என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • சகோதரிக்கு போனில் தகவல் கொடுத்து விட்டு தற்கொலை
    • போலீசார் விசாரணை

    நாகர்கோவில், ஆக.19-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குருசடி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ஆசீர்வாதம் (வயது 62), தொழிலாளி.

    இவரது மனைவி ரோஸ்மேரி. இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்தோணி ஆசீர்வாதம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். பின்னர் இதுபற்றி தனது சகோதரி சூசை அந்தோணிக்கு போனில் தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகனுடன், அண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு அந்தோணி ஆசீர்வாதம் மயங்கி கிடந்து உள்ளார்.

    அவரை, உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தோணி ஆசீர்வாதம் இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூசை அந்தோணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திலும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

    இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையமானது அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஏரளாமான பொதுமக்கள் குவித்தனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் பெயர் மற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்ட வைகளை திருத்தம் செய்து சென்றனர். மேலும் ஆதார் திருத்தம் செய்வதற்கு பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆதார் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.

    • கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்
    • மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் டிட்டோ. இவருக்கு சொந்தமான விசைப் படகு மூலம் கடந்த 5-ந் தேதி, 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது படகு திசை மாறி செல்வதை அவர்கள் உணர்ந்தனர். உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது, ராக்கப்பனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், நங்கூ ரமிட்டு படகை நிறுத்தினர். பின்னர் ராக்கப்பனை படகு மற்றும் கடலுக்குள் தேடினர். இதுகுறித்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேற்று தேங்காய் பட்ட ணம் துறைமுகத்துக்கு வந்த விசைப்படகு மீனவர்கள், ஆழ்கடலில் மாயமான மீனவர் ராக்கப்பனை கண்டு பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து மீனவர் ராக்கப்பனை தேடும் பணி 5-வது நாளாக இன்று நடைபெற்றது.

    • தாய் தந்தையரின் சமாதிகளுக்கு செல்லும் பாதை சம்மந்தமான பிரச்சினையில் முன் விரோதம்
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது55). இவர் விவசாயி. இவரது சகோதரர் குமரேசன் (65) என்பவர் இந்திய மணல் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது மேற்கு நெய்யூர் பகுதியில் வசித்து வருகிறார். இன்னொரு சகோதரர் விஜய ராஜ் (62) என்பவர் சென்னையில் ஒரு பிரபல கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது எறும்புக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கிடையே இவர்களின் தாய் தந்தையரின் சமாதிகளுக்கு செல்லும் பாதை சம்மந்தமான பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜனை அவரது அண்ணன்களான குமரேசன், விஜயராஜ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆசா பத்திரியில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பேவர்பிளாக் பதிப்பு
    • விரிவாக்கம் பணிகள் தீவிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம், நாகர் கோவிலில் சந்திப்பு, டவுன் என 2 ரெயில் நிலை யங்கள் உள்ளன.

    இதில் சந்திப்பு ரெயில் நிலையம் மிக முக்கியமானதாக விளங்கு கிறது. இங்கி ருந்து திருநெல்வேலி, திருவ னந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும், கன்னியாகுமரி செல்லும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. இது புதிய ரெயில்கள் இயக்கத்திற்கும் தடையாக அமைந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் புத்துயிர் பெற தொடங்கியது. அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதல் கட்டமாக செய்யப்பட்டன. மேலும் நாகர்கோவில் சந்திப்பில் ஏற்படும் இட நெருக்கடி பிரச்சி னையை தீர்க்க, திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி, சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்றவை சந்திப்பு ரெயில் நிலையம் வராமல், நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக செல்லும் வகையில் மாற்றப்பட்டது.

    இது தவிர நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரெயில், கோட்டயம் பகுதிகளுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் டவுன் நிலையத்தில் நின்று செல்கிறது. விரைவில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், சந்திப்பு ரெயில் நிலையம் வராமல் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளது. முக்கிய ரெயில்கள் டவுன் நிலையத்தில் நின்று செல்வதால், பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு முன்பதிவு மையம், பயணிகள் தங்கும் அறை, சிக்னல் மையம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து டவுன் நிலை யத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையம் வரும் பயணிகள், தங்கள் வாக னங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய வாசலில் பிரமாண்ட நுழைவு வரில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அளவீடு பணிகள் முடிந்துள்ளன.

    மேலும் நடைமேடையில் ஒரு சில இடங்களில் மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளால் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் புதுப்பொலிவை பெற்று வருகிறது.

    • வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி, 

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்சு தந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. 6-ம்வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவ- மாணவி களுக்கு"எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்" என்ற தலைப்பில்இந்த ஓவியப்போட்டி நடந்தது. இந்தப்போட்டிகளை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில்உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். .அவர்கள் தங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்களை ஓவியங்களாக வரைந்தனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் அதிகாரி மகாராஜாபிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களை யும் வழங்கினார்.

    ஓவியர் கோபால கிருஷ்ணன் நடுவராக இருந்து போட்டி யில்வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தார். இந்தநிகழ்ச்சியில் எழுத்தாளர் சரலூர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி, மணிக் கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிகா, ராஜாக்காமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலேஷ், காட்டா துறை அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஷானுகா, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லலிதா சிவத ர்ஷினி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரி வர்ஷினி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆராதனா, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, விவேகானந்தாகேந்திர வித்யாலயாபள்ளி மாணவர்விஷ்ணுசரண் ,புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர் அல்டாப் முகமது ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    • முன் பக்க சக்கரங்கள் உடைந்து தெறித்தன
    • கனரக லாரிகளை கட்டுப்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக பல்வேறு இடங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் முறையான அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.

