என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் வேலைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அவரது மகள் ரேணுகா (வயது 20), இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள கவரிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேணுகா மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் தனது மகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜெகநாதன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில் சின்னசேலம் அருகே பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கார் டிரைவர். அவரது மகள் சவுந்தர்யா (வயது 20). கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாககார் டிரைவர் சுரேசுக்கு சரியாக வேலை கிடைக்காததால் சவுந்தர்யா வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது செல்போனில் எதிர்முனையில் பேசிய ராஜேஷ் என்பவர் தங்களுடைய ஆதார் கார்டு, போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அலுவலக முகவரிக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய கல்லூரி மாணவி அங்கே சென்றார். அப்போது அங்கு இருந்த ராஜேஷ் தன்னை மேலாளர் என்றும், திலீப் குமார் உதவி மேலாளர் என்றும் கூறியதாகவும் மேலும் ரூ. 5 ஆயிரம் கட்டினால் அதற்கு ஏற்றவாறு வீட்டு உபயோக பொருட்களை தருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இதேபோல் பொருட்களை வாங்க ஆட்களை அழைத்து வந்தால் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 300 கமிஷன் தருவதாக கூறியுள்ளார். இதனை ஏற்று சவுந்தர்யா ரூ.5000 பணம் கட்டி கட்டி உள்ளார். மறுநாள் பொருட்களை வாங்க அலுவலகத்துக்கு சென்றபோது அலுவலகம் பூட்டப்படும் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர் செய்வதறியாது திகைத்து போனார்.
கடந்த 3-ந் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை பார்த்து தன்னை ஏமாற்றிய நபர்களாக இருக்கலாம் சந்தேகம் அடைந்த அவர் அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர் கள்ளக்குறிச்சி தனியார் விடுதியில் கூட்டம் நடைபெறுவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு சென்றபோது அங்கே ஏற்கனவே தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய ராஜேஷ் மற்றும் திலீப்குமார் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் ஏற்கனவே என்னிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு பொருட்களை தராமல் ஏமாற்றி விட்டீர்கள் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
தொடர்ந்து எனது பணத்தை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார். இதனால் பதட்டம் அடைந்த அவர்கள் நாளை வாருங்கள் பணம் தருகிறேன் என கூறினர்.
மீண்டும் அடுத்த நாள் சென்று பார்த்தபோது தனியார் விடுதியில் அறையை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து சவுந்தர்யா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) மற்றும் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் (22) என்பதும், இவர்கள் இந்தப் பெண்ணிடம் பணம் வாங்கி கொண்டு பொருட்களை தராமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கநந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
கச்சிராயப்பாளையம்:
வடக்கநந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இதில் 21 வாக்குச்சாவடி மையங்களில் உள்ளன.
இதில் 19827 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஐந்து உள்ளன இதில் அக்கராயபாளையம் அரசு ஆசாத் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார் அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஊழியர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.
வாக்களிக்க வரும் பொதுமக்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் முதியவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைசெய்து தர வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வலியுறுத்தினர் அதை தொடர்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகளில் 17. 18 .1 2 .3 .9 .என அக்கராயப்பாளையம் வடக்கநந்தல் அம்மாபேட்டை கச்சிராயப்பாளையம் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார் அப்போது பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் செயல் அலுவலர் ஆறுமுகம் தாசில்தார் ஆனந்தசயன் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆசிரியர்கள் தனசேகர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கச்சிராயப்பாளையம் முதல் தாவடிபட்டு வரை கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சிராப்பாளையம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் படிப்பதற்காக தாவடிபட்டு கரடிசித்தூர் செல்லம்பட்டு பால்ராம்பட்டு என சுற்றுப் புறங்களில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கச்சிராயபாளையம் பள்ளிகளில் வந்து படித்து விட்டு செல்கின்றனர் அப்படி செல்லும் வகையில் கச்சிராயபாளையம் முதல் தாவடிப்பட்டு வரை காலை 8. 30 மன்னிக்கும் மாலை 4.30 மணிக்கம் பஸ் இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்தில் தாவடிபட்டு கரடிசித்தூர் பால்ராம்பட்டு மாத்தூர் அம்மாபேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் கச்சிராயபாளையம் பள்ளிக்கு வந்து படித்து விட்டு மாலை வீடு செல்கின்றனர் அப்படி அந்த பேருந்தில் செல்லும்போது மாலை நேரங்களில் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்துஅதிக அளவில் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் செய்கிறார்கள் இதனால் போதுமான இடவசதி இல்லாமல் பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவ மாணவிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள்ஆகையால் 4:30 மணிக்கு பஸ் எண் 31 செல்லும் அரசுப் பேருந்து கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரைகள் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதனை சுற்றியுள்ள கிராம புறத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் படிக்கும் வேங்கைவாடி,சித்தலூர்,பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கள்ளக்குறிச்சி-கொட்டையூர் செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டுகள் மற்றும் பேருந்தின் பின்புறம் ஆபத்தான நிலையில் தொங்கியபடி 10 பள்ளி மாணவர்கள் சென்றனர்.
