என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை
- செல்போன் வாங்கி கேட்டதாகவும் பெற்றோர் பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.
- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே நுள்ளிவிளையை சேர்ந்த வர் அசோக். இவருக்கு சத்தியபிரியா என்ற மனை வியும், அபிஷேக் என்ற மகனும், அஸ்மிதா என்ற மகளும் உள்ளனர். அஸ்மிதா (வயது 17) நெய்யூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு முடிந்து விட்டு நர்சிங் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு வேண்டி செல்போன் வாங்கி கேட்டதாகவும் பெற்றோர் பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த அஸ்மிதா விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்மிதா உயிர் இழந்தார். இதுகுறித்து சத்தியபிரியா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






