என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடவுள் போல் வேடம் அணிந்து வந்த பக்தர்கள்.
கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா
பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா தொடங்கியது.
ஈரோடு:
பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா தொடங்கியது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 15&ந் தேதி பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
கடந்த 19&ந் தேதி இரவு, 10 மணிக்கு பெரிய மாரியம்மன் உள்ளிட்ட 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர், பால், இளநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
இது தவிர, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால் குடம், புனித நீர் எடுத்து வருவோர் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் கோவிலுக்குள் நேரடியாக சென்று கம்பத்தில் புனித நீர் ஊற்றி, அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 29&ந் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், மாவிளக்கு பூஜையும், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டமும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடையும். அதே நேரம் சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இருந்து கம்பங்கள் பிடுங் கப்பட்டு மணிக்கூண்டு வந்தடையும்.
அங்கிருந்து 3 கோவில் கம்பங்களும் புறப்பட்டு ஊர்வலமாக, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் நிலையம், அக்ரஹாரம் வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடையும்.
அப்போது விழாவில் பங்கேற்போர் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி, மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்வார்கள். ஈரோடு நகரின் பிரதான சாலை, வீதிகள் மஞ்சளாக காணப்படும். இதனால் இப்போது ஈரோடு மாநகர் பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக பக்தர்கள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாளை காலை 10:30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Next Story






