என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக கள்ளக்குறிச்சி போலீசார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மணிக்கூண்டு தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 43). இவர் கள்ளக்குறிச்சி நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 15- வது வார்டு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இவர் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக கள்ளக்குறிச்சி போலீசார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ரிஷிவந்தியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவண்ணாமலை நிதி நிறுவனத்தில் பணிபுரியும் திருவண்ணாமலை இனாம் காரியந்தல் பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார் மற்றும் சுகுமார், சுதாகர் ஆகியோர் சோதனை செய்தனர்.

     அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் 63 ஆயிரத்து 200 ரூபாய் இருப்பது கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மணலூர்பேட்டை பேரூராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
    கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் 46 மையங்களில் நடக்கிறது.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் 46 மையங்களில் நடக்கிறது. இதில் மொத்தம் 46,890 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். தேர்தல் தகவல் அலுவலர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உமாசங்கர் வரவேற்றார்.

    கூட்டத்தில் 46 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப் பட்டது. நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள் 21 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கினர்.

    சங்கராபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் பிரிவு சாலையில் சென்னையில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது பஸ்சில் இருந்த 9 பயணிகள், டிரைவர் வீரன், கண்டக்டர் திருப்பாலபந்தலை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றனர்.

    தகவல் அறிந்ததும் சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று, விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தியாகதுருகம் அருகே கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க இந்த பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு மற்றும் உடையனாச்சி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணிகளையும், புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து உடையநாச்சி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    மேலும் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க இந்த பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், இந்தி ராணி மற்றும் உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றனரா? என்பது குறித்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் பறக்கும் படை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி, போலீசார் பாஸ்கரன், ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பழம் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து சாமி (வயது 23) மற்றும் கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த மணிகண்டன் (32). டிரைவர். ஆகியோரிடம் எந்த ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 50 பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவர் நேற்று வீட்டிலிருந்து கடைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த இவரது மனைவி பிரியா (20) என்பவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் பிரியா கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்கு பதிந்து பிரியா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளக்குறிச்சியில் ஜாதி சான்றிதழ் கோரி 3 மகன்களுடன் 7 ஆண்டுகளாக போராடி வரும் பெண் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறினார்.
    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே கூ.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரமணிகண்டன் மனைவி முத்துமாரி (வயது 31). இவர் தனது கணவர் மற்றும் 3 மகன்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மனு அளிக்க வந்தார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க இயலாது. எனவே இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போடுமாறு கூறினர்.

    பெட்டியில் போட மறுத்த முத்துமாரி நான் ஜாதி சான்றிதழ் கேட்டு கடந்த 7ஆண்டுகளாக போராடி வருகிறேன். எனவே மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு அளிக்க வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ‌ஷபி என்பவரை சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் முத்துமாரி கூறியதாவது:-

    நாங்கள் 33 ஆண்டுகளாக கூ.மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறோம், எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நாங்கள் மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆண்டிக்குழி கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த இடம் எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். இதனால் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளேன்.

    ஆனால் எனக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால் என்னுடைய மனு நிராகரித்து விடுவார்களோ என அச்சமாக உள்ளது. எனவே நான் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜாதி சான்று கோரி மனு அளிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்தில் உள்ள பொதுசேவை மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறும், அவ்வாறு விண்ணப்பித்தால் உங்களுக்கு ஜாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி முத்துமாரி தனக்கும், கணவர் மற்றும் 3 மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார்.

    சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்காக 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

    அப்போது வாக்குச்சாவடி மையத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியையும் அவர் பர்வையிட்டார்.

    அப்போது வட்டார தேர்தல் பார்வையாளர் ரத்தின மாலா, தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பத்குமார், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் 153 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தொடர்ந்து 5-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் வேட்பு மனு வாபஸ் பெற்றனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் 72 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 400 பேர் மனுக்கள் அளித்தனர்.

    இதில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 109 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி 72 வார்டுகளில் 278 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர் பேட்டை, வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் 81 வார்டுகளில் 397 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 125 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

    மேலும் சங்கராபுரம் பேரூராட்சி 4 பேரும், தியாகதுருகம் பேரூராட்சி ஒருவரும், வடக்கநந்தல் பேரூராட்சியில் 7 பேரும், ஆக மொத்தம் தி.மு.க. வை சேர்ந்த 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் 5 பேரூ ராட்சிகளில் உள்ள 81 வார்டுகளில் 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 69 வார்டுகளில் 244 பேர் போட்டியிடுகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் 153 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 141 வார்டுகளில் 522 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    சங்கராபுரம் அருகே வண்டல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே காட்டு வனஞ்சூரில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. சரவணன் ரோந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் வண்டல் மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்துக்கு ஆர்.டி.ஓ. வருவதை கண்ட மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து சங்கராபுரம் வி.ஏ.ஓ. வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து வண்டல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). இவரது மகள் பரமேஸ்வரி என்பவரும் இதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பார்த்திபன் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து விசாரணைக்காக ஆறுமுகம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலீஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பார்த்திபன், இவரது தந்தை அண்ணாமலை, தாய் கிருஷ்ணவேணி, அண்ணன் பாரதிதாசன் ஆகியோர் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மருமகன் பார்த்திபன், மற்றும் அண்ணாமலை, கிருஷ்ண வேணி, பாரதிதாசன் ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×