என் மலர்
ஈரோடு
தாளவாடி நகர் பகுதியில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்துக்கு உட்பட்ட தாள வாடி நகர் பகுதியில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்தி ருப்பதாக தாளவாடி வனச்சரகர் சதீஷிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் தாளவாடி பகுதியில் ஆய்வு செய்து சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 35 கிலோ சந்தன மரத்துண்டுகள், நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி மருந்து, கோடாரி ஆகிய வை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி னர். இதில் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைத்தது சபியுல்லா, காசிம் ஷரிப் என தெரிய வந்தது. அவர்கள் வனத்துறையினர் வருவதை அறிந்து அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.
தலைமறைவாக உள்ள சபியுல்லா, காசிம் ஷரிப், ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டது. வனத்துறையினர் அவர் களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் சந்தன மரத் துண்டுகள் எந்த பகுதிக்கு கடத்தப்படுகிறது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின் றனர்.
ஈரோடு:
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி நேற்று 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். இந்நிலையில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் 16 நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் டவுன் போலீசார் மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்பட 24 நிர்வாகிகளை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தடையை மீறி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது டவுன் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து தினமும் கோவைக்கு காலை 7.15 மணிக்கு திருப்பூர் வழியாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் கோவையில் இருந்து மீண்டும் மாலை 6.30 மணிக்கு ஈரோட்டுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரெயிலில் திருப்பூர் மற்றும் கோவைக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் சென்று வந்தனர். பஸ் கட்டணத்தைவிட குறைந்த கட்டணம் என்பதாலும் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்பதாலும் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் கோவை, திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனால் வேறு வழியின்றி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் சென்று வந்தனர் . திருப்பூருக்கு ரூ.35, கோவைக்கு ரூ.80-ம் பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் ரெயில் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாலும் நிறுத்தப்பட்ட ஈரோடு -கோவை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததால் மத்திய அரசு கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில்கள் படிப்படியாக மீண்டும் விடப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஈரோடு-கோவை பயணிகள் ரெயிலும் இன்று முதல் ஓடத் தொடங்கியது. இந்த ரெயிலில் இன்று திருப்பூர், கோவைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர். இந்த பயணிகள் ரெயிலில் முன்பு 10 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது 6 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டு வருடமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரெயில் இன்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளது. பயணிகளின் வருகையையொட்டி மீண்டும் அதிகமான பெட்டிகளை இணைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர்.
இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கூறியதாவது:-
கடந்த 2 வருடமாக நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு கோவை பயணிகள் ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று முதல் இந்த ரெயில் ஓடத் தொடங்கியதால் நிறைய பேருக்கு இந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது தெரியவில்லை. மேலும் பஸ்சில் சென்று பழகிவிட்டதால் திருப்பூர், கோவை செல்லும் தொழிலாளர்கள் பஸ்சிலேயே செல்கின்றனர். மேலும் முன்பு ரெயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்வதற்கு ரூ.15 ம் கோவை செல்வதற்கு ரூ.25ம் கட்டணம் இருந்தது. ஆனால் தற்போது திருப்பூர் செல்வதற்கு ரூ.35ம் கோவை செல்வதற்கு ரூ.50ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை முன்பு இருந்ததை போல குறைத்தால் அதிகமான பயணிகள் இந்த ரெயிலில் சென்று வர வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் இன்று முதல் ஓட தொடங்கியதால் ரெயில் என்ஜினுக்கு திருஷ்டி சுத்தப்பட்டது. மேலும் பயணிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை






