என் மலர்
கன்னியாகுமரி
- இரவு 8.30 மணிக்கு அன்பின் சமபந்தி விருந்து நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப விழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் அதிகாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, காலை 6 மணிக்கு முன்னோர் நினைவு நன்றித்திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, 6.10 மணிக்கு அருட்பணியாளர் மார்சலின் டிபோரஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.புரம் பங்குதந்தை எட்வர்ட்ராயன் மறையுரையாற்றினார்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 29-ந்தேதி காலை 7 மணிக்கு பள்ளவிளை பங்குதந்தை பெஞ்சமின் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பின் சமபந்தி விருந்து நடக்கிறது.
30-ந்தேதி காலை 7 மணிக்கு கீழ ஆசாரிபள்ளம் பங்குதந்தை அருள்ஜோசப் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். சுங்கா ன்கடை மார்னிங் ஸ்டார் தொழில் நுட்ப கல்லூரி தாளாளர் பிறிம்மஸ்சிங் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு சுங்கா ன்கடை சவேரியார் பொறி யியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆரா தனையை நிறைவேற்று கிறார். கோட்டார் ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெல ஸ்டின் மறையுரை யாற்றுகி றார். இரவு 8.30 மணிக்கு புனிதரின் அல ங்கார தேர்பவனி நடை பெறுகிறது.
விழாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி காலை 8 மணிக்கு மணவிளை பங்குதந்தை ஜாண் பெல்லார்மின் தலைமை தாங்கி பெருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் மரிய வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு புனிதரின் தேர்பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சுதர்சன் மற்றும் பங்கு நிர்வாகிகள், சார்லஸ் இல்ல அருட்சகோதரிகள், பங்கு நிதிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன
- விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
என்.ஜி.ஓ.காலனி :
அகஸ்தீஸ்வரம் மற்றும் தென்தாமரைகுளம் பேரூராட்சிகளுக்குட்பட்ட தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன. இதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபுமாறச்சன் தலைமை தாங்கினார். பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ் மற்றும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்லூரியின் செயலாளர் ராஜன் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணிக்கண்ணன், ராஜதுரை, அஜந்தன், தங்கசாமி, சந்திரன், மாலைசூடும் பெருமாள் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் இன்று தொடங்கி வைத்தார்
- தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை
நாகர்கோவில் :
காலத்திற்கேற்ற வகை யில் புதிய உத்திகளைக் கையாண்டு பல வடிவமை ப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனைதீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.
குமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் குமரி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை இன்று காலை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்த ஆண்டு ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். மேலும் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள், திருப்பு வனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நாகர்கோ வில் குமரி விற்பனை நிலையம், தக்கலை விற்பனை நிலையம், மார்த்தாண்டம் விற்பனை நிலையம். கன்னியா குமரி விற்பனை நிலையம், மார்த்தாண்டம் வளாக விற்பனை குழு ஆகி யவை மூலம் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ரூ.2.83 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
தற்போது இந்த ஆண்டிற்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர் களிடமிருந்து பெறப்பட்டு 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி 12 மாதம் முடிவடைந்தவுடன் 30 சதவீதம் தள்ளுபடியுடன் மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விழாவில் தலைமை அலுவலக முதன்மை பொது மேலாளர் அலோக் பாப்லே, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டலமேலாளர், ராஜேஷ்குமார், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்பத்மராஜ் செய்திருந்தார்.
- பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
- புரட்டாசி மாதம் என்பதால் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.
ஆரல்வாய்மொழி :
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து பூக்கள் மாவட்டம் முழுவதும் மாநிலம் முழுவதும் திருவனந்தபுரம், வேளச்சேரி வழியாக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறது.
ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர்மாட நாடார் குடியிருப்பு, காவல்கிணறு உள்ளிட்ட பகுதியில் இருந்து பிச்சி பூவும், திண்டுக்கல் கொடைரோடு, வத்தலகுண்டு, மதுரை, மானாமதுரை, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மல்லிகை பூ, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலத்தில் இருந்து அரளி, தோவாளை, ராஜாவூர், செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் ஆகிய பகுதியிலிருந்து அரளி, சம்பங்கி, கோழி கொண்டை, தாமரை, அருகம்புல் ஆகிய பூக்கள் சந்தைக்கு வந்து வியாபாரம் நடக்கிறது.
புரட்டாசி மாதம் என்பதால் விசேஷ வீடுகளில் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.