இது சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேருந்து படிக்கட்டு,பின்புறத்தில் தொங்கியபடி சென்ற 10 மாணவர்களை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அறிவுரைகள் வழங கினார்.மேலும் மாணவர்கள் இனிமேல் ஆபத்தான பயணம் செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பின்னர் என்ன மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பேனா வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா தியாகதுருகம் பேரூராட்சி அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கண்டாச்சிமங்கலம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த மாதம் 26 ந் தேதி வெளியிட்டார். அதன்படி கடந்த மாதம் 28 ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளுக்கு திமுக மற்றும் அதிமுக வினர் உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் திடீரென மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா பேரூராட்சி அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ் மற்றும் பிரபு ஆகியோர்களிடம் வேட்பு மனு பெறும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் எத்தனை பேர் அனுமதிக்கப்படுகின்றனர், இன்று எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை எத்தனை பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, வட்டார தேர்தல் பார்வையாளர் சிவக்கொழுந்து, பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதவாது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைஎண் 18004256803, திருக்கோவிலூர் நகராட்சி 91596 96219, உளுந்தூர்பேட்டை நகராட்சி 80980 94226, கள்ளக்குறிச்சி நகராட்சி 73973 89324, சின்னசேலம் பேரூராட்சி 78240 58350, சங்கராபுரம் பேரூராட்சி 78240 58355, தியாகதுருகம் பேரூராட்சி 782405 8356, மணலூர்பேட்டை பேரூராட்சி 78240 58353, வடக்கனந்தல் பேரூராட்சி 78240 58360 ஆகிய தொலைபேசி எண்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேற்கண்டவாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுதல் அதிகரித்து வந்ததை தடுப்பதற்காக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்க அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாயில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விரியூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள காட்டுக்கொட்டாயில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ஞானபிரசாத் (வயது 28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரம் போலீசார் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த சாராய ஊறல் திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பாளையத்தை சேர்ந்த, குமார் மற்றும் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகதுருகம் பேரூராட்சியில் 7,820 ஆண் வாக்காளர்களும், 8,289 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலினத்தவர் உள்ளிட்ட 16,110 வாக்காளர்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் ஊராட்சி 1953-ம் ஆண்டு, முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 1982- ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2004- ம் ஆண்டு சிறப்பு சிற்றூராட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு முதல் மீண்டும் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பேரூராட்சியில் 2011- ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,952 குடும்பங்கள் உள்ளன. இதில் 18,605 பேர் வசித்து வருகின்றனர். நகரின் மொத்த பரப்பளவு 11.69 சதுர கிலோ மீட்டராக உள்ளது.
தியாகதுருகம் பேரூராட்சியில் 7,820 ஆண் வாக்காளர்களும், 8,289 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலினத்தவர் உள்ளிட்ட 16,110 வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சியில் வார்டு எண் 1,4,6,8,10 ஆகியவைகள் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 2,7 ஆகியவைகள் ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 3,9,11,12,13,14 ஆகியவைகள் பெண்கள் பொது பிரிவினருக்கும், வார்டு எண் 5,15 ஆகியவைகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தமுறை பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த விஜயா ராஜி பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். துணைத் தலைவராக கன்னியம்மாள் கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தியாகதுருகம் பேரூராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 20 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தியாகதுருகம் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி இருந்தது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தியாகதுருகம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் நேரடி யாக போட்டியிடும் நிலை உள்ளது. மேலும் 2கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் தியாக துருகம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் தியாக துருகம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
1-வது வார்டு வெங்கடேசன், 2-வது வார்டு ஜெயக்குமார், 3-வது வார்டு மோகன், 4-வது வார்டு தாரா, 5-வது வார்டு அம்மு, 6-வது வார்டு ஜெய் முருகன், 7-வது வார்டு பழனியம்மாள், 8-வது வார்டு ராதாமணி, 9-வது வார்டு சுரேஷ்குமார், 10-வது வார்டு சுகந்தா, 11-வது வார்டு பாபு, 12-வது வார்டு கே.சத்தியா, 13-வது வார்டு ஏ.சத்தியா, 14-வது வார்டு விஜயசாந்தி, 15-வது வார்டு சுரேஷ், 16-வது வார்டு விமலா, 17-வது வார்டு அருண் குமார், 18-வது வார்டு சங்கீதா, 19-வது வார்டு முருகன், 20-வது வார்டு சுமதி, 21-வது வார்டு ராதிகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
1-வது வார்டு சங்கர், 2-வது வார்டு கலையரசி, 3-வது வார்டு கொளஞ்சியம்மாள், 4-வது வார்டு பாலமுரளி கிருஷ்ணன், 5-வது வார்டு அம்பிகா, 6-வது வார்டு துரைசாமி, 7-வது வார்டு ஏழுமலை, 8-வது வார்டு சதாசிவம், 9-வது வார்டு கீதா, 10-வது வார்டு கார்த்திகேயன், 11-வது வார்டு சூர்யா, 12- வது வார்டு மாதேஸ்வரி, 13-வது வார்டு வள்ளி, 14-வது வார்டு பானுமதி, 15-வது வார்டு மீனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.