் பகுதியில் இரண்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாமா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 தண்டவாளங்கள் உள்ளது. அங்கு தற்போது இரண்டு தண்டவாளங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தண்டவாளத்திலும் ரெயில்களை பராமரிக்க ஏற்பாடு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில்வே மேம்பாட்டு பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகளை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். இந்த மேம்பாட்டு பணிகள் நிறைவடையும் பட்சத்தில், நாகர்கோ வில் ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.

    நாகர்கோவில் டவுன் ரெயில் நிலை யத்தில் ஏற்கனவே இரண்டு தண்டவா ளங்கள் உள்ளது. அங்கு வளர்ச்சி பணி களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

    தற்போது சென்னையிலிருந்து நாகர்கோவில் டவுன் வழியாக கொல்லத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் அதிகமான பயணிகள் செல்வதால் டவுன் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    குழித்துறை மற்றும் இரணியல் ரெயில் நிலையங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். எனவே சென்னை செல்லும் ரெயில்களில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வந்தே பாரத் ரெயிலும் நாகர்கோவில் வரை வந்து செல்லும் பட்சத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மேலும் இடநெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக 4 மற்றும் 5-வது பிளாட்பாரம் அமைப்பதற்கான பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • குமரி மாவட்டம் வழியாக ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை கடத்தப்பட்டு வருகிறது.
    • ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    பூதப்பாண்டி, ஆக.12-

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு குமரி மாவட்டம் வழியாக ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் உணவு கடத்தல் பிரிவு தனி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் அனில்குமார் ஆகியோர் தெரிசனங்கோப்பு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை மறித்து சோதனை செய்தனர்.

    அப்போது டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். மேலும் அந்த டெம்போவில் சோதனை செய்தபோது அதில் கேர ளாவிற்கு கொண்டு செல்வ தற்காக 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டிருந்தது.

    இதுகுறித்து கோவில் தலைவர் ஸ்ரீதர் சிதம்பர நாதன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் உண்டி யலை உடைத்து பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சி.சி.டி.வி. காமிரா வில் பதிவாகி இருந்தது ஆலங் கோட்டை யை சேர்ந்த மகேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேஷை தேடி வந்தனர். போலீசார் தேடுவது அறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த மகேசை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பறக்கை அருகே புல்லுவிளை முத்தாரம்மன் கோவிலில் கதவை உடைத்து தங்க நகைகள், வெண்கல குத்துவிளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஈத்தாமொழி தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த அரவிந்த் பிரியன் (21) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப் பட்டவ ரிடம் இருந்து 4 குத்து விளக்குகள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியன் மீது ராஜாக்கமங்கலம், வெள்ளிச் சந்தை பகுதி களில் கோவில் களில் கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட வழக்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • செய்யப்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60) தொழி லாளி. இவர் சம்பவத்தன்று வெட்டுமடை பகுதியில் உள்ள அம்மன் கோவில் முன்பு தூங்கி கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு மது போதையில் வந்த கொட்டில்பாட்டை சேர்ந்த கவாஸ்கர் (25) நெல்லை மாவட்டம் களக்காடு சிதம் பரபுரத்தை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய இருவரும் கணேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கட்டையால் தாக்கியதில் கணேசன் இறந்தார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவாஸ்கர், சதீஷ் இருவரையும் கைது செய்த னர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சதீஷ், கவாஸ்கர் மீது வேறு சில வழக்குகளும் இருந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீத ருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கவாஸ் கர், சதீஷ் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஷ்டி தலைமையிலான போலீசார் நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டி ருந்த கவாஸ்கர், சதீஷ் இருவரையும் பாளை யங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

    • தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்துடன் பஸ்களை இயக்கி வருகிறது
    • ஒரு ரெயில் கூட கடந்த 9 ஆண்டுகளில் இயக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி இரவு நேர முன்பதிவு வசதி கொண்ட ரெயில் இயக்காத காரணத்தால் தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்துடன் பஸ்களை இயக்கி வருகிறது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இது மட்டுமில்லா மல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முனைய வசதிகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன. இந்த காரணத் தால் நெல்லை, மதுரை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும். கேரளா வழியாக சுற்று பாதையில் ரெயில்கள் இயக்குவதை கைவிட வேண்டும்.

    நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு தற்போது சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தில் பகல் நேர வந்தே பாரத் ரெயில் இயக்கப் பட்டால் பயண நேரம் சுமார் 8 முதல் 9 மணி நேரம் வரை ஆகும். பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி யிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 6 மணிக்கு செல்லுமாறு இரவு நேர வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். மறுமார்க்கமாக சென்னையி லிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருமாறு இயக்க வேண்டும்.

    இதனை தெற்கு ரெயில்வே புறக்கணித்தால் குமரி மாவட்ட மக்களை திரட்டி காங்கிரஸ் சார்பில் இரணியல் ரெயில்வே நிலையத்தில் ரெயில் மறியல் நடைபெறும். மேலும் வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருப்பதால் அதிக கட்ட ணத்துடன் இயக்கப்படுகிறது.

    மேலும் கன்னியாகுமரியில் இருந்து –வாரணாசி, திருப்பதி, ஹரித்துவார், ரிசிகேஷி, சீரடி, பூரி, அமிர்தசரஸ், துவாரகா ஆகிய ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஒரு ரெயில் கூட கடந்த 9 ஆண்டுகளில் இயக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    • 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடக்கிறது. விழா வில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடு கிறார்.

    பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார். சுதந்திர தின விழாவை யொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக ஆயுதப் படை மைதானத்தில் நடந்தது. இன்று நாகர்கோ வில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைய டுத்து மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் வெளியூர்க ளில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகி றார்கள்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து கடற்கரை கிரா மங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர காவல்துறையினர் நவீனபடகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    • இரவு பூஜை முடிந்து பூஜாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
    • கோவிலுக்கு வந்தபோது கோவில் கருவறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரத்தில் ஸ்ரீகன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜை முடிந்து பூஜாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று கோவிலுக்கு வந்தபோது கோவில் கருவறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பாப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.
    • கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.

    இந்த டெம்போவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன்-மனைவியான ராஜீவ் (வயது 31), டிஜினா (28) ஆகியோரும் அங்குள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை செய்வதற்காக சென்றனர். இந்த டெம்போ அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் செல்லும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் அந்த டெம்போவில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த டிஜினா (28) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் ராஜீவ் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி அந்த டெம்போவில் படுகாயத்துடன் இருந்த டிஜினாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×