    இதனை தடுத்து நிறுத்தும் படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் கடத்தல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மரண பயத்துடன் செல்கின்ற னர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் ராதாபுரத்தில் இருந்து வந்த கனரக லாரி, மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் மோதியது.

    இதில் மேம்பாலத்தின் நுழைவாயிலில் இருந்த பெயர் பலகை துண்டானது. மேலும் டாரஸ் லாரி யின் முன் பக்க 2 சக்க ரங்களும் துண்டாகி சென்று உள்ளது. லாரியின் முன்பக்கம் முழுவதும் கடுமையாக சிதைந்து சேதமடைந்து உள்ளது.

    இந்தச் சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த ஜெயராஜ் (வயது 42) காயம் அடைந்தார். அவரை லாரியின் உரிமை யாளர் மற்றும் சக டிரைவர்கள் அங்கிருந்து காரில் அழைத்துச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் லாரியில் துண்டான 2 சக்கரங்க ளையும் கிரேன் மூலம் தூக்கி இரவோடு இரவாக அகற்றியதோடு லாரியையும் சாலை ஓரத்தில் ஒதுக்கி உள்ளனர்.

    மேலும் 30 அடி உயரம் உள்ள பெயர் பலகையையும் கிரேன் மூலம் தூக்கி சாலை ஓரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு அப்பகுதியில் விபத்து நடக்காதது போன்று மாற்றி வைத்துள்ளனர்.

    மேலும் சாலை முழுவதும் லாரியில் இருந்த ஆயில் கொட்டி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்ற பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

    விபத்து சம்பவம் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட நிர்வாகமோ அல்லது போலீசாரோ கனரக லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. மாநாடு
    • விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநாட்டிற்கு பொதுமக்களும், தொண்டர்களும் அணி திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல கட்டமாக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவருகின்ற விதத்தில் யானை மீது நிர்வாகிகள் அமர்ந்தும், குதிரை மீது அமர்ந்தும் பொதுமக்களிடம் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டது. அதுபோன்று கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தலங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தோவாளை மலர் வணிக வளாகத்தில் மாநாட்டிற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் நடைபெற்றது.

    பிரசாரத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து மலர் வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகளிடமும் விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதிப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், நாகர்கோவில் வட்ட செயலாளர் வேலாயுதம் மற்றும் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்துசாமி ராஜேந்திரன், சபரி, முருகன், தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • செல்போன் வாங்கி கேட்டதாகவும் பெற்றோர் பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.
    • இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நுள்ளிவிளையை சேர்ந்த வர் அசோக். இவருக்கு சத்தியபிரியா என்ற மனை வியும், அபிஷேக் என்ற மகனும், அஸ்மிதா என்ற மகளும் உள்ளனர். அஸ்மிதா (வயது 17) நெய்யூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு முடிந்து விட்டு நர்சிங் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு வேண்டி செல்போன் வாங்கி கேட்டதாகவும் பெற்றோர் பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த அஸ்மிதா விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்மிதா உயிர் இழந்தார். இதுகுறித்து சத்தியபிரியா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • 2023-2024-ல் ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம் துறை மீனவ கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் கொல்லங்கோடு (இருப்பு மார்த்தாண்டம் துறை)க்கு சிகிச்சைக்கு செல்லவும், பேரிடர் காலங்களில் பாது காப்பான இடங்களுக்கு செல்லவும் வேண்டி உள்ளது. பிரதான சாலைக்கு செல்வதற்காக 4 கிலோ மீட்டர் பயண தூரத்தை தவிர்க்க மார்த்தாண்டம் துறை ஆலயம் முன் பகுதி யிலிருந்து துணை ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே பாலம் உள்ளது.

    ஆனால் மக்கள் பயன்படுத்த முடியாதபடி காணப்படும் இந்த பழுதடைந்த பாலத்தை மாற்றி புதிய உயர் மட்ட பாலம் அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர், நகராட்சி துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம் அமைக்க மூலதன மானிய நிதி 2023-2024-ல் ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பணிக்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு பால பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து தந்ததற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர், நகராட்சித்துறை அமைச்சர் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை ஆவணி முதல் ஞாயிறு
    • நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதனால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை (20-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்ற செல்லும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
    • 1½ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு

    நாகர்கோவில், ஆக.19-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மானேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அன்ட் அப்ளைடு நியூட் ரிஷன் நிறுவனமானது ஐஎஸ்ஓ 9001 2015 தரச் சான்று பெற்ற நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன் னாட்சி நிறுவனம். மேலும் இந்த நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அமெரிக்கன் கவுன்சில் ஆப் பிசினஸ் ஆல் அங் கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லைசீ நிகோலஸ் அப் பெர்ட் கேட்டரிங் நிறுவ னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஓட்டல் மானேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் சர்வே 2022-ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு

    மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. சிஇஓ வேல்ட் மேகசீன் நடத்திய உலக அளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13வது இடத்தில் இந்த நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

    இந்த புகழ்பெற்ற நிறு வனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு பிஎஸ்சி மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு, 1½ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 1½ ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடு தல் கைவினைஞர் உணவு மற்றும் பான சேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் முன் அலுவலக செயல்பாட்டில் பட்டய படிப்பு, ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டய படிப்பு, உணவு முறை மற் றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு போன்றவற்றில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்த உடன் நட்சத்திர விடுதிகள் விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற் றும் உயர்தர உணவகஙகள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

    இப்பயிற்சி பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியின இனத்தை சேர்ந்தவ ராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப் பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண் டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்ப டிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்ப டும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www. tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    ×