பூச்சந்தையில் ஒரு தாமரை பூ ரூ.2-க்கும். சீசன் இல்லாததாலும் மல்லிகைப்பூ இல்லாத காரணத்தாலும் மல்லிகைப்பூ வரத்து குறைவு இதனால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப்பூ ரூ.600 அரளி ரூ.60, கனகாம்பரம் ரூ.300, முல்லை ரூ.500 மரிக்கொழுந்து ரூ.120, மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
- மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
- மீன் சந்தைகள் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே அரபிக்கடலோரம் அமைந்துள்ள கடற்கரை கிராமம் கோவளம். இங்கு மீனவர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித் தொழிலாகும். இந்திய பெருங்கடல், வங்க கடல் ஆகிய கடல்களை விட அரபிக்கடல் எப்போதுமே சீற்றமாகவே காணப்படும். இதனால் கோவளம் கடற்கரை கிராமத்தைச்சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக பாதுகாப்பான மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் கோவளம் மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று மீன் பிடிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. தற்போது நிலவிவரும் இந்த கடல் சீற்றம் காரணமாக கோவளம் மீனவர்கள் பக்கத்தில் உள்ள கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி கோவளம் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்து வருகிறது. இன்று2-வது நாளாக கோவளத்தில் கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கோவளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வதுநாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். கோவளம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கோவளத்தில் உள்ள மீன் சந்தைகள் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. கோவளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீன் ஏலம் எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் யாரும் கோவளத்துக்கு வரவில்லை.
- பயணிகள் உயிர் தப்பினர்
- போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு பஸ் 20 பயணிகளுடன் கோவளம் நோக்கி புறப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது "திடீர்"என்று ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
உடனே பஸ்சில் இருந்த 20 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பெரும் விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றினர். அதன்பிறகு பழுதடைந்து நின்ற பஸ்சை போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
- நெல்லுக்கு ஊக்கத்தொகை உள்பட தற்போது ரூ.1,970.50 விவசாயிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் குளத்து பாசனம் மற்றும் சானல் பாசனம் மூலம் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ என ஆண்டுக்கு இருமுறை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.
நெல் மணிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்வதற்காக பல பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த கொள்முதல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல் மணிகளை 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்வோம் என்றும் மற்றும் பல காரணங்களை கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை காத்திருக்க வைக்கின்றனர். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் அரிசி ஆலைகளில் தங்களுடைய நெல்மணிகளை விற்பனை செய்யப்படுகின்ற அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக அரசு ஒரு கோட்டை நெல்லுக்கு ஊக்கத்தொகை உள்பட தற்போது ரூ.1,970.50 விவசாயிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஒரு கிலோ ரூ.22.65 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் செய்கின்ற அதிகாரிகள் மறைமுகமாக விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு கோட்டை நெல்லுக்கு 5 கிலோ சாவி என கழித்து விடுகின்றனர். மேலும் ஒரு சாக்கு மூட்டையில் 40 கிலோ எடைக்கு பதிலாக 41.5 கிலோ எடை எடுத்து கொள்கின்றனர். ஆனால் கணக்கில் வைப்பது 40 கிலோ மட்டுமே ஆகும்.
மேலும் அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு அதற்கான தொகையினை குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வரை காலம் தாழ்த்தி கொடுக்கின்றனர். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள குளறுப்படிகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத் தில் பள்ளிக் கல்வித்துறை, நில அளவைத்துறை, பத்தி ரப்பதிவுத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துறை யின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தகுதி யான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வரு வாய்த்துறை யை சேர்ந்த கிராம நிர்வாக அலு வலர்கள், வருவாய் அலுவலர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் பொது மக்களிடமிருந்து தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை இடற்பாடுகள், மீனவர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அனைத்து அலு வலர்களும் தங்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிக ளிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய் துறை அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மீட்புபணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்பட்டது.
பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்படும் மீட்புபணிகள் குறித்தும், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், விபத்திலிருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொள்வது என்பது தொடர்பாகவும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரி டர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக கட்டிடம் மற்றும் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மீட்டல், நைலான் வலை மூலம் மீட்டல், சிறப்பு தளவாடங் கள் மற்றும் மீட்பு உப கரணங்கள் செயல்முறை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது. இதனை கூடுதல் தலைமை செயலா ளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிர மணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¾ அடி உயர்ந்தது
- பேச்சிப்பாறை 41.8, பெருஞ்சாணி 15.4, சிற்றாறு 1-27.6, சிற்றார் 2-12.8, களியல் 3.8, கன்னிமார் 2.4
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளங் களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.
