என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா தொடங்கியது.
    ஈரோடு:

    பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இன்று  கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா தொடங்கியது.

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 15&ந் தேதி பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
    கடந்த 19&ந் தேதி இரவு, 10 மணிக்கு பெரிய மாரியம்மன் உள்ளிட்ட 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர், பால், இளநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    இது தவிர, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால் குடம், புனித நீர் எடுத்து வருவோர் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் கோவிலுக்குள் நேரடியாக சென்று கம்பத்தில் புனித நீர் ஊற்றி, அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த, 29&ந் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், மாவிளக்கு பூஜையும், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டமும் நடந்தது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடையும்.  அதே நேரம் சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இருந்து கம்பங்கள் பிடுங் கப்பட்டு மணிக்கூண்டு வந்தடையும்.

    அங்கிருந்து 3 கோவில் கம்பங்களும் புறப்பட்டு ஊர்வலமாக, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் நிலையம், அக்ரஹாரம் வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடையும்.

    அப்போது விழாவில் பங்கேற்போர் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி, மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்வார்கள். ஈரோடு நகரின் பிரதான சாலை, வீதிகள் மஞ்சளாக காணப்படும். இதனால் இப்போது ஈரோடு மாநகர் பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக பக்தர்கள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாளை  காலை 10:30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    ஈரோட்டில் இன்று டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் அதிக ரத்த போக்கு காரணமாக அந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து ராஜஸ்தான் போலீசார் அந்த பெண் டாக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் டாக்டர் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. 

    இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் பெண் டாக்டர் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் காளைமாடு சிலை அருகே இன்று காலை தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் அப்துல் ஹாசன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட நூற்றுக்கணக்கான டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்று பெண் டாக்டர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் பிரசவத் திற்காக சேர்க்கப்பட்ட பெண் அதிக ரத்தப் போக்கு காரணமாக இறந்துவிட்டார். இதற்கு அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் அந்தப் பெண் டாக்டர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது ஒரு மோசமான செயலாகும். 

    நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இதை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் நோயாளியை காப்பாற்று வதற்காக தான் இருக்கிறார் களே தவிர அவர்களை கொள்வதற்கு இல்லை. ராஜஸ்தான் போலீசார் அந்த பெண் டாக்டரை ஒரு கொலையாளி, கிரிமினல் போல கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அந்த பெண் டாக்டர் 2 குழந்தைகளின் தாய். திறமையான மருத்துவர். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். அதில் நான் ஒரு மருத்துவராக எனது கடமையை சரியாக தான் செய்திருந்தேன். இருந்தாலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த முடிவு வேறு எந்த டாக்டருக்கும் வரவேண்டாம். என் இறப்புக்கு பின்னால் எனது குழந்தைகளையும் கணவரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.

    மருத்துவர்கள் இரவு பகல் என்று பார்க்காமல் சேவை செய்து வருகிறார்கள். பிரசவத்தின் போது இறப்பு சில சமயம் ஏற்பட்டு விடுகிறது. அதிக ரத்தப் போக்கு காரணமாக இது ஏற்படுகிறது.  2013 வது வருடம் பிரசவ இறப்பு 250 ஆக இருந்தது. அது தற்போது 113 ஆக குறைந்துள்ளது. 

    அந்த பெண் மருத்துவர் தற்கொலைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமரை சந்திக்க உள்ளோம். இதேப்போல் அந்தந்த மாநில மருத்துவ சங்கம் மூலம் அந்தந்த மாநில முதல்-அமைச் சரையும் சந்திப்போம். 

