என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சித்ரா பவுர்ணமியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமாக அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு:
சித்ரா பவுர்ணமியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமாக அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அதி காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் இன்று காலை சிவனுக்குக்கு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பக்தர்கள் பலர் கலந்து கொண்ட னர்.
இதையொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கோவிலுக்கு இன்று அதி காலை முதலே ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வந்து அம்மனை வழிப்பட்டனர்.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்ட மாக காணப்பட்டது.
பவானி கூடுதுறையில் இன்று காலை பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாளை வழிபட்டனர்.
மேலும் பவானி செல்லாண்டியம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். முன்ன தாக அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி வழிபட்டனர்.
சென்னிமலை முருக னுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
இதனால் கோவி லில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. முருக னுக்கு இன்று மாலை சந்தன அபிஷேகம் நடக்கிறது.
கொடுமுடி புது மாரியம்மன், ஓங்காளியம்மன், கொளாநல்லி பூங்குழலியம்மன், பாம்பலங்கார சுவாமி, கொந்தளம் நாகேஸ்வரர், அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்க நாதர், கரிய காளியம்மன், நெரிஞ்சிபேட்டை காசி விஸ்வநாதர், ஒலகடம் உலகேஸ்வரர், பெருந்துறை சோலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
Next Story






