என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

    டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது

    அம்மாபேட்டை அருகே டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது
    செய்யப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவ ரெட்டியூர் நீரேற்று பாசன சங்கத்தினர் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு ஆங்காங்கே நீரேற்று நிலையங்கள் அமைத்து வருகின்றனர். அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் அம்மா பேட்டை அருகே உள்ள படவல் கால்வாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் தோட்டத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக் கும் பணி நடந்து வரு கிறது.
    இதையொட்டி அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக செம்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்த சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செம்பு பட்டா கம்பிகள் காணவில்லை. இதை சிலர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து குருவ ரெட்டியூர் நீரேற்று பாசன சங்க செயலாளர் தினேஷ் சேகர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோனேரிப் பட்டி பிரிவில் சந்தேகப்படும் படி 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசா ரணை செய்தனர். இதில் அவர்கள் சித்தார் பகுதியை சேர்ந்த தமிழரசன் (26), கோபால் (23) மற்றும் ஒருவர் என்பதும், செம்பு பட்டா கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது.  

    இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×