என் மலர்
காஞ்சிபுரம்
கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூர், கன்னிவாக்கம், துலுக்கனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி.
பெருமாட்டு நல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர். தி.மு.க.வில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு ரவி குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை ரவியின் வீட்டுக்குள் வீசினர்.
இதில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறின. உடனே மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் வீட்டின் வெளியே நின்ற ரவியின் அண்ணன் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக நெடுங்குன்றத்தை சேர்ந்த ரவுடி ஒருவன் ரூ.5 லட்சம் கேட்டு ரவியை மிரட்டி வந்தான். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு இருந்தது.
இந்த மோதலில் ரவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் தொழில் போட்டியில் இந்த தாக்குதல் நடந்ததா? என்றும், போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவில் ஒரு குடோனுக்கு பெங்களூரிலிருந்து குட்கா பண்டல்களை ஏற்றி வருவதாக சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது பெங்களூரிலிருந்து ஒரு லாரியில் குட்கா பார்சல்களை ஏற்றிக் கொண்டு ஒரு குடோனில் இறக்க முற்பட்டனர்.
உடனே போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து அதில் கடத்தி வரப்பட்ட சுமார் 1¾ டன் எடையுள்ள 123 பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்ற போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த குட்கா பண்டல்கள் காஞ்சீபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் பி.எஸ்.கே. தெருவை சேர்ந்த அசாராம் (27), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஜெகதீஷ் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். குட்கா ஏற்றி வர பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மீண்டும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நீர் வரத்து அதிகமானதால் உத்திரமேரூர் அருகே உள்ள மாகரல் தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்று தொடர்ந்து 4-வது நாளாக போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதனால் வயலக்காவூர், புத்தளி, நெய்யாடுபாக்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் பணிக்குச் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
பாலத்தின் ஒரு பக்கத்தில் சிலர் சேதமடைந்த பாலப் பகுதியில் நடந்து மறுகரைக்கு செல்கிறார்கள். சேதமடைந்த பாலத்தினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்தார்.
இவரது வீட்டில் டி.வி. சரியாக தெரியவில்லை. எனவே டிஷ்சை (ஆன்டனாவை) 2-வது மாடிக்கு சென்று சரி செய்தார். அப்போது கால் தவறி பக்கத்து வீட்டு மாடியில் வீடு கட்டி விட்டு தூணில் அகற்றாமல் இருந்த கம்பி மீது விழுந்தார்.
இதனால் அவரது தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கம்பி குத்தியது. இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இறந்த வேல்முருகனுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது. அவரது உடலைப்பார்த்து மனைவியும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா. மகன் சதீஷ், ஒரு மகளும் உள்ளார்.
ராஜா தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்வார். இதை சதீஷ் கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி தந்தை- மகன் இடையே வாக்குவாதம் ஏற்படும். பின்னர் சமாதானம் அடைந்து சென்று விடுவார்கள்.
நேற்று இரவு ராஜா குடித்து விட்டு வந்து சதீசிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜா கத்தியை காட்டி மகனை மிரட்டினார்.
ஆத்திரம் அடைந்த சதீஷ் தந்தையிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரது கழுத்தை அறுத்தார். இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜா உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சந்தைமேடு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 26-ந் தேதி கலைச் செல்விக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் காய்ச்சல் குணம் ஆகாததால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
காய்ச்சல் குறையாததால் மீண்டும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.






