என் மலர்
ஈரோடு
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டை 15-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் மங்கனன் என்கிற முனிய கவுண்டர் (64).
இவர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வேலையை முடித்து வீட்டருகே உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். சிறிது தூரம் சென்றதும் திடீரென கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் திடீரென சத்தம் கேட்கவில்லை அதன் பின் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தேடியுள் ளனர்.
பிறகு அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அந்தியூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜேசுதாஸ் தலைமையில் இன்று காலை முதல் தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவரது மனைவி சண்முகவள்ளி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு பிரபு (39) என்ற மகனும் சித்ரா (34) என்ற மகளும் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக மாட்டு சந்தை நிர்வாகத்தினர் மாற்று ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்படி சந்தை நடைபெறும் வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக வெளிமாநிலத்தில் வந்த வியாபாரிகள் மாடுகளை வாங்கி இந்த ஏ.டி.எம். மையம் மூலம் பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இதேபோல் இன்று கூடிய சந்தையில் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர்.
அதில் மாட்டு வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டனர். இன்று கூடிய சந்தையில் 450 பசுமாடுகள், 200 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆகின.
சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டது.
பசுமாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரைக்கும், எருமை மாடுகள் 35 ஆயிரம் ரூபாய் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் 15 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
ஈரோட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது.
ஈரோடு:
ஈரோட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும், 42 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாவட்டம் முழுவதும் 134 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு டவுண் சப் -டிவிசனில் உள்ள கருங்கல்பாளையம், சூரம்பட்டி, டவுன், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா, ஈரோடு மகளிர் போலீஸ் ஆகிய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது.
டவுன் டி.எஸ்.பிஆனந்தகுமார் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம், காந்திஜி ரோடு, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, எல்ல மாரியம்மன் கோவில், சத்தி ரோட்டில் நிறைவடைந்தது.
காதலித்த பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஓட்டல் மேலாளர் உறவினருடன் வீடியோகால் பேசியபடி தற்கொலை செய்து கொண்டார்.
கோபி:
கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள தாழைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (41). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரியாசை விட்டு அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றார்.
இதையடுத்து ரியாஸ் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஜனை தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி வந்து சென்றார்.
இந்நிலையில் ரியாஸ் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் ரியாஸ் நேற்று இரவு தனது உறவினர் நிஷாத் (48) என்பவருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் காதலித்த பெண் வேறு வாலிபருடன் திருமணம் செய்து கொண்டதால் என்னால் வாழ முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறி உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் நிஷாத், ரியாசை சமாதானப்படுத்தினார். ஆனால் அவர் கேட்கவில்லை.
இதையடுத்து வீடியோ காலில் பேசியபடியே ரியாஸ் பேனில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்த நிலையில் ரியாசின் செல்போன் இணைப்பு துண்டித்தது.
ஆனாலும் நிஷாத் தொடர்ந்து செல்போனில் அழைத்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் உரிமையாளரின் மகன் படித்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாக ரியாஸ் அறையில் செல்போன் ஒலித்துக் கொண்டிருந்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது ஜன்னலை திறந்து பார்த்தபோது அங்கு ரியாஸ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரியாசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குருவாயூரில் இருந்து ரியாசின் உறவினர்கள் கோபிசெட்டிபாளையத்துக்கு விரைந்தனர். அவர்கள் வந்தால்தான் முழு விபரமும் தெரிய வரும்.

அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அழகேசன் இறந்து விட்டதால் அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தேர்தல் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த அழகேசன் (என்கிற) சித்துரெட்டி (62) போட்டியிட்டார்.
இவர் கடந்த சில நாட்களாக வார்டு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வந்தார். மேலும் நேற்று காலை முதல் இரவு வரை ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இரவில் வீடு திரும்பிய அழகேசன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூங்கி எழுந்த அழகேசன் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்து விட்டு வீடு திரும்பினார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார்.
இதையடுத்து அவரை பூதப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அழகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த அழகேசனுக்கு மணி என்ற மனைவியும், ஜெகன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அழகேசன் இறந்து விட்டதால் அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தேர்தல் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.

