என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
    X
    ஈரோட்டில் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

    உள்ளாட்சி தேர்தல்: மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

    ஈரோட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும், 42 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. 

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாவட்டம் முழுவதும் 134 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

    பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். 

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
     
    மாநகராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு டவுண் சப் -டிவிசனில் உள்ள கருங்கல்பாளையம், சூரம்பட்டி, டவுன், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா, ஈரோடு மகளிர் போலீஸ் ஆகிய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று  நடந்தது. 

    டவுன் டி.எஸ்.பிஆனந்தகுமார் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. 

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம், காந்திஜி ரோடு, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, எல்ல மாரியம்மன் கோவில், சத்தி ரோட்டில் நிறைவடைந்தது.
    Next Story
    ×