என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெருந்துறை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை பகுதியை சேர்ந்த 24 வயதான பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் பட்டதாரி பெண் படிப்பை முடித்து விட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வீட்டின் அருகே சேக் முகமது என்பவர் குடியிருந்து வருகிறார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் பலமுறை சேக் முகமது தனிமையில் இருந்து வந்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷேக் முகமதுவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.
இதேபோல் கடந்த வாரம் அந்த பெண் சேக் முகமது வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத் தியுள்ளார். அப்போது சேக் முகமது மற்றும் அவரது தந்தை காஜா மைதீன், தாய் ராபியா பேகம் சேர்ந்து இங்கு எதுக்கு வந்தாய், உன்னை திருமணம் செய்து கொண்டால் எங்களுக் குத்தான் அசிங்கம். மீண்டும் இங்கே வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சேக் முகமதுவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டு இருப்பதாக அந்த பெண்ணிற்கு தகவல் தெரிய வந்தது.
பின்னர் அந்த பெண் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் சேக் முகமது, அவரது தந்தை காஜா மைதீன், தாய் ராபியா பேகம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கை பெருந்துறை ஏ.எஸ்.பி கவுதம் கோயல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story






