என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
2 வருடமாக வீட்டை விட்டு பிரிந்து சென்ற தொழிலாளி திடீர் சாவு
2 வருடமாக வீட்டை விட்டு பிரிந்து சென்ற தொழிலாளி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
2 வருடமாக வீட்டை விட்டு பிரிந்து சென்ற தொழிலாளி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் இ&படார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (46).இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ராமச்சந்திரன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
பின்னர் ராமச்சந்திரன் 10 நாளுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறு, சிறு திருட்டுகளில் ராமச்சந்திரன் ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தார் அவரை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
நேற்று ஈரோடு தொண்டு நிறுவனத்திலிருந்து பத்மாவுக்கு போன் வந்துள்ளது.
அதில் உங்கள் கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் ஈரோடு ராம் நகரை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் அவரை மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் வைத்து கவனித்து வந்ததாகவும், திடீரென உங்களது கணவருக்கு உடல்நிலை சரியில் லாததால் சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பத்மா மற்றும் குடும்பத்தினர் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு வந்தனர். இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






