என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் குண்டம் இறங்கிய காட்சி
கரிய காளியம்மன் கோவில் குண்டம் விழா
அம்மாபேட்டையில் கரிய காளியம்மன், மாரிய ம்மன், ஓம்காளியம்மன், கிட்டம்பட்டி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
அம்மாபேட்டை:-
அம்மாபேட்டையில் கரிய காளியம்மன், மாரிய ம்மன், ஓம்காளியம்மன், கிட்டம்பட்டி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த மார்ச் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கிராம சாந்தி செய்தல், கம்பம் நடுதல், குண்டத்திற்கு பூங்கரும்பு கொண்டு வருதல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 15 நாட்களாக இரவு சாமிக்கு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. 28-ந் தேதி இரவு 8 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டத்திற்கு அக்னி மூட்டுதல் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை கரிய காளியம்மனுக்கு முப்போடு, படைக்களம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மாபேட்டை அருகே உள்ள பொங்கபாலி கரட்டுக்கு சென்று அம்மை அழைத்து வந்து குண்டம் இறங்கும் பக்தர்களுடன் ஊர்வலமாக வந்து கரிய காளியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவில் வரை அலகு குத்தி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை ஓம் காளி அம்மன் கோவிலுக்கு அம்மை அழைத்து வருதல் நிகழ்ச்சியும் அன்று இரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
Next Story






