search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.ஜி.பி. சைலேந்திர பாபு
    X
    டி.ஜி.பி. சைலேந்திர பாபு

    சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமில் வனத்துறை அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துரையாடல்

    தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி டி.ஜி.பி. சைலேந்திர பாபு பரிசு வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக சிறப்பு அதிரடிப்படை முகாம் உள்ளது. இங்கு உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன உயரின பயிற்சி கூடத்தை சேர்ந்த 62 வனத்துறை அதிகாரிகளுக்கு 7 நாட்கள் வனவாழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதில் வனவாழ் பயிற்சி, மனித மற்றும் விலங்குள் மோதல்களை தவிர்ப்பது, மலையேற்றம், ஆற்றைக் கடக்கும் பயிற்சி மற்றும் வனத்தேடுதல் போன்ற பயிற்சிகள் அடர்ந்த வனப் பகுதியில் அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சி மாணவர்களை டிஜி.பி. சைலேந்திர பாபு நேரில் சந்தித்து பயிற்சி குறித்து கலந்துரையாடியும், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த பயிற்சி தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் முதல் முறையாக அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அவர்களது பணிக்காலத்தில் கடிமான சூழ்நிலையை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், காவல்துறைக்கும், வனத்துறைக்கு இடையே உள்ள நல்லுறவை மேலும் மேம்படுத்தும் எனவும் அவர்கள் சிறப்பாக பணியாற்ற தமிழ்நாடு காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி டி.ஜி.பி. சைலேந்திர பாபு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவர் டாக்டர்.முருகன், போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். சசிமோகன் மற்றும் இந்திரா காந்தி தேசிய வன உயர் பயிற்சி கூடத்தின் பேராசிரியர் டாக்டர்.ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×