என் மலர்tooltip icon

    ஈரோடு

    நம்பியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    நம்பியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் வெள்ளை கரடி பகுதியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 52).கூலித் தொழிலாளி.

    இவருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஆகும். அய்யாவு அவ்வப்போது  சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    அய்யா வுக்கு அடிக்கடி தலைசுற்றல் இருப்பதால் அதற்கு மாத்திரை எடுத்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று திருப்பூரிலிருந்து சொந்த ஊரான நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளை யத்திற்கு வந்திருந்தார்.

    அங்கு உள்ள கிணற்றின் சுவர் மேல் உட்கார்ந்து இருந்தவர் திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு  கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அய்யாவு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    சித்ரா பவுர்ணமியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமாக அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
    ஈரோடு:

    சித்ரா பவுர்ணமியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமாக அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அதி காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் இன்று காலை சிவனுக்குக்கு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பக்தர்கள் பலர் கலந்து கொண்ட னர்.

    இதையொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மனுக்கு  பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    கோவிலுக்கு இன்று அதி காலை முதலே ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வந்து அம்மனை வழிப்பட்டனர்.

    இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்ட மாக காணப்பட்டது.

    பவானி கூடுதுறையில் இன்று காலை பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாளை வழிபட்டனர். 

    மேலும் பவானி செல்லாண்டியம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை  பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். முன்ன தாக அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி வழிபட்டனர்.

    சென்னிமலை முருக னுக்கு இன்று காலை  சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.

    இதனால் கோவி லில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. முருக னுக்கு இன்று மாலை சந்தன அபிஷேகம் நடக்கிறது.

    கொடுமுடி புது மாரியம்மன், ஓங்காளியம்மன், கொளாநல்லி பூங்குழலியம்மன்,  பாம்பலங்கார சுவாமி, கொந்தளம் நாகேஸ்வரர், அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்க நாதர், கரிய காளியம்மன், நெரிஞ்சிபேட்டை காசி விஸ்வநாதர், ஒலகடம் உலகேஸ்வரர், பெருந்துறை சோலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
    கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி வேலூர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கணேசன் (18). 

    இவர் பழனியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார். அவரது மாமா ரவிச்சதந்திரன் மற்றும் அவரின் ஊரை சேர்ந்தவர்களுடன் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க வந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஊஞ்சலூர் காவிரி ஆற்றுப்படித் துறைக்கு தீர்த்தம் எடுக்க சென்றனர்.

    அப்போது காவிரி ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்ற கணேசன் தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    அருகில் அவருடன் வந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய கணேசனை மீட்டு கொடுமுடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

    அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின் கணேசனின் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர்.
    சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    சிவகிரி:

    சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சிவகிரியில் அமைந்துள்ள வேலாயுதசுவாமி கோவில் தேர் திருவிழாவானது ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும்.
    தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு வேலாயுதசாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, அதைத்தொடர்ந்து சாமி  திருவீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடந்த 13-ந் தேதி காலை 7 மணிக்கு சாமி திருவீதி உலா, காலை 9 மணிக்கு தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 5 வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    14-ந் தேதி காலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் முருகன், வள்ளி தெய்வானை யுடன் திருவீதி உலா நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணிக்கு சாமி திரு வீதி உலா, இரவு 7 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு வேலாயுதசாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. 

    அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடந்து நாளை  மாலை 6 மணிக்கு மீண்டும் தேர் இழுத்து வந்து தேர்நிலை சேர்த்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 18-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை நிகழ்வும், 19-ந் தேதி நடராஜர் மகாதரிசனம் நடைபெற உள்ளது.

    அன்று மாலை 4 மணிக்கு நடராஜர் தேர் வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இரவு 8 மணிக்கு புதுக்கோட்டை இளைய ராஜாவின் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறும்.

    20-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம், சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
    அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர்காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (26). இவர் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று இரவு தன்னை யாரோ அழைப்பதாக அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறி   கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றில் லோகநாதன் திடீரென குதித்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு  நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்புத் வீரர்கள்  கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது லோகநாதன் கிணற்றில் பிணமாக  கிடந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது.  

    தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  உடல் கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
    பெருந்துறை சப்-டிவிசனுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் சுமார் 75 பேர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை சப்-டிவிசனுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் சுமார் 75 பேர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் 33-வது சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்திற்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டிருந்தார்.

    அதைத் தொடர்ந்து பெருந்துறை சப் டிவிசனுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் சுமார் 75 பேர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் பெருந்துறை வெங்கமேடு பகுதியில் தொடங்கப்பட்டது.

    இந்த ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார். இந்த மாராத்தான் ஓட்டமானது வாய்க்கால் மேடு வழியாக சென்று கொங்கு பொறியியல் கல்லூரியில் முடிவடைந்தது.

    பின்னர் அங்கு நடைபெற்ற சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சாலை விழிப்புணர்வு பற்றி அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை டி.எஸ்.பி. கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மற்றும் சப்-இன்ஸ் பெக்டர்கள், போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ஈரோட்டில் மகன், தம்பி இறந்த துக்கம் தாங்காமல் லாட்ஜ் உதிமையாளர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மகன், தம்பி இறந்த  துக்கம் தாங்காமல் லாட்ஜ் உதிமையாளர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு இடையன் காட்டுவலசு செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது71). லாட்ஜ் உரிமையாளர்.

    இவரது லாட்ஜ் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ளது. தினமும் லாட்ஜிக்கு ஈஸ்வரன் வந்து செல்வது வழக்கம்.

    இதேபோல் நேற்று வழக்கம்போல் ஈஸ்வரன் தனது லாட்ஜிக்கு வந்தார்.

    பின்னர் லாட்ஜில் ஒரு அறைக்குள் சென்ற ஈஸ்வரன் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் ஈஸ்வரன் கதவை திறக்க-வில்லை.

    இதனால் ஊழியர்-கள் மாற்று சாவியை கொண்டு வந்து கதவை திறந்து பார்த்தனர்.

    அப்போது அறைக்குள் ஈஸ்வரன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரி-விக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசார ணையில் ஈஸ்வரனின் மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோல் ஈஸ்வரனின் தம்பி குணசேகரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாட்ஜில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு-சென்னிமலை இடையே இயக்கப்பட்டு வரும் 11-ம் நெம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    சென்னிமலை:

    ஈரோடு-சென்னிமலை இடையே இயக்கப்பட்டு வரும் 11-ம் நெம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஈரோடு-சென்னிமலை இடையே இயக்கப்பட்டு வரும் 11-ம் நெம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் ஈரோட்டில் இருந்து கடைசியாக இரவு 10 மணிக்கு மேல் சென்னி மலைக்கு வந்து சேரும்.

    பின்னர் அந்த பஸ் சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு நிறுத்தப் பட்டு மறுநாள் அதிகாலை 5:40 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஈரோட்டுக்கு செல்லுவது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னி மலைக்கு வந்த அந்த பஸ் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நிறுத்தப் பட்டு பஸ் டிரைவரும், கண்டக்டரும் ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் அதிகாலை சென்னிமலை பஸ் நிலையத்துக்கு பஸ்சை எடுத்துவர தயாரானார்கள்.

    அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் லோகநாதன் (50)என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்கி கொண்டே பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு பயணிகளை ஏற்றுவ தற்காக பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. நெஞ்சு வலி அதிகமானதால் கண்டக்டர் லோகநாதன்  மிகவும் சிரமப்பட்டார்.

    இதை கண்ட பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்தினார்கள். 

