search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி

    • வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி,

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்சு தந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. 6-ம்வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவ- மாணவி களுக்கு"எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்" என்ற தலைப்பில்இந்த ஓவியப்போட்டி நடந்தது. இந்தப்போட்டிகளை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில்உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். .அவர்கள் தங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்களை ஓவியங்களாக வரைந்தனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் அதிகாரி மகாராஜாபிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களை யும் வழங்கினார்.

    ஓவியர் கோபால கிருஷ்ணன் நடுவராக இருந்து போட்டி யில்வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தார். இந்தநிகழ்ச்சியில் எழுத்தாளர் சரலூர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி, மணிக் கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிகா, ராஜாக்காமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலேஷ், காட்டா துறை அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஷானுகா, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லலிதா சிவத ர்ஷினி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரி வர்ஷினி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆராதனா, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, விவேகானந்தாகேந்திர வித்யாலயாபள்ளி மாணவர்விஷ்ணுசரண் ,புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர் அல்டாப் முகமது ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×