என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி நடந்த போது எடுத்தப்படம்.
    X
    தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி நடந்த போது எடுத்தப்படம்.

    தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி மீண்டும் தொடக்கம்

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி மீண்டும் தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி மீண்டும் தொடங்கியது.

    ஈரோடு மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்க்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய, நவீன வசதிகளுடன் கூடிய கருத்தடை மையம் சோலாரில் அமைக்கப்பட்டு உள்ளது. நாய் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர், மாநகராட்சியில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து ஆபரேசன் செய்து அங்கே விட்டனர். 

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அப்பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு சுதா மருத்துவமனை செய்துள்ளது.சோலாரில் அமைந்துள்ள மையத்தில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் நிகழ்ச்சியை மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் ஈரோடை அமைப்பு தலைவர் டாக்டர் சுதாகர்  கூறுகையில்,

    ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஆங்காங்கே சுற்றித்திரியும் ஆண் மற்றும் பெண்  நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யப் படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சில மாதங்களாக அவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 
    கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக, நாய்களுக்குகுடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது. 

    நாய்களுக்கு எவ்வித தொந்தரவு ஏற்றபடாத வகையில், நாய்களை பிடிக்கும் அனுபவமிக்க குழு மூலம் நாய்கள் பிடிக்கப்படுகிறது. பிடிக்கப்படும் நாய்கள் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றப்பட்டு, சோலாரில் நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ள  மையத்தில் கருத்தடை செய்யப்படுகிறது. 

    தற்போது 2 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. இவற்றை மாநகாட்சிஅதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மாதந்தோறும் 100 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துணை இணை இயக்குனர் பழனிவேல், துணை இயக்குனர் பிரிசில்லாமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×