என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கடலை விளைச்சலை பார்வையிட்ட வேளாண்மை துறையினர்.
    X
    நிலக்கடலை விளைச்சலை பார்வையிட்ட வேளாண்மை துறையினர்.

    நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி

    அந்தியூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.
    ஈரோடு:


    அந்தியூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.

    தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி அந்தியூர் வட்டாரம் வேம்பத்தி கிராமம் தம்மநாயக்கனு£ரில் நடை பெற்றது.

    மோகன்குமார் என்பவரது வயலில் நடைபெற்ற இந்த போட்டியில் ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஆசைத்தம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், பவானி வேளாண்மை உதவி இயக்குநர் குமாரசாமி மற்றும் விவசாயி பவானந்தம் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் 50 சென்ட் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிரில் காய் களின் எடை கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் சராசரியாக ஒரு சதுர மீட்டரில் இருக்கும் பயிர் எண்ணிக்கை, ஒரு செடியில் உள்ள காய்களின் எண்ணிக்கை, காய்கள் மற்றும் பயிரின் எடை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து பயிர் சாகுபடி முறைகள், இடுபொருள் விவரங்கள், பூச்சி, நோய் விவரங்கள் உள்ளிட்டவற்றை நடுவர்கள் விவசாயிடம் கேட்டறிந்தனர். ஈரோடு மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், அத்தாணி துணை வேளாண்மை அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×