என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- சகோதரிக்கு போனில் தகவல் கொடுத்து விட்டு தற்கொலை
- போலீசார் விசாரணை
நாகர்கோவில், ஆக.19-
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குருசடி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ஆசீர்வாதம் (வயது 62), தொழிலாளி.
இவரது மனைவி ரோஸ்மேரி. இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்தோணி ஆசீர்வாதம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். பின்னர் இதுபற்றி தனது சகோதரி சூசை அந்தோணிக்கு போனில் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகனுடன், அண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு அந்தோணி ஆசீர்வாதம் மயங்கி கிடந்து உள்ளார்.
அவரை, உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தோணி ஆசீர்வாதம் இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூசை அந்தோணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






