என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரத்துண்டுகள் மற்றும் நாட்டு துப்பாக்கியை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரத்துண்டுகள் மற்றும் நாட்டு துப்பாக்கியை படத்தில் காணலாம்.

    வீட்டில் பதுக்கிய சந்தன கட்டை- துப்பாக்கி பறிமுதல்

    தாளவாடி நகர் பகுதியில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தாளவாடி:

    தாளவாடி நகர் பகுதியில்  சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி  வனச் சரகத்துக்கு உட்பட்ட தாள வாடி நகர் பகுதியில்  சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்தி ருப்பதாக தாளவாடி வனச்சரகர் சதீஷிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறையினர் தாளவாடி பகுதியில் ஆய்வு செய்து சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டில்  சோதனை செய்த போது அங்கு 35 கிலோ சந்தன மரத்துண்டுகள், நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி மருந்து, கோடாரி ஆகிய வை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி னர். இதில் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைத்தது சபியுல்லா, காசிம் ஷரிப் என தெரிய வந்தது. அவர்கள் வனத்துறையினர் வருவதை அறிந்து அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.

    தலைமறைவாக உள்ள சபியுல்லா, காசிம் ஷரிப், ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டது. வனத்துறையினர் அவர் களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் சந்தன மரத் துண்டுகள் எந்த பகுதிக்கு கடத்தப்படுகிறது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின் றனர்.
    Next Story
    ×