பெருந்துறை அருகே 2 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை- வெள்ளோடு ரோட்டில் அய்யர் குளம் அருகே,டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து நடத்தி வருபவர் கோகுல்ராஜ்(30).இவரது கடையை அடுத்து,பேஷன் ஸ்டோர் வைத்து நடத்தி வருபவர் ராஜா(42).சம்பவம் நடந்த 14 ந்தேதி இரவு,இவர்கள் இருவரும் கடை வியாபாரத்தை முடிந்து,கடைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை வழக்கம் போல இருவரும் கடைகளை திறந்து பார்த்தபோது,இருவரின் கடைகளின் மேற்கூரை தகர சீட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.தொடர்ந்து, கடைக்குள் இருந்த கல்லா பெட்டிகளும் திறந்து இருந்தன. அதில்,கோகுல்ராஜ் கடை கல்லாவிலிருந்து ரூ.12 ஆயிரமும், ராஜா கடை கல்லாவிலிருந்து ரூ.8 ஆயிரத்து 500 ம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கோகுல்ராஜ் மற்றும் ராஜா ஆகிய இருவரும் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். மேற்படி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப் பதிவு செய்து,திருடனை தேடி வருகிறார்.
தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் இறந்து விட்டதால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக அய்யப்பன் (51) என்பவர் போட்டியிடுகிறார். இவர் இந்த பகுதியின் தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அய்யப்பன் தீவிர பிரசாரம் செய்து வந்தார். தினமும் தனது ஆதரவாளர்களுடன் காலை முதல் இரவு வரை தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
நேற்று இரவும் பிரசாரம் முடிந்து வீட்டிற்கு வந்த அய்யப்பன் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.
அய்யப்பன் இன்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் இறந்து விட்டதால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வு களும் நடத்தப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
ஆனால் நர்சரி, மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க கடந்த 2 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட வில்லை. பல்வேறு தடுப்பு நட வடிக்கை காரணமாக தமிழ கத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து திறந்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 101 அரசு மற்றும் தனியார் நர்சரி, மழலையர் பள்ளிகள் உள்ளன. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப் பறைகள் சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதில், மாவட்டத்தில் எல்.கே.ஜி.,வகுப்பில் 1,442 மாணவ-மாணவிகளும், யு.கே.ஜி., வகுப்பில் 1,908 மாணவ- மாணவிகளும் நடப் பாண்டில் சேர்க்கை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்கப் பட்டன. மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனர். மாணவர்களுக்கு பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கையில் கிருமி நாசினி தெளித்து பட்டது.
அவர்களது உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப் பட்டது. சில மாணவ -மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல அடம் பிடித்தனர். சில பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர் கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கொரோனா பாது காப்பு வழிகாட்டி நெறி முறைகளுடன் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜவுளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜவுளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று ஜவுளி சிறு வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 35 வருடத்திற்கும் மேலாக கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை)யில் உள்ள பழைய கட்டிட கடைகள், இரும்புப் பெட்டி கடைகள் என 240-க்கும் மேற்பட்ட கடைகளில் சிறு ஜவுளி வியாபாரம் செய்து வந்தோம். அதற்கான வாடகையை மாதம் தவறாமல் முறையாக மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம்.
இதை போல் 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்ட வாடகையையும் முறையாக செலுத்தி வியாபாரம் செய்து வந்தோம். இந்நிலையில் கடந்த 2019&ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்படுகிறது என்று கூறி எங்களுக்கு இடங்கள் காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கினர்.
இதனால் எங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். இதன்பேரில் மாநகராட்சி நிர்வாகம் அதே பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி கொடுத்தது. அங்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம நிர் ணயிக்கப்பட்டது. அதை நாங்கள் முறையாக செலுத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. அதிக முதலீட்டில் வைப்பீடு செய்து வேறு தொழில் தொடங்க முடியாது.
எங்களுக்கு தெரிந்த தொழில் இந்த சிறு ஜவுளி வியாபாரம் தான். இதை நம்பி தான் எங்கள் வாழ் வாதாரம் உள்ளது. மாநக ராட்சி நிர்வாகம் புதிய கட்டிடம் கட்டும் பணி முடிந்து புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் விட்டால் எங்களால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்க முடியாது. பல ஆண்டுகளாக தங்க ளோடு இணைந்து ஒதுக்கப் பட்ட பழைய கட்டிட கடைகளில் சிறு ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம்.
எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் முன்னுரிமை அடிப் படையில் நியாயமான வைப்பு தொகை மற்றும் வாடகை நிர்ணயம் செய்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் எங்களுக்கு கடைகளை ஒதுக்கி எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜவுளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜவுளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று ஜவுளி சிறு வியாபாரிகள் 100&க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 35 வருடத்திற்கும் மேலாக கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை)யில் உள்ள பழைய கட்டிட கடைகள், இரும்புப் பெட்டி கடைகள் என 240&க்கும் மேற்பட்ட கடைகளில் சிறு ஜவுளி வியாபாரம் செய்து வந்தோம். அதற்கான வாடகையை மாதம் தவறாமல் முறையாக மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம்.
இதை போல் 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்ட வாடகையையும் முறையாக செலுத்தி வியாபாரம் செய்து வந்தோம். இந்நிலையில் கடந்த 2019&ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்படுகிறது என்று கூறி எங்களுக்கு இடங்கள் காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கினர்.
இதனால் எங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். இதன்பேரில் மாநகராட்சி நிர்வாகம் அதே பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி கொடுத்தது. அங்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம நிர் ணயிக்கப்பட்டது. அதை நாங்கள் முறையாக செலுத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. அதிக முதலீட்டில் வைப்பீடு செய்து வேறு தொழில் தொடங்க முடியாது.
எங்களுக்கு தெரிந்த தொழில் இந்த சிறு ஜவுளி வியாபாரம் தான். இதை நம்பி தான் எங்கள் வாழ் வாதாரம் உள்ளது. மாநக ராட்சி நிர்வாகம் புதிய கட்டிடம் கட்டும் பணி முடிந்து புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் விட்டால் எங்களால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்க முடியாது. பல ஆண்டுகளாக தங்க ளோடு இணைந்து ஒதுக்கப் பட்ட பழைய கட்டிட கடைகளில் சிறு ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம்.
எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் முன்னுரிமை அடிப் படையில் நியாயமான வைப்பு தொகை மற்றும் வாடகை நிர்ணயம் செய்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் எங்களுக்கு கடைகளை ஒதுக்கி எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதிலிருந்து 20 நாட்கள் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.
பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத் தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட் களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 100-க்கு கீழ் சென்றது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இது வரை கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 128ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பாதிப்பில் இருந்து 256 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 810 ஆக உயர்ந் துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 732 பேர் உயிரிழந்து உள்ள னர்.தற்போது மாவட்டம் முழுவதும் 1,586 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் போலீசாருக்கு பணி உத்தரவு வழங்கபட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 18-ந் தேதியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு:
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் போலீசாருக்கு பணி உத்தரவு வழங்கபட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 18-ந் தேதியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் 1,798 போலீசார், 260 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தலில் பணிபுரியும் இடத்திற்கு ஆணை வழங்கும் பணி அந்தந்த போலீஸ் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தேர்தலின் போது எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டு அதற்கான பணி ஆணை வழங்கும் பணி நடந்து வருகிறது. 18-ந் தேதி காலை ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த போலீசார் செல்ல வேண்டும்.
தேர்தல் முடிந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சேர்த்த பின் வீடு திரும்ப வேண்டும். இதே போல் நடமாடும் கண்காணிப்பு குழுவினர் 19-ந் தேதி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு செல்வார்கள். இவர்களுக்கு பெரும் பாலும் அந்தந்த பகுதியிலேயே பணி வழங்கப் பட்டுள்ளது.
ஆனால் ஓட்டு பதிவுடன் சட்டம் ஒழுங்கு பணி யையும் பார்க்க வேண்டும். இதனால் தான் சப்-டிவிஷன் உட்பட்ட பகுதியிலேயே அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீசார் தேவையான அளவு மட்டும் பணிக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறி னர்.