என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கஞ்சா விற்ற 2 பேர் கைது

    டி.என்.பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே பங்களாப் புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் கொங்கர் பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த பிரவீன் குமார் (22) என்பது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் பவானி அடுத்த காடப்பநல்லூர் கோவில்பாளையம் காவிரி ஆற்று ஓரம் கஞ்சா விற்பனை நடப்பதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பாபு, சரவணன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் பால குருநாதன் (59) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பாலகுருநாதனை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×