என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது

    கோபிசெட்டிபாளையம் அருகே கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது  செய்யப்பட்டனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் மில்மேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி சபரிவாசன் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் இண்டியம் பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன், அரசூர் பகுதியை சேர்ந்த பிரபா கரன் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராவல் மண் கடத்திய 2 லாரி களையும் கிராம நிர்வாக அதிகாரி பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாசில் தாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்திரன், பிரபா கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் லாரி உரிமை யாளர்கள் இண்டியம் பாளையத்தை சேர்ந்த ராமசாமி மற்றும் அரசூர் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட் டனர். அவர்களை போலீ சார் வலைவீசி தேடி வரு கிறார்கள்.
    Next Story
    ×