என் மலர்
ஈரோடு
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி தெரிய வந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் போராட்டத்துக்கு முயன்றனர். இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு கோபிசெட்டி பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் பழனி நேரில் வந்து மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவரிடம் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் மனுவாக எழுதி கொடுங்கள் பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனுவாக எழுதி கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுப்பற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் போராட் டம் காரணமாக பரபரப்பு நிலவியது.