    அப்போது மருத்துவ மனை பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவோம். இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் இந்த சட்டம் இருந்தாலும் அவை முறையாக நடைமுறை ப்படுத்தப் படவில்லை. இதனால் அவ்வப்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையை தாக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி டி.ஜி.பி. சைலேந்திர பாபு பரிசு வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக சிறப்பு அதிரடிப்படை முகாம் உள்ளது. இங்கு உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன உயரின பயிற்சி கூடத்தை சேர்ந்த 62 வனத்துறை அதிகாரிகளுக்கு 7 நாட்கள் வனவாழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதில் வனவாழ் பயிற்சி, மனித மற்றும் விலங்குள் மோதல்களை தவிர்ப்பது, மலையேற்றம், ஆற்றைக் கடக்கும் பயிற்சி மற்றும் வனத்தேடுதல் போன்ற பயிற்சிகள் அடர்ந்த வனப் பகுதியில் அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சி மாணவர்களை டிஜி.பி. சைலேந்திர பாபு நேரில் சந்தித்து பயிற்சி குறித்து கலந்துரையாடியும், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த பயிற்சி தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் முதல் முறையாக அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அவர்களது பணிக்காலத்தில் கடிமான சூழ்நிலையை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், காவல்துறைக்கும், வனத்துறைக்கு இடையே உள்ள நல்லுறவை மேலும் மேம்படுத்தும் எனவும் அவர்கள் சிறப்பாக பணியாற்ற தமிழ்நாடு காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி டி.ஜி.பி. சைலேந்திர பாபு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவர் டாக்டர்.முருகன், போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். சசிமோகன் மற்றும் இந்திரா காந்தி தேசிய வன உயர் பயிற்சி கூடத்தின் பேராசிரியர் டாக்டர்.ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெருந்துறை அருகே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மெக்கானிக் உடலை இன்று 2 &வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மெக்கானிக் உடலை இன்று 2 -வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவ னத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று சரவணன் தனது  நண்பர் செந்தமிழ் செல்வன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட் டத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர் நேற்று மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சரவணன் மற்றும் செந்தமிழ் செல்வன் குளித்துக் கொண்டிருந்தனர். சரவணனுக்கு நீச்சல் தெரியாது என கூறப் படுகிறது.

    இந்நிலையில் திடீரென சரவணன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது தண்ணீர் அவரை அடித்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தமிழ் செல்வன் காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு உள்ளார். அந்த வழியாக சென்ற  மக்கள் சத்தம் கேட்டு வந்தனர். அதற்குள் சரவணை தண்ணீர் அடித்து சென்று விட்டது.

    இது குறித்து பெருந்துறை போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  பின்னர் இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சரவணனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட சரவணன் கதி என்ன? என தெரியவில்லை.  சரவணன் உறவினர்கள் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் பதற்றத்துடன் நின்று கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கு பரபரப் பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சடைந்துள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சடைந்துள்ளனர்.

    சென்னிமலை அடுத்த பள்ளக் காட்டுப் புதூரை சேர்ந்தவர் அருண்குமார்(22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (22). எம்.சி.ஏ. பட்டதாரி. இவர் வேலை தேடி ஈரோடு வந்தார். தொடர்ந்து அவர்  ஒரு தனியார் நிறுவனத்தின் நேர்முக தேர்வில் கலந்து கொண்டார்.

    அதே நிறுவனத்துக்கு அருண்குமாரும் நேர்முக தேர்வுக்கு வந்தார். அப்போது அருண்குமாருக் கும் உமா மகேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை யடுத்து இருவரும் பழகி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது.
    இந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதை யடுத்து சென்னிமலை  ஊத்துக்குளி ரோடு அய்யம் பாளையம் பிரிவு பழனி ஆண்டவர் கோவிலில் 2 பேரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட னர்.

    இது குறித்து 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிய வந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து காதல் ஜோடி அருண்குமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 
    போலீசார் இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் உமா மகேஸ்வரி பெற்றோர் வரவில்லை. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி அருண்குமார் பெற்றோரி டம் சமரசம் பேசினார். 

    இதையடுத்து அருண் குமாரின் பெற்றோர் அவர் களை அழைத்து செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் 2 பேரும் அருண் குமாரின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:
     
    கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் தங்கமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சுபதர்ஷினி (16), சிந்துதேவி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் களது மூத்த மகள் சுபதர் ஷினி கலிங்கியம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரு கிறார்.
     
    கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ்குமார் ராணியை விட்டு பிரிந்து சென்று விட்டார். ராணியின் தங்கை பவானியை 2-வது திருமணம் செய்து கொண் டார். இவர்களுக்கு 2 மகள் கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சதீஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் சுபதர்ஷினியை பள்ளிக்கு அழைத்து சென் றார். பள்ளி அருகே அவரை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு பள்ளிக்கு சுபதர்ஷினி வரவில்லை என சதீஷ்குமாரிடம் ஆசிரி யை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. அவர் எங்கு சென்றார் என தெரிய வில்லை.

    இது குறித்து சதீஷ்குமார் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் இன்று 416 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 416 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங் கியது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. 

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 416 மையங்களில் இன்று காலை 9 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி யது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 

    தொடர்ந்து இன்று மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணியில் 66 வாகனங்கள், 1,664 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் களுக்கு கோவேக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் களில்  செலுத்தப்பட்டது.
    தாளவாடி மலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.
    ஈரோடு:

    தாளவாடி மலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.


    ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தலமலை, ஆசனூர் மற்றும் கேர்மாளம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி  தலமலை ஊராட்சி பெஜலட்டி பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவின் சார்பில் துடைப்பம் தயாரிக்கும் பணிகளையும், அதே பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு பழுதடைந்த மையத்தினை விரைவாக சரி செய்திட அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார். 

    தொடர்ந்து சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பசுமை வீட்டினையும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பெஜலட்டி பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.

    தடசளட்டி பகுதியில் 15&வது நிதிக்குழு மானியத் திட் டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினையும், அதேகுடியிருப்பு பகுதியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியினையும், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியினையும் ஆய்வு மேற்கொண்டு கு ழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு உணவினை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடம் கலந்துரை யாடினார்.

    மேலும் கானக்கரை பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளையும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்ட த்தின் கீழ் சமுதாய தொழில் திறன் பள்ளியில்  உன்னிக் குச்சி மூலமாக வீட்டு உபயோகப் பொரு ட்கள் மற்றும் அலுவலக தளவாட பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளும் பயிற்சியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 8 பேர்களுக்கு ரூ.3,02,100 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தலமலை ஊராட்சி ராமரணை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக்கூடத்திற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
    ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் (ஊராட் சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (வேளாண் மைத்துறை) மகாலிங்கம், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாளவாடி தாசில்தார் உள்பட துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது.
    ஈரோடு:

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 24-ந் தேதி மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93 -க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.02-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

    ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெருந்துறை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் மற்றும் ரிசார்ட்ஸ் சென்டர்,  மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றும் ராஜா என்ற போலீஸ்காரர் சாதாரண உடையில் பெருந்துறை யில் உள்ள மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    அங்கு மசாஜ் சென்டர் மேலாளர் தினேஷ் குமார் என்பவரிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜா கூறினார்.

    இதற்கு மேலாளர் மசாஜ் செய்ய ரூ.2 ஆயிரம் என்றும்,  மேலும் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் பெண்களுடன் உல்லா சமாக இருக்கலாம் என்று கூறினார். 

    இதையடுத்து ராஜா இதற்கு சம்மதம் என கூறி பணத்தை கொடுத்தார்.இதை தொடர்ந்து அவர் அங்கு இருந்த 3 பெண்களில் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு சென்றார். 

    பின்னர் அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வரு வதாக கூறி விட்டு தனியாக வந்து இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உடனடியாக தயார் நிலையில் இருந்த தனிப்படை போலீ சார் மசாஜ் சென்டருக்குள் புகுந்தனர். 

    அவர்கள் மேலாளர் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அந்த மசாஜ் சென்டரில்  இருந்த 3 பெண்களையும் மீட்டு மகளிர் காப்பகத்துகு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார். 
    பெருந்துறை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் மற்றும் ரிசார்ட்ஸ் சென்டர்,  மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றும் ராஜா என்ற போலீஸ்காரர் சாதாரண உடையில் பெருந்துறை யில் உள்ள மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    அங்கு மசாஜ் சென்டர் மேலாளர் தினேஷ் குமார் என்பவரிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜா கூறினார்.

    இதற்கு மேலாளர் மசாஜ் செய்ய ரூ.2 ஆயிரம் என்றும்,  மேலும் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் பெண்களுடன் உல்லா சமாக இருக்கலாம் என்று கூறினார். 

    இதையடுத்து ராஜா இதற்கு சம்மதம் என கூறி பணத்தை கொடுத்தார்.இதை தொடர்ந்து அவர் அங்கு இருந்த 3 பெண்களில் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு சென்றார். 

    பின்னர் அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வரு வதாக கூறி விட்டு தனியாக வந்து இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உடனடியாக தயார் நிலையில் இருந்த தனிப்படை போலீ சார் மசாஜ் சென்டருக்குள் புகுந்தனர். 

    அவர்கள் மேலா ளர் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அந்த மசாஜ் சென்டரில்  இருந்த 3 பெண்களையும் மீட்டு மகளிர் காப்பகத்துகு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார். 
    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டி.என்.பாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
    அந்தியூர்:

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டி.என்.பாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமின் ஒரு பகுதியாக இன்று காலை பள்ளி வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை பானுமதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான அவசியம் குறித்தும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் போது உண்டாகும் விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஷ், கலையரசி, என்.சி.சி. ஒருங்கிணைப் பாளர் முகமது பிலால் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    ×