என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தபால் ஓட்டு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தபால் ஓட்டு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு தலைமை தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர், 3 உதவி வாக்குச்சாவடி அலுவல ர்கள் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் ஈரோடு மாநகராட்சியில் 51&வது வார்டு, 42 பேரூராட்சிகளில் 20 வார்டுகளில் வேட்பா ளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அந்த வார்டுகளில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது.
இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்டமாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 1,221 வாக்குசாவடி மையங்கள் 95 மண்டலங் களில் அமைக்கப் பட் டுள்ளது.
இதில் மண்டல அலுலவலர்கள், வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்குசாவடி மையங்களில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு இன்று காலை அந்தந்த பயிற்சி மையத்தில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
அந்த உத்தரவில் பணியாற்ற வேண்டிய உள்ளாட்சி அமைப்பின் பெயர், வாக்குசாவடி மையம் அமைந்துள்ள கிராமம் மற்றும் நகரம் பெயர், வாக்குசாவடி மைய எண் உள்ளிட்ட விபரங்களும், வாக்கு பதிவு பணி நிலை தகுதி விபரம் உள்ளிட்டவை குறிப்பிடப் பட்டிருந்தது.
வாக்குசாவடி பணி நியமனம் பெற்ற ஊழியர்கள் மதியத்திற்குள் அந்தந்த வாக்குசாவடிக்கு சென்றடைய வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
மேலும் இன்று அலுவலர்களுக்கு அந்தந்த பயிற்சி மையத்திலேயே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அலுவலர்கள் ஆர்வத்துடன் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி மரப்பம்பாளையம் பிரிவை சேர்ந்த கணேஷ் என்கிற கணேசமூர்த்தி (35) தச்சுத்தொழிலாளி. இவருக்கு சங்கீதா (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் கணேசமூர்த்தி சம்பவத் தன்று தனது தாயை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கவுந்தப் பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற தனியார் பஸ் கவுந்தப்பாடி அய்யம் பாளையம் பிரிவு அருகே கணேசமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாரத விதமாக மோதியது.
இதில் கணேசமூர்த்தி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தலேயே பலியானார்.
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பஸ் முன்சக்கரத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி போலீசார் பலியான கணேசமூர்த்தி உடலை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தாய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து தனியார் பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். விபத்து காரணமாக கவுந்தப்பாடி&சத்தி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 வருடமாக வீட்டை விட்டு பிரிந்து சென்ற தொழிலாளி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
2 வருடமாக வீட்டை விட்டு பிரிந்து சென்ற தொழிலாளி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் இ&படார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (46).இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ராமச்சந்திரன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
பின்னர் ராமச்சந்திரன் 10 நாளுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறு, சிறு திருட்டுகளில் ராமச்சந்திரன் ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தார் அவரை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
நேற்று ஈரோடு தொண்டு நிறுவனத்திலிருந்து பத்மாவுக்கு போன் வந்துள்ளது.
அதில் உங்கள் கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் ஈரோடு ராம் நகரை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் அவரை மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் வைத்து கவனித்து வந்ததாகவும், திடீரென உங்களது கணவருக்கு உடல்நிலை சரியில் லாததால் சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பத்மா மற்றும் குடும்பத்தினர் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு வந்தனர். இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் தி.மு.க. சார்பில் அய்யப்பன் (51) என்பவர் போட்டியிட்டார். அவர் அந்த பகுதி தி.மு.க. செய லாளராகவும் இருந்தார்.
தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் திடீரென இறந்ததால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வார்டுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
இதில் தி.மு.க. 13 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.
அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்த அழகேசன் (என்கிற) சித்து ரெட்டி (62) போட்டியிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகேசன் பிரசாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டுக்கு வந்தார்.
நேற்று அதிகாலை அழகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அழகேசன் இறந்ததால் அந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது மாயமான அ.தி.மு.க. பிரமுகர் பிணமாக மீட்கப்பட்டார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது மாயமான அ.தி.மு.க. பிரமுகர் பிணமாக மீட்கப்பட்டார்.
அம்மாபேட்டை 15-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் மங்கனன் என்கிற முனிய கவுண்டர் (64). இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் வேலையை முடித்து பாரதியார் வீதியில் வீட்டருகே உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். சிறிது தூரம் சென்றதும் திடீரென கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் திடீரென சத்தம் கேட்கவில்லை. அதன் பின் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தேடினர். பிறகு அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தியூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜேசுதாஸ் தலைமையில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மாலை இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.ஆனால் அவரது உடல் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால் இன்று 2&வது நாளாக முனிய கவுண்டரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் அம்மாபேட்டை -கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் &3 வரை ஆங்காங்கே முனிய கவுண்டரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் படித்துறை அருகே முனியக்கவுண்டர் உடல் பிணமாக மிதந்து வந்தது. இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந் தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முதலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பொழுது மாநகர் பகுதியில் தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது.
அதன் பின்னர் கிராமப்புற பகுதிகளில் பாதிப்பு வேகமாக பரவியது. தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மாநகர பகுதியில் தினசரி பாதிப்பு 5 முதல் 6 வரை மட்டுமே பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 267ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 234 பேர் குணமடைந் துள்ளனர்.
இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 734 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது மாவட்டம் முழுவதும் 1,272 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேப்போல் மாவட்டம் முழுவதும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வந்த கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மாநகர பகுதியில் பஸ் நிலையம் அருகே மாநகராட்சி திருமண மண்டபத்தில் செயல்பட்டு வந்த ஸ்கிரீனிங் மையம் பாதிப்பு குறைவு காரணமாக மூடப் பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் 94.64 அடியாக குறைந்தது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் 94.64 அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 94.64 அடியாக இருந்தது. வினாடிக்கு அணைக்கு ஆயிரத்து 154 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 700 கன அடியும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியு-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு 60 வார்டுகள், பவானி, சத்திய மங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள், கோபி நகராட்சி 30 வார்டுகள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும், இதே போல 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் மொத்த முள்ள 60 வார்டுகளில் 51&வது வார்டில் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து மீதமுள்ள 59 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பா.ஜனதா, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், த.மா.கா, எஸ்.டி.பி.ஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தே.மு.தி.க, கொ.ம.தே.க உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 352 பேர் போட்டியில் உள்ளனர்.
பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் 453 பேர் போட்டியிட்டுள்ளனர். 42 பேரூராட்சிகளில் மொத்த முள்ள 630 வார்டுகளில் 20 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து 610 வார்டுகளில் 1,919 பேர் போட்டியில் இருந்தனர்.
இதில் அத்தாணி, அம்மாபேட்டை பேரூரா ட்சிகளில் வேட்பாளர்கள் இறந்ததையடுத்து அந்த 2 வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 608 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 769 பதவிகளுக்கு 2724 பேர் போட்டியிட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் பகுதியில் வெளியூர் ஆட்கள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட போலீசார் லாட்ஜுகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். மேலும் மாலை 6 மணிக்கு மேல் யாரேனும் பிரசாரம் மேற் கொள்கிறார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் கண்காணித்தனர்.
நாளை காலை 7 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு- தொடங்கி மாலை 6 மணிக்கு நிறை வடைய உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் 434 வாக்குசாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது. பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் 787 வாக்குசாவடிகள் என மாவட்டம் முழுவதும் 95 மண்டலங்களில் 1,221 வாக்குசாவடிகள் அமைக் கப்பட்டு தயார்நிலையில் உள்ளது.
இன்று காலை வாக்குசாவ டிகளுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள், வாக்குபதிவின் போது தேவைப்படும் பொருட்கள், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அந்தந்த மண்டல தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வாக்குசாவடி மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது.
மாவட்டத்தில் தேர்தலையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் ஊர்காவல் படையினரும், முன்னாள் ராணுவத்தினரும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 184 வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. அவர்கள் வாக்கு சாவடிக்கு செல்ல சாய்வு தளம், 3 சக்கர வாகனங்கள், அவர்களுக்கு உதவுவதற்கு என்று தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
நாளை ஓட்டுப்பதிவு என்பதால் மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணித்தனர். தொடர்ந்து இன்று காலை முதல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சூரம்பட்டியில் நள்ளிரவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறித்த 4 பேர் கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சூரம்பட்டியில் நள்ளிரவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறித்த 4 பேர் கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி வலசு அருகே உள்ள சங்கு நகர், சங்கர் மஹால் பகுதியில் நள்ளிரவு 12.30 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர அரிவாள் மற்றும் கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதைப்பார்த்து அச்சம் அடைந்து சென்றனர். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழி மறித்து அவரை அரிவாளால் வெட்டினர்.
மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டி அடித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர் ரத்தக் காயங்க ளுடன் சூரம்பட்டி நால் ரோடு பகுதிக்கு வந்து கீழே விழுந்தார்.
அப்போது அங்கு இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தெரிய வந்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் யார்? அவருக்கும் உங்களுக்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா என்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காரணமாக சூரம்பட்டி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
ஈரோடு மாட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. மேலும் பறக்கும்படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. மேலும் பறக்கும்படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளைமறுநாள் 19-ந்தேதி நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில், 59 வார்டுகளில், 352 வேட்பாளர்கள், பவானி, கோபி, புன்செய் புளியம்பட்டி, சத்தியமங் கலம் ஆகிய 4 நகராட்சிகளில் 102 வார்டுகளில் 453 பேர், 42 பேரூராட்சிகளில் 610 வார்டுகளில், 1,919 வேட்பாளர்கள் என, 771 பதவிகளுக்கு, 2,724 பேர் போட்டியில் உள்ளனர்.
கடந்த 7-ந் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம்செய்தார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.
இதேபோல் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.
உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரம் முடிக்க வேண்டும். அதன்படி இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
இதையடுத்து இன்று காலை முதலே ஒவ்வொரு வேட்பாளரும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமான சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட அளவில், 1,251 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 134 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என்பதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும், 55 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை மீண்டும் உறுதி செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு, தேவையான பொருட்கள், உபகரணங்களுடன் அனுப்பி வைக்கவும், ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடி மையத்தை தயார் நிலையில் வைக்கவும், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாலையுடன் அவரவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இன்று காலை பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பணியில் சுழற்சி முறையில் 120 போலீசார் ஈடுபடுகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பணியில் சுழற்சி முறையில் 120 போலீசார் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள் 14 மையங்களில் எண்ணப்பட உள்ளது.
இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 59 வார்டுகளில் பதிவாகும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பதிவாகும் வாக்கு பதிவு எந்திரங்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், கோபி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலம் நகராட் சியில் பதிவாகும் வாக்குகள் காமதேனு கல்லூரி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்பட உள்ளது.
இது தவிர 42 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் 9 இடங்களில் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களை பூட்டி சீலிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைப்பார்கள்.
அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டியை சோதனையிட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வாக்குச்சாவடி வாரியாக அடுக்கி வைப்பார்கள்.
வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வந்தவுடன் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
பின்னர் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அதை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பணியில் சுழற்சி முறையில் 120 போலீசார் ஈடுபடுகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 22-ந் தேதி வரை இந்த பணி தொடரும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.30 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.30 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் 100 -க்கு கீழ் சென்றது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 198ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 217 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 027 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண் மற்றும் 50 வயது ஆண் என இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது.
தற்போது மாவட்டம் முழுவதும் 1,437 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