தென்மேற்கு பருவமழை பொய்த்து போன கார ணத்தினால் பாசன குளங்களிலும், அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக காணப்பட்டது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில் இருந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்த னர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் னனர். தொடர்ந்து பெய்து வரும் மழையை நம்பி விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சுசீந்திரம், பறக்கை, பூதப்பாண்டி பகுதிகளில் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவை யான விதை நெல்களை தங்கு தடையின்றி வேளாண் துறை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 41.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ¾ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 1¾ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 20.19 அடியாக இருந்தது. அணைக்கு 1,262 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 585 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.80 அடியாக உள்ளது. அணைக்கு 742 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 41.8, பெருஞ்சாணி 15.4, சிற்றாறு 1-27.6, சிற்றார் 2-12.8, களியல் 3.8, கன்னிமார் 2.4, புத்தன்அணை 15, சுரு ளோடு 3, பாலமோர் 21.6, மாம்பழத்துறையாறு 2, திற்பரப்பு 4, முள்ளங்கினா விளை 3.2.
- நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
- இன்று புரட்டாசி சனிக்கிழமை
நாகர்கோவில் :
புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
புரட்டாசி முதல் சனிக் கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. வடி வீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் நீண்ட வரிசை யில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவி லில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்க ளுக்கு பிரசாதமும் வழங்கப் பட்டது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலி லும் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
திருப்பதிசாரம் திரு வாழ்மார்பன் கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா ஜலபதி கோவிலில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும், அதைத் தொடர்ந்து விசேஷ பூஜை களும், சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனை யும் நடந்தது.
இதில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு தோ மாலை சேவையும், அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகா கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியா குமரி பால கிருஷ்ண சாமி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோவிலில் பெருமாளை தரிசிப்பதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாத மும் வழங்கப்பட்டது.
- கலெக்டர் ஸ்ரீதர் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
- தமிழக அரசு மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அந்த நிதியை முறையாக செயல்படுத்தாததால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. கோவளத்தில் தற்போது தூண்டில் வளைவு அமைக்க ரூ.17 கோடியை 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த தூண்டில் வளைவை நேராக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் வளைத்து தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால் மீனவர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.எனவே அந்த தூண்டில் வளைவு பணியை நிறுத்துவதுடன் நேராக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.இதைத்தொடர்ந்து தூத்தூரை சேர்ந்த மீனவர் மரிய ஜஸ்டின் அவரது சகோதரர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எனது சகோதரர் வெளிநாட்டில் போலீசா ரால் படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட போது உடனடியாக மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் நேரடியாக வந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர்.அந்த நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை.எனவே இந்த நிவாரணம் எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போது எங்களுடைய வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்கொலை செய்து கொண்டதாகவே வழக்குப்பதிவு செய்துள்ள னர்.3 மாதங்களாக நித்தரவிளை போலீசார் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை தராமல் வைத்துள்ளனர். எனவே நித்திரவிளை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தோனேசியா காவல் படையினருக்கு நித்திரவிளை போலீசார் ஆதரவாக இருப்பது போன்று தோன்றுகிறது.எனவே உடனடியாக எனது சகோதரர் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். கள்ளச்சாராய சாவிற்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு வெளிநாட்டில் எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கு ரூ.3 லட்சம் வழங்கி உள்ளதை வேதனையாக உள்ளது. எனது சகோதரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான் ஆளுநரையும், மீனவள துறை கமிஷனையும் சந்தித்து பேசி உள்ளேன். இது தொடர்பாக 210 மனுக்கள் இதுவரை அளித்துள்ளேன். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலம் கடத்தினால் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு மாத காலத்திற்குள் கொலை வழக்காக மாற்றுவதுடன் உரிய நிவாரணம் வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தூண்டில் வளைவு பணியை நீட்டிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மறு திட்ட மதிப்பீடு தயாரித்து தான் அந்த பணியை மேற்கொள்ள முடியும். தூத்தூர் மீனவர் மரிய ஜஸ்டின் பலியானது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- பள்ளிவிளை கிங் மேக்கர் தெருவில் பயன்படாத குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்தது.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிவிளை கிங் மேக்கர் தெருவில் பயன்படாத குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி னார்கள். இதேபோல் மேலும் 2 இடங்களில் பயன் படாத குடிநீர் தொட்டிகள் பொதுமக்களுக்கு இடை யூறாக இருந்தது தெரிய வந்தது. அந்த குடிநீர் தொட்டி களையும் அகற்ற மேயர் மகேஷ் உத்தர விட்டுள்ளார். குறுந்தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது கழிவுநீர் ஓடையில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அந்த ஓடையை உடனடியாக சுத்தம் செய்ய மேயர் உத்தரவிட்டார்.
ராஜூ நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின் போது உதவி பொறியாளர் ராஜாசீலி, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர்கள் அனுஷா, பிரைட், மேரி ஜெனட் விஜிலா ஆகியோர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட சக்தி கார்டன், வாட்டர் லைன் தெருவில் ரூ.17 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் ஸ்ரீலிஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






