என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
நம்பியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
நம்பியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் வெள்ளை கரடி பகுதியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 52).கூலித் தொழிலாளி.
இவருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஆகும். அய்யாவு அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
அய்யா வுக்கு அடிக்கடி தலைசுற்றல் இருப்பதால் அதற்கு மாத்திரை எடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திருப்பூரிலிருந்து சொந்த ஊரான நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளை யத்திற்கு வந்திருந்தார்.
அங்கு உள்ள கிணற்றின் சுவர் மேல் உட்கார்ந்து இருந்தவர் திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அய்யாவு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






