என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறிப்பு
சூரம்பட்டியில் நள்ளிரவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறித்த 4 பேர் கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சூரம்பட்டியில் நள்ளிரவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறித்த 4 பேர் கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி வலசு அருகே உள்ள சங்கு நகர், சங்கர் மஹால் பகுதியில் நள்ளிரவு 12.30 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர அரிவாள் மற்றும் கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதைப்பார்த்து அச்சம் அடைந்து சென்றனர். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழி மறித்து அவரை அரிவாளால் வெட்டினர்.
மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டி அடித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர் ரத்தக் காயங்க ளுடன் சூரம்பட்டி நால் ரோடு பகுதிக்கு வந்து கீழே விழுந்தார்.
அப்போது அங்கு இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தெரிய வந்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் யார்? அவருக்கும் உங்களுக்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா என்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காரணமாக சூரம்பட்டி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