    தொடர்ந்து பஸ்சின் டிரைவர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் அந்த பஸ் சென்னிமலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் மதியத்திற்கு மேல் மாற்று கண்டக்டர் வந்த பின்பு பஸ் இயக்கப்பட்டது.
    ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை பாறைக்கு வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மன்னதம்பாளையம் காவிரி ஆற்றில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இங்கு சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து குழி தோண்டும் பணி மேற்கொண்டு வருகிறார். அவரிடம் மேட்டூர் பெரியசோரகையை சேர்ந்த அருள் என்பவரது மகன் குமார் (35), மாதையன் என்பவரது மகன் ரவி (26) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை 8.30 மணி அளவில் குமார், ரவி ஆகியோர் வழக்கம்போல் காவிரி ஆற்றில் கம்ப்ர‌ஷர் வாகனங்கள் மூலம் பாறைகளில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்கனவே பாறையில் பழைய குழியில் வைக்கப்பட்டிருந்த வெடிக்காத வெடி ஒன்று திடீரென்று வெடித்து விபத்தானது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த குமார் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ரவி பலத்த காயம் அடைந்தார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடி விபத்தில் பலியான குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தார். அப்போது காதல் கலப்பு திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் நீலாவதி இருவீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பெண் தனது காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அந்த பெண்ணை காதல் கணவருடன் அனுப்பி வைத்தார்.

    புதுமண தம்பதிகள் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது பெண்ணின் உறவினர்கள் அவரைக் காரில் கடத்திச் சென்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் புதுப்பெண் மீட்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என்றும் தனது விருப்பத்தின் பேரில்தான் அவர்களுடன் சென்றேன் எனவும், பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையே காதல் திருமணம் பெண் கடத்தப்பட்டது சம்பந்தமாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறியும் உயர் அதிகாரி ஒருவர் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் நீலாவதியை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த நீலாவதி நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென உயர்அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பினார்.

    பின்னர் சோலார் பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் நீலாவதி திடீரென கீழே மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நீலாவதி நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் பணிக்கு திரும்பாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நீலாவதி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் உயர் போலீஸ் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரால் நான் மனஉளைச்சலில் உள்ளேன். என்னை பற்றி உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் என்னை ஆயுதப்படைக்கு போக சொல்லிவிட்டு ஜீப்பை பறித்து கொண்டனர். இதனால் மனஅழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்வதாக கூறி விட்டு சென்றேன். மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர், டி.ஜி.பி.யை சந்தித்து புகார் தெரிவிப்பேன் என்றும் அதில் கூறி இருந்தார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

    இன்ஸ்பெக்டர் நீலாவதி ஒரு உயர் அதிகாரி மீதும், தனிப்பிரிவு ஏட்டு மீதும் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. விசாரணைக் குழுவினர் உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு, இன்ஸ்பெக்டர் நீலாவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவார்கள். விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்கொலை செய்வதாக கூறி சென்ற இன்ஸ்பெக்டர் நீலாவதி விடுமுறை குறித்து இதுவரை முறையான எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே உள்ள பூசாரியூர் வள்ளுவர் தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு கீதா (17) என்ற மகளும், விஷ்வா (14) என்ற மகனும் உள்ளனர்.

    கீதா வெள்ளிதிருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விஷ்வா 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி கீதா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். பெற்றோர் பள்ளிக்கு செல்ல கூறியதற்கு செல்போன் வாங்கி தந்தால்தான் பள்ளிக்கு செல்வேன் என்று மாணவி கீதா கூறினார்.

    இதையடுத்து ஜெயபிரகாஷ் தனது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இதையடுத்து கீதா 2 நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு பல முறை கீதாவை கண்டித்தனர். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் தோட்டத்துக்கு புறப்பட்டார். அப்போது தனது மகளை இன்று பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று கூறி விட்டு சென்றார். மீண்டும் அவர் தனது மனைவியுடன் இரவு 7 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த கட்டிலில் மாணவி கீதா மயக்க நிலையில் படுத்து கிடந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது தான் வீட்டில் இருந்த களை கொல்லி (வி‌ஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கீதாவை மீட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் தொடர்ந்து கீதாவுக்கு இருமல் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.

    இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு, 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார்.

    இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்வர். ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த விரதம் நிறைவு பெறும்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்ள தொடங்கினர்.  நேற்று புனித வியாழன் அனுசரிக்கப் பட்டது.

    இதை தொடர்ந்து இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.  ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

    இயேசு சிலுவை பாதை தியாகங்களை போற்றும் வகையில் 14 ஸ்தலங்களாக சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இந்த சிலுவை பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிர்தெழுந்த நாளான வரும் 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